தலைவன் என்று ஒருவர் ஆன பின்பு, தலைவன் எது செய்தாலும், எது சொன்னாலும் அதுவே வேதவாக்கு சிலருக்கு.

 

அவர் நடந்தால், பேசினால், சிரித்தால்…எல்லாம் பிடிக்கும்.

தலைவனை எதிர்த்து யார் எது சொன்னாலும் அவர்களுக்கு சடாரென்று கோவம் வரும்.

திட்டுவார்கள், வாதம் செய்வார்கள், சில சமயங்களில் அடி கூட விழும்.

இதற்கு நான் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

 

மோசம் என்றாலும் இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.

 

His name is Jim ஜோன்ஸ், An American …

James Warren “Jim” Jones இது தான் இவர் முழு பெயர். 1931 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். சிறந்த படிப்பாளி. ஏகப்பட்ட புத்தகங்களை படித்த மேதை.

கடவுளின் கோவில் (Peoples Temple) என்று ஒரு அமைப்பை 1955 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

1970 லில் SFO வில் அதன் தலைமையகம் கட்டினார். இவருக்கு டார்கெட் African American மக்கள்.

இவர் சிந்தனை மற்றும் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இவரை முதலில் ரசித்தார்கள். கிளைகள் வேகமாக பரவியது. மொத்தம் 12 கிளைகள் .

பின்பு இவரை ஒரு பெரிய கூட்டம் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். இவர் பேசும் subject – liberation theology .

உலகின் விடுதலை வேட்கை. சொல்லவா வேண்டும் ….கேட்கவே இன்றும் திரில்லிங் subject .

 

முதலில் இவரை வெறும் 100 பேர் நம்பினார்கள். பின்பு அது ஆயிரம் ஆனது. பின்பு லட்சம் தொட்டது. லட்சம் தொட்டவுடன் இவர் பேசுவதை ரசிப்பதை விட்டுவிட்டு சில பேர் இவரை தலைவா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அவர் தரிசினம் கிடைக்க தவம் கிடந்தார்கள். இவர் பிரபலம் ஆகா ஆகா இவருக்கு அரசியல் ஆட்சியை பிடிக்க ஆசை வந்தது. இருந்தாலும் கொஞ்சம் பயம்.

பிரசங்க கூடத்திற்கு வருபவன் எல்லாம் ஓட்டு போடுபவனா என்று. தன் ரூட்டை மாத்தினார்.

வழக்கம் போல் இவரும், அரசியலில் இறங்க முடிவு எடுப்பதை போல் சில வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சம் பிரசங்கத்தில் பேசுவார். ரசிகர்கள் கொந்தளிப்பார்கள்.

அவரை நீங்கள் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று அறைகூவல் விட்டார்கள்.

அமெரிக்காவில் ஒரு அரசியல் மாற்றத்தின் விடி வெள்ளி என்று கூட சிலர் நம்பினார்கள்.

பின்பு Jonestown எனும் இடத்தில ஒரு ரசிகர் மன்றம் கட்டினார். அதாவது கோவில். அதன் பெயர் மக்கள் கோயில் – The Peoples Temple.

கூட்டம் அலைமோதியதும் அவர் பின்னால் மக்கள் வர அவர் உபோயோகித்த வார்த்தைகள் வரலாற்று சிறப்பு மிக்கவை.

 

நான் ஒரு மாற்றத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வர இருக்கிறேன்.

என்னை நம்பாமல் போனால், கடவுள் வந்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்பதே அது.

அரசியல் வாதிகள் பயந்து இவர் ஒரு பெரும் சக்தி என்று நம்பி, இங்கு என்னதான் நடக்கிறது என்று கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

Recruiting, faith healings, and fund ரைசிங். இந்த மூன்று தான் மறைமுகமாக நடந்தது. கூட்டத்தை வைத்து நன்றாக துட்டு பார்த்தார்.

 

இந்த வார்த்தைகள் ஒரு அரசியல் புயலை கிளப்ப Congressmen Leo ரயன் என்பவர் இங்கு என்ன தான் நடக்கின்றது என்று போய் பார்த்தார்.

சுமார் ஆயிரம் பேர் குழந்தை குட்டிகளோடு அந்த மன்றத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி வரை அவரை நம்பிய கூட்டம்.

 

Jim ஜோன்ஸ் சொல்வதே வேத வாக்கு அவர்களுக்கு. அவர் ஒவ்வொரு அசைவையும், பேச்சையும் ரசிக்கும் கூட்டம் அது.

ஒரு நாள் திடீரென்று , கடைசியில் இந்த உலக துன்பத்தில் இருந்து விடு பட எல்லோரும் செத்து விடலாம் என்றார்.

அவர் கட்டளைக்கு அடிபணிந்து சுமார் 1000 பேர் ஒரே நாளில் cyanide அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். இதில் குழந்தைகளும் அடக்கம்.

 

வரலாற்றின் மிக பெரிய முதல் தற்கொலை அதுவே. மொத்தம் 918 பேர் காலி.

நாயகன் என்று ஒரு கான்செப்ட் பற்றி சமூகவியலாளர்கள் படிக்க எடுத்துக்கொள்ளும் முதல் சுப்ஜெக்ட் இந்த மனிதன் நடத்திய இந்த கூத்துக்கு தான்.

 

இப்படி Branch Davidians என்று ஒரு கூட்டம் இருந்தது. கண் மூடிக்கொண்டு தரிசித்தார்கள். இதுவாவது பரவாயில்லை…Heaven’s கேட் என்ற அமைப்பை நடத்திய Marshall Applewhite என்ற ஒரு முட்டாள், UFO வந்து நம்மை அழிக்க போகிறது.

அதனால் நாம் எல்லோரும் இந்த உலகை விட்டு வெளியேற ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்றார். வீடியோ எல்லாம் ரெடி செய்த பின்பு, வாங்க சாகலாம் என்று 38 பேருக்கு சொன்னார். அவர் சொன்ன படியே செத்தார்கள்.

இதைபோல் ஜப்பானில் Aum சின்ரிக்யோ, Children of God என்ற ஏராளமான அமைப்புக்கள் லட்சோப லட்சம் மக்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியவை.

மேல் குறிப்பிட்ட அமைப்புக்கள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளில் மிக பிரபலம். இதில் நம்மூர் ஓஷோவும் அடக்கம்.

எதற்கு சொல்கிறேன் என்றால், இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் யாரும் நம்பலாம்.

 

ஹிட்லர், முசோலினி, லெனின், ஓஷோ, காந்தி, Pope பிரான்சிஸ், Warren Buffett போன்றவர்கள் இவ்வுலகில் நம்பிக்கையை ஏற்படுத்திய சிலர். நல்லதோ கெட்டதோ இவரை நம்பியவர்கள் ஏராளம். நம்புவோர்கள் ஏராளம்.

உலகில் வசீகர பேச்சு, வசீகர நோக்கம், வசீகர அறிவு, வசீகர கண்டுபிடிப்பு, வசீகர சித்தாந்தம், வசீகிற சிந்தனை, வசீகிற திறமை, வசீகிற எழுத்து, வசீகிற நடை, உடை, அழகு என்று ஏகப்பட்ட வகைகளில் இன்னொருவரின் மனதில் இடம் பிடிப்பவர்கள் ஏராளம்.

அப்படிப்பட்ட வசீகர நபர்கள் சிலர் தன் மீது உள்ள நம்பிக்கையை காந்தி போல் நல் வழியிலும், சிலர் ஹிட்லர் போல் தீய வழியிலும், சிலர் Jim ஜோன்ஸ் போல தன் நலனுக்கு மட்டும் உபயோகித்து விட்டு அமைதியாய் இறந்தவர்கள் என்று இதில் பல ரகம் உண்டு.

 

ஒரு நடிகனை நடிகனாய் ரசிப்பதோடு நின்றுவிட்டால் அது ரசனையோடு நின்றுவிடும்.

அதையும் தாண்டி அவரை மானசீகமாக நேசிப்பதால் நிஜ உலகில் இருந்து அவர்கள் தனியே பிரிந்து போய் விடிகிறார்கள்.

கட் அவுட்டுக்கு பால் ஊத்தி, வாயில் அலகு குத்தி, மாலை இட்டு கும்பிட்டு, கடைசியில் படம் வர தாமதித்தால் பாலிடால் குடித்தும் சாகிறார்கள்.

 

இது ஒரு மன நோய். சிலருக்கு கொஞ்சம் இருக்கும். சிலருக்கு முத்திவிடும்.

 

இப்படி நடிகனுக்காக, அரசியல்வாத்திக்காக உயிர் விட்டவர்கள் தமிழ் நாட்டில் ஏராளம்.

இனியும் இது நடக்கும். காரணம் இவர்களின் நம்பிக்கை, விசுவாசம், மன அழுத்தம்.

 

எம்ஜியாராய் ரொம்ப புடிச்ச தாமரைகனி கூட தான் தன் விசுவாசத்தை காட்ட நெஞ்சில் பச்சை தான் குத்தினார்.

நயன்தாராவும், பிரபு தேவாகிட்ட தன் விசுவாசத்தை காட்ட கையில் பச்சை குத்தினாங்க.

 

ஆனா எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு முத்தம் கொடுத்துட்டு செத்துட்டார்.

நிஜத்தில் நயன்தாரா இன்னொரு முத்தம் கொடுக்க இன்னும் கன்னியாவே சுத்திட்டு இருக்காங்க.

 

தாமரைகனி குத்தின பச்சையோட, சாகும் முன் DMK வில் சேர்ந்து கருப்பும் செவப்புமா அலைஞ்சாரு.

நயன்தாரா குத்தின பச்சையை அழிச்சிட்டு இப்ப வாழும் போது சிவப்பும் சாமந்தியுமா அலையுறாங்க.

 

ரெண்டு பேரும் பச்சையில் ஆரம்பித்தாலும் வேறு வேறு நிறத்தில் இறந்து போவார்கள்.

வெறும் பொழுது போக்கு படங்களுக்கு தங்கள் விசுவாசத்தை வெறியுடன் காட்டுவதன் மூலம் சாதிப்பது ஒன்று தான்.

 

நான் ஒரு தீவிர ரசிகன் என்று உலகம் போற்றவேண்டும். நான் ஒரு தீவிர விசுவாசி என்று உலகம் என் கல்லறையில் எழுதவேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் யார் சொல்வதையும் நம்ப மாட்டேன். என் உயிர் என் தலைவன் தான்.

 

நம்ப மாட்டேன்…நம்ப மாட்டேன்….அவரே என் கடவுள்.

 

இப்படி,

MGR இறந்த போது 30 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

NTR, இறந்த போது 60 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்திரா காந்தி இறந்த போது 81 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் 3000 சீக்கியர்களை வெறி கொண்டு அடித்து கொன்றார்கள்.

 

இவர்கள் இறந்த தலைவர் மீது இருந்த நம்பிக்கையையும், விசுவாசத்தையும் உலகிற்கு தானும் இறந்து காட்டியவர்கள்.

Latest : 10 die of cardiac arrest, 6 commit suicide after Jaya verdict.

 

இன்று கட் அவுட் வைப்பன், காவடி தூக்குபவன், பால் ஊற்றுபவன் மேல் சொன்ன லிஸ்டில் வருபவன்.

இதில் எவனோ ஒருவன் தலைவர் சாகும் போது கண்டிப்பாக சாவான்.

 

 

தலைவனை பற்றி குறை சொல்வதை ஏற்க மறுக்கிறார்கள். அவர் நடித்த படத்தை பற்றி குறை சொல்வதையும் சிலர் ஏற்க மறுக்கிறார்கள்

சொல்லுவதை நம்புவது என்பதில் வேறு கோணம் ஒன்று உண்டு.

ஹிட்லர் கெட்டவன் என்று சொல்ல இரண்டாம் உலக போரில், நம் தாத்தா சண்டை போட்டு செத்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
காந்தி நல்லவர் என்று சொல்ல, என் பாட்டி தண்டியில் அவருடன் உப்பு காய்ச்சி இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
நாதுராம் கோட்சே கெட்டவன் என்று டில்லி போய் 30 January 1948 ஆம் ஆண்டு நேரில் பார்த்தா நம்பினோம்..

ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு நான் போனேன்னு சொன்னார். இல்லைன்னு ஒரு குரூப் இன்னும் குரூப் discussion செய்யுது.
கடைசியில் அதுக்கு அவர், நான் போன போது ஒரு ஆணியை நிலவில் விட்டுட்டு வந்துட்டேன், நீங்க நம்பலைனா வேணா போய் புடிங்கிட்டு வாங்க என்றார்.

 

இப்படி பிறர் சொல்வதை நம்புவோம். வெறும் ஒரு படம் சரியில்லை என்றால் மனம் நம்ப மறுக்கிறது.

நான் பிறந்ததை ஒரு நர்ஸ் தான் வந்து எங்க அப்பாகிட்ட சொன்னாங்க… உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கு சார் என்றார்.

என் அப்பா அதை நம்பினார். நானும் பிறந்ததை நம்பிவிட்டேன்.

 

நான் பிறந்ததை நானே பார்த்தால்தான் நம்புவேன் என்று எல்லா குழந்தைகளும் அடம் பிடித்தால் இந்த பூவுலகில் குழந்தைகள் பிறக்காது.

 

நம்பிக்கை தான் வாழ்க்கை.

லிங்கா மோசம் என்று பெரும்பாலோர் சொல்லவதை நம்பலாம்.

இது படம் பார்க்காமலே நன்றாக இருக்கும் என்று சிலர் நம்புவது போல.

 

பொது கருத்து கேட்கும் போது தனி கருத்தை சொல்வார்கள்.

தனி கருத்தை கேட்கும் போது பொது கருத்தை சொல்வார்கள்.

 

காந்தியை சுட்டபோது நேரில் பார்க்காதவர்கள், இன்னும் கோட்சே நல்லவன் என்று நினைப்பதில் தவறு இல்லை.
பாட்ஷா அருமை என்று பொது கருத்து சொல்லும் போது நம்பிய மனது, இன்று லிங்கா மோசம் என்று பொது கருத்து சொன்னால் நம்ப மறுக்கிறது.

 

காரணம், கடவுளாக வழிபடும் பல கோடி பக்தர்களை பெற்றது ரஜினியின் புண்ணியம்.

 

தொடரும்
Lion King – சிவாஜி ராவ் – Part 6 ( The End)

கதம் – கதம் — போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க