2011 லில் வால்மார்ட் போனேன்.

பக்கத்துக்கு தியேட்டரில் புது லைன் கிங் ஓடுவதாக மகன் சொன்னான்.

புது படம் என்று நம்பி, கண் மூடிக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் பார்த்தேன்.

 

படம் அராம்பித்த சில நொடிகளில் புரிந்து விட்டது.

லைன் கிங் 3D என்பது அதே 1994 வெளிவந்த அதே பழைய லைன் கிங் in 3D என்று.

லைன் கிங் ரசிக்கும் என் மகனுக்கு இந்த படமும் மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு பிடிக்கவில்லை. சிம்பிள்.

 

லிங்கா ஒரு பழைய கான்செப்ட் மொக்கை படம்.

படத்தில் வருவது சிங்கமே என்றாலும் அது ஒரு வயதான சிங்கம். இளம் மேக்கப் போட்டு நடித்தது. பிடிக்கவில்லை.

பெரும்பாலோருக்கு பிடிக்கவில்லை. படம் தோல்வி. அவ்வளவுதான்.

 

இது ஒரு விமர்சனம் மட்டுமே.

இதை  மனதளவில் தாங்காத ரசிகர்களுக்கு தான் இந்த 6 பகுதிகளுமே ஒழிய இது ரஜினியை திட்ட அல்ல.

யாரும் பொதுவில் வந்து ரஜினிக்கு வக்காலத்து வாங்கி வீர தீர வேலைகளில் ஈடுபடவேண்டாம்.

 

மற்றபடி, அரசியல் அப்பாற்பட்ட ரஜினியின் வாழ்க்கை ஒரு புத்தகம்.

ஒரு நடத்துனராக இருந்து முன்னேறிய மனிதனை ஒரு சிறுமையான வட்டத்தில் சிறுமை படுத்தி, தனி மனித அர்சனைகளில் ஈடுபடவதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கு பிறந்தோம் என்பதை விட, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்.

நானே இன்று பிழைப்புக்கு ஊர் விட்டு ஊர் வந்தவன். என் பையனும் பெங்களூரில் தான் பிறந்தான்.

கனடா,அமெரிக்காவில் தமிழனுக்கு குழந்தை பிறக்கிறது. டாலரில் சம்பாதிக்கிறோம்.

ரூபாயில் வீட்டுக்கு பணம் அனுப்புகிறோம்.

யார் எங்கு சம்பாதித்தால் நமக்கு என்ன? எப்படி செலவு செஞ்சா நமக்கு என்ன?

அவர் அரசியலுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?

ஊரில் நாலு பேர் நம்புவான், அவர் செத்தா 40 பேர் சாவான்.

 

ஏதோ படத்த பார்த்தோமா… பிடிக்கலையா கலாய்ச்சோமா என்று போக வேண்டும்.

நாம என்ன லத்திகாவை காசு கொடுத்தா தியேட்டரில் பார்த்துவிட்டு வந்தா அவரை கலாய்சோம்?

இல்ல இளையராஜா பாட்டை காசு கொடுத்து டவுன்லோட் செஞ்ச ஆளா?

 

Here…நோ கடுப்பு பீலிங்க்ஸ்….

 

லிங்கா ஒரு படம். பொழுது போக்கு படம் மட்டுமே.

எனக்கு ரஜினியும் உழைப்பும், கமிலின் நடிப்பும், விஜயின் நடனமும் , சூர்யாவின் சமூக தொண்டும், அஜித்தின் தன் நம்பிக்கையும் பிடிக்கும்.

டிஸ்கோ சாந்தியும் ஒரு மாபெரும் சமூக சேவகிதான். விவேக்கும் மரம் நட்டவர்தான்.

எல்லா நல்லா பண்புகளும் ஒருவரிடம் இருக்க அவர்கள் ஒன்னும் கடவுள் இல்லை. மனிதர்களே. சாதித்த மனிதர்கள். Period .

 

எனக்கே தமிழ் சரியா எழுத தெரியாமல் இப்ப தான் ரெண்டு மனுசங்ககிட்ட கத்துக்கிட்டு ஏதோ நினைச்சதை இங்க வந்து எழுதுறேன். Facebook என்பது ஒரு ஊடகம். இங்கு வந்து நான் சாதிப்பது எதுவும் இல்லை.

சன்னிவேல் எட்வர்ட் Zuckerberg கின் மகன், மார்க் Zuckerberg கின் Facebook லைக் என்பது , சுதந்திர போராட்ட வீரர் புனேவின் பஜன்லால் சேட்டுவின் மகன், ராகுல் பஜாஜின் அறிய கண்டுபிடிப்பான பஜாஜ் chatak பைக் போன்றது.

அதாவது, Facebook Like என்பது பழைய பஜாஜ் பைக் போன்றது.

ஒரு காலத்தில் அதற்கு மதிப்பு இருந்தது.

 

இன்னிக்கி நூறு லைக், ஆயிரம் லைக் என்பது பஜாஜ் பைக் போன்று உபயோகம் இல்லாதது. மூலையில் museum தில் நிறுத்தி வேண்டுமானால் அழகு பார்க்கலாம் .

சத்தியமா அது தம்படி காசுக்கு பிரோஜனம் இல்லாத ஒரு item .

 

ஆயிரம் லைக் வாங்கியன் அற்புத விளக்கை தடவினா பூதம் வரும் என்பது ஒரு FaceBook மாயை.

தத்துவம் சொன்னவன் எல்லாம் அறிவாளியும் இல்லை, அதுக்கு லைக் போட்டவன் எல்லாம் முட்டாளும் இல்லை.

எனக்கு கூட முகம் தெரியாத ஒரு greece நாட்டு அழகி நான் எடுத்த எல்லா படங்களுக்கு தவறாமல் வந்து ” மச்சான் …நீ எடுத்த இந்த புகைப்படம் சூப்பர்னு லைக் இன்னிக்கும் போடுது ( உடனே போய் அந்த அம்மணியை துரத்தாதீங்க )

நீங்க எப்படி யாருக்கோ Fan னோ, அந்தம்மா எனக்கு Fan.

 

என் wife கேட்டாங்க யாருங்க அது ….greece நாட்டு அழகி , உங்க எல்லா புகை படத்துக்கும் வந்து லைக் போடுதுன்னு…?

நான் சொன்னேன்,” நான் ஒரு திறந்த புத்தகம் ….நான் ஒரு நடமாடும் பல்கலை கழகம்….

பொது வாழ்க்கைன்னு வந்துட்டா ரெண்டு பேர் லைக் போடுவாங்க …நாலு பேர் கமெண்ட் பண்ணுவாங்க ..

முன்னாடி சிரிச்சிட்டு வீட்டுக்கு போய் இவன் இதை எழுத என்ன பெரிய Hair…ரா… சாரி… ஹாரிஸ் ஜெயராஜா என்று கேட்பாங்க.

ஏன் லைக் போட்டாங்க ….எடுத்துக்கு லைக் போடலன்னு PHD research எல்லாம் செஞ்சா பையித்தியம் தான் பிடிக்கும்.

 

லைக் போட்டா அலெர்ட் வரும், திறந்து பார்ப்பேன். வரலைனா மூடிட்டு படுத்து தூங்குவேன்…நான் போனை சொன்னேன்.

 

ஏதோ ஜாலியா வந்தோமா, நாலு வார்த்தை அடிச்சோமானு, கொஞ்சம் படிசோம்மானு போகணும்.

இது என்ன முழு நேர தொழிலா? நான் செய்யும் 10 வேலைகளில் இதுவும் ஒன்னு .

 

தன்னை குருஜினு, நாலு மொக்கை status போட்டு ஸ்ரீ டர் டர்னு நாலு வரி போடுபவன் எல்லாம், தன்னை எழுத்தாளன்னு போட்டுகிட்டா ” செத்துப்போன சுஜாதா எல்லாம் யாரு? ”

அவரை என்ன ரோட் டிலா பெத்து போட்டுட்டு எழுத்தாளர்னு சொல்லிட்டு போனாங்க? ”

என்னை மாதிரி தமிழ் சரியா தெரியாம, இலக்கணமும் புரியாம எதுகை மோனையா ரெண்டு வரியை தப்பு தப்பாய் எழுதிட்டு கவிதைன்னு போடுற கொடுமையை பார்க்காமல் இருக்கதான் மவராசன் கண்ணதாசன் சின்ன வயதிலேயே குடிச்சிட்டு செத்தாரு.

அவரா சாகலை. அது தற்கொலைன்னு என் எழுத்தை வைத்து என்னால நிரூபிக்க முடியும்.

 

அனிருத் போடும் பாடல் சூப்பர்னு ஒருத்தர் சொன்னா, அதை இளையராஜா உயிரோட இருந்து கேட்கனும்னு என்பது அவர் பையன் கும்பிடும் அல்லா அவருக்கு கொடுத்த விதி.

கிருஸ்துவனாக பிறந்து மூகாம்பிகையை அவர் பேஸ் வாய்சில் பாடுவதை , கேட்டுவிட்டு மெக்காவுக்கு பஸ்சில் புனித யாத்திரை புறப்பட்ட தமிழ் மண்ணில் பிறந்து,

இந்தியா என்னும் சர்வ சமய நாட்டில் வாழ்ந்துவிட்டு இவர் கன்னடன், இவர் தெலுங்கன், இவர் மலேசியா, இவர் இலங்கை என்றும் ஐயர், முதலியார், முனீஸ்வரன் என்றும் இவன் முஸ்லிம், இவன் அமெரிக்கன் என்று பேசுபவன் பேசாமல் மார்ஸ் சென்றுவிடவும் .

 

சொல்லவந்த கருத்தை விட்டுவிட்டு வேறு ஒரு டாபிக் question கேட்கும் ஒரு சிறிய வட்டத்துக்குள் பேசுவது PS வீரப்பா காலத்து பழைய டெக்னிக்.

 

ஜாலியா பேசும் ஒரு போஸ்டில் சீரியஸா வந்து ஜாங்கிரி சுடுவது,

சீரியஸா செத்துட்டானு தகவலுக்கு போடும் status க்கு லைக் போடுறது,

விமர்சன போஸ்டில் வந்து வியாக்கியானம் பேசுவது,

நீ லைக் போட்டாதான் நான் போடுவேன்னு பீலா உடுவது,

போஸ்டே படிக்கமா லைக் போடுவது,

மனசுக்கு புடிச்ச போஸ்டுக்கு லைக் போடமா போறது,

ப்ரீயா கிடைக்கிற லைக்க உங்க அப்பன் வீட்டு சொத்துன்னு நினைக்கிறதுனு என ஏகப்பட்ட காதலர்கள் இந்த ஒரு அரை கிறுக்கன் லைக் பட்டனுக்கு.

இஷ்டம் இருந்தா வாங்க. எவ்வளவு public க்கா இருக்கணும்னு நினைகிறீங்களோ…..அவ்வளவு public க்கா இருங்க. உங்க இஷ்டம். உங்க சுதந்திரம்.

முடிஞ்சா படிங்க. பிடிக்கிலையா படிக்காதீங்க.

 

Unfreind, Block, Privacy settings, Group, Filter, Message என்று பலதை கொடுத்த பரதேசி ஒரு unlike button கொடுக்காம விட்டதால் வந்த வினை இது.

21 ஆவது நூற்றாண்டில் போட்டி, பொறமை, பகமை, பகட்டு என்று நண்பர்கள் இடையே ஏற்படுத்தியது பணம் இல்லை. இந்த வீணாக போன லைக் பட்டன் தான்.

 

நான் இந்த லைக் நம்பி face புக்கில் எழுத வரல. லைக் பட்டன் இல்லாத வெப்சைட் டில் பத்து வருஷம் பாத்திரம் தேச்சிட்டு இங்க டிஷ் வாஷ் பண்ண வந்த வேலைக்காரன் நான்.

 

என் பொண்டாட்டியை நான் லைக் செய்யிறேன்.

என் புள்ளை என்னை  லைக் செய்றான்.

நம்ம அப்பா அம்மாவை எல்லாரும் லைக் செய்வோம்.

அந்த லைக் தான் முக்கியம்.

 

ரஜினி ஒரு Lion என்பதும், அவர் King- தலைவா என்று கதறுவதும் ஒரு படமே ஒழிய நிஜம் இல்லை.

அவர் ஒரு சிறந்த நடிகர். அவ்வளவுதான்.

 

 

முற்றும்