Gillian Flynn எழுதிய நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் படம்.
ஒரு டிபிகல் அமெரிக்க கல்யாணம் – ரிபோர்டர் கணவன், எழுத்தாளர் மனைவி.
கொஞ்ச நாள் பழகிவிட்டு திருமணம் செய்தவுடன் ஒரு நாள் கலையில் பொண்ணு வீட்டை விட்டு ஓடி போய் விடுகின்றது.
புருஷன் டென்ஷன் ஆகி போலிசை கூப்பிட, வந்து பார்த்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இது கொலை என்று முடிவுக்கு வருகிறார்கள்.
அதற்கு உண்டான எல்லா தடயமும் கிடைக்கின்றது. கணவன்தான் அவளை கொன்றான் என்று எல்லாருமே நம்புகிறார்கள். அவன் தங்கையை தவிர.
கொலை என்று மீடியா செய்திகளை பரப்ப, எல்லோரும் அதை நம்பும் போது …ஒரு டிவிஸ்ட்.
வழக்கம் போல் கதையை சொல்லமாட்டேன்.
சைக்கோ, கள்ள காதல், திருமணம் முன் காதல், திருமணம் பின் காதல், ஆசை, வெறி, நம்பிக்கை , ஏமாற்றம் என்று கதையில் ஏகப்பட்ட வளைவு சுளிவுகள்.
புருஷனாக Ben Affleck, பொண்டாடியாக Rosamund Pike, நடித்து உள்ளார்கள். Adults ஒன்லி படம்.
ஆறு சசீன்கள் கசமுசா. Rated R for a scene of bloody violence, some strong sexual content, nudity, and language.
அமெரிக்கனுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். ஒரு முறை பார்க்கலாம்.
எனக்கு பிடித்தது: பட தொடக்கம்
பிடிக்காதது: படத்தின் முடிவு
டொரண்ட் இழு இழுவென்று இழுத்துக்கொண்டிருந்தது.கான்சல் செய்துவிட்டேன். அதிக சீடர்களைக் கொண்டது கிடைக்குமென நம்புகிறேன். டேவிட் ஃபிஞ்சரின் முந்தய சினிமாக்கள் எனக்குப் பிடிக்கும் (Seven (ஷங்கரின் அந்நியன் படம் ஞாபகத்திற்கு வரலாம்!), Zodaic, Curious Case of BB).