யார் யாருக்கு எதை எப்போது பிடிக்கும்?

1998: எனக்கு ஐஸ்வர்யா ராயை பிடிக்கும்.
2001: எங்கள் தோட்டத்தில் வேலை பார்த்த முருகனுக்கும் அவரை பிடித்தது.
2003 :சல்மான் கானுக்கும் அவரை பிடித்து இருந்தது.
2009: அபிஷேக் பச்சனும் இதையேதான் சொன்னார்.

நாலு பேருக்கும் இவரை வெவ்வேறு காரணத்துக்காக வெவேறு காலத்தில் பிடித்தது.
நான் அவரை 10 படம் வரைந்து விட்டு, ரசிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
முருகன் முடி வெட்டும் கடையில் பார்த்து விரும்பியவன்.
கல்யாணம் ஆனவுடன் நிறுத்திக்கொண்டான் .
சல்மான் கான் அவர் வீட்டு வாசலில் அடி வாங்கிவிட்டு நிறுத்திக் கொண்டார்.

அவரை நான் வரையும் போது பிடித்தது.
முருகனுக்கு முடிவெட்டிக்கொள்ளும் போது பிடித்து போனது.
சல்மான் கான் கூட நடிக்கும் போது விரும்பினார்.
எங்கள் எல்லோருக்கும் ஐஸ்வர்யா ராயை வெவ்வேறு காரணத்துக்காக பிடித்து இருந்தாலும்,
அபிஷேக் பச்சனை மட்டும்தான் அவரை திருமணம் செய்து கொண்டார்.

காரணம், ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனை மட்டும்தான் அவர் கல்யாண வயதில் பிடித்தது.
சல்மான் கானை பிடிக்கவில்லை.
முருகன், ஸ்ரீதர் என்று இரண்டு பேர் இருந்தது அவருக்கு இன்றுவரை தெரியவே தெரியாது.

ஸ்ரீதர் அவரை வரைந்தான்.
முருகன் போஸ்டர் ஒட்டினான்.
சல்மான் கான் கூட நடித்தான்.
அபிஷேக் பச்சன் மட்டும் தான் அவரை திருமணம் செய்து கொண்டார்.

பேஸ் லைன் ஒன்னுதான் ” ஐஸ்வர்யா அழகானவர் ”
அவரை நிறைய பேருக்கு பல காரணத்துக்காக பிடித்தது.

ரஜினியும் சூப்பர் ஸ்டார் தான். சூப்பர் ஸ்டைல், சூப்பர் நடிப்பு ஒரு காலத்தில்.
அவரை நிறைய பேருக்கு பல காரணத்துக்காக பிடித்தது.

இப்போது எனக்கு அனுஷ்காவை பிடிக்கிறது.
முருகனுக்கு திரிஷா.
சல்மான் இன்றும் யாருக்காகவோ காத்து இருக்கிறார்.

இந்த மூன்று பேரையும் ஐஸ்வர்யா ராயின் குழந்தை பார்த்து சிரிக்கிறது.

காலம் நகர்கிறது என்பது உண்மை.
ரஜினியின் ஸ்டைல் ஒரு காலத்தில் எல்லாருக்கும் பிடித்தது என்பது உண்மை.

வயதானபின்பும் அதே ஸ்டைல் இன்றும் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.
ரஜினிக்கு இது புரிகிறதா என்று தெரியவில்லை.

அவரின் பெரும்பாலான ரசிகர்கள் இன்று 30-40 வயதை தாண்டி விட்டார்கள்.
நாம் MGR ரசிகர்களை பார்ப்பது போல் இன்று சிவ கார்த்திகேயன் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை பார்கிறார்கள்.
காலமும் ரசனையும் மாறிவிட்டது.

நீதி ஒண்ணுதான் …..

பவர் ஸ்டார்ட், சூப்பர் ஸ்டார், ரைசிங் ஸ்டார், கவுந்த ஸ்டார் , நிமிந்த ஸ்டார் ,… மோடி தர்பார்னு இனி எத்தனை ஸ்டார் வந்தாலும் நீதி ஒன்னு தான்.

நடிகன் வந்து நின்றாலே படம் ஓடிய காலம் முடிந்து விட்டது. இட்ஸ் gone …போயே போச்சு ….

இப்போது கதை, டெக்னாலஜி, மற்றும் நடிப்புக்கும் மரியாதை கொடுக்கும் காலம்.

அதனால்தான் பாபி சிம்மாவின் வயதான வேஷம் போட்ட காமெடி வில்லன் படமான ஜிகிர் தண்டா ஓடியது.
அதே சமயம், வயதான ஹீரோவின் இளம் மேகப் போட்ட லிங்காவின் ஹீரோயிசம் தோற்றுப்போனது.

சிவகார்த்திகேயன் காலத்தில் சங்காரா என்றால் சிவகார்த்திகேயன்திரும்ப மாட்டார். சிவ சிவா என்று கூப்பிட்டால் தான் சிவகார்த்திகேயன் திரும்பி பார்ப்பார்.

முடியலையா, கவாஸ்கர் மாதிரி ஓராமா நின்னு கை தட்டலாம்.
இல்லை, களத்தில் இறங்கி, காலம் போல் வேடம் இட்டு அமிதாப் போல சிச்சர் அடிக்கலாம்.
இல்லை ஒரு நடிகனின் கதை என்று புத்தகம் கூட எழுதலாம்.

வயதுக்கு ஏற்ற ஒரு கதா பாத்திரம் போட்டு சக்கை அடி அடிக்க வேண்டிய நேரத்தில் இளமை இதோ இதோ என்பது காலத்தின் கொடுமை.

ஒரு மாட்சில் டெண்டுல்கர் century அடிக்கவில்லை என்றால் திட்டிய மனது, ஒரு படம் தோல்வியுற்றால் தோல்வி என்று ஒத்துக்கொள்ள மனம் வராமல் வாதிடுவது ஒரு வகை ஒரு மன பிராந்தி.
நீங்க குடிச்சிட்டு மயக்கம்மா இருந்தா அதை ஊரே குடிக்கனும் என்று சொல்வதும் ஒரு மயக்க நிலை.

சினிமா, Cricket, தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படி பல மனிதர்கள் இருக்கிறார்கள் .இவர்களிடம் வாதாடுவது கால விரயம்.
இது ஒரு குரூப். ரஜினியையும், கமலையும் compare செய்பவர்கள். ரகுமானையும், இளையராஜாவையும் compare செய்பவர்கள். அல்லாவா, ஏசுவா, கிருஷ்ணாவானு பத்து நாள் சண்டை போடுவாங்க.

இது Apple லா, ஆரஞ்சா, ஆண்டிராய்டா என்று technology compare செய்யும் காலத்தில் வந்து தலைவான்னு கத்தினா உன்னை தொட்டிலில் போட்டு தாலாட்ட இது ஒன்னும் 1990 இல்லை.

Brand Value என்று உள்ளது. அது Costco என்னும் ரஜினி போன்றது. யார் இல்லை என்று சொன்னார்கள் ?
அங்கு Entertainment wholesale லில் கிடைக்கும். ஒரு காலத்தில் கிடைத்ததும் உண்மை.

அதுக்காக, Costco வில் பழைய முத்துவை, படையப்பா கவரில் repack செய்து Dollar store மாதிரி சில்லறையா கொடுக்க கூடாது.

Linga ஒரு பழைய ஊசிப்போன உளுத்தம் பருப்பை repack செய்து அதிக விலையில் விற்ற ஒரு Costco ரஜினியின் Product.
தொடரும்,

யார் தலைவன்? ( பார்ட் 4)