இது ஒரு அட்டகாசமான பேய் படம். கார் ஓட்டும் போது போன் பேச கூடாது. இது தான் படத்தின் ஒன் லைன்.

 

இந்த ஒத்த வரியை ஒரு பேய், ஒரு காதலன், ஒரு காதலி, தாய், தந்தை இரு நண்பர்களோடு மிஸ்கின் கலக்கி இருக்கிறார். இது இயக்குனர் பாலா நம்பி காசு போட்ட கதை.

 

படத்தின் கதையை நீங்கள் படம் பார்த்து ரசியுங்கள். சுருக்கமாக வள வள என்று நீட்டாமல் 114 நிமிடங்களில் முடிந்துவிடும். படத்தின் மிக பெரிய பலம் கதை. இசை இந்த படத்தில் அட்டகாசம். Arrol Corelli எனும் சின்ன பையன். கலக்கி விட்டார்.

படத்தில் கேமரா கோணங்கள் அபாரம். அடிப்பட்ட பெண் ஒரு பயம் கலந்த சிரிப்பில் சிரிப்பார். இது நூறு சீன்களில் சொல்ல வேண்டிய கதையை ஒரு சிரிப்பில் சொல்லி இருப்பார்.

 

அதே போல் அந்த பெண்ணின் முடி, ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லும் போது கீழே தொங்கி ஆடும். இதுவும் ஒரு classic shot . லிப்டின் மூலையில் காமெரா வைத்தது, கதவின் கீழ் கேமரா மேல் நோக்கி பார்ப்பது என ஓரே அசத்தல்.

Ravi ராய்யின் – Cinematography – பல கோணங்களை மீண்டும் மீண்டும் மனதில் நிற்க வைகின்றது. ராதா ரவி நடிப்பு மிகை இல்லாதது.

 

மூட நம்பிக்கையின் மீதும் ஒரு கொட்டு கொட்டி படத்தை பாதி நிஜம் என்று மறைமுகமாக நம்ப வைத்து விட்டார்.

லாஜிக் உள்ள திரைக்கதை மற்றும் நம்ப வைக்கும் பேய் படம். நிறைகள் மிக அதிகம்.

 

எனக்கு பிடித்தது: கதை
எனக்கு பிடிக்காது: ஹீரோவின் முடி

 

www.sridar.com Rating: 7.5