நான் படித்த காலேஜில் ஒரு ரஜினி கிறுக்கன் இருந்தான். அதை, அதிகம் வெளிய காமிக்க மாட்டான்.

ஆனா அவுனுக்கு அவரை ரொம்ப புடிக்கும்னு மட்டும் எனக்கு தெரியும். என் ரூம் தான் அவன்.

சுமாராதான் படிப்பான். மக்கு. எப்பவாவது ஏதாவது கிறுக்குவான்.

சுமார் 18 வருடங்கள் முன்பு ஒரு summer விடுமுறை சென்றுவிட்டு ரெண்டு ரஜினி படம் வரைஞ்சதா எடுத்துட்டு வந்து காட்டினான்.

ஓகே வா இருந்தது. இப்ப நான் வரைவதில் கால் தூசு கூட இல்லை. சுமார் என்று சொன்னேன்.

கண்ணாடியில் பார்த்தேன் ….

பின்னால் நின்ற அவன் முகம் கோவம் அடைந்தது. நம்மக்கு ஏது வம்பு, அவனுக்கு புடிச்சதை பத்தி தப்பா பேசினால் அவனுக்கு கோபம் வரும்.

நீங்கள் மேலே பார்க்கும் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின்  கார்ட்டூன்ங்களும் அவன் வரஞ்சதுதான்.

 

ஒரு வாரம் கழிச்சு ஓடி வந்தான். அந்த ரெண்டு படங்களும் பெங்களூர் டெக்கான் chronicle பத்திரிக்கையில் பப்ளிஷ் ஆகி உள்ளது என்று.

மொத்தம் 2 லட்சம் காப்பி வித்தாம். “அடுத்த தமிழகத்தின் முதல்வர் இவர்தானா ? ” என்பதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு .

 

அதுக்கு தான் இவன் மாணவனா அனுப்பிய படத்தை போட்டுட்டு 500 ருபாய் தரேன்னு சொல்லி இருங்காங்க.

அது தெரிஞ்சு அவன் , அவன் அன்னிக்கி போடாத ஆட்டம் இல்லை. அவன் மட்டும் தனியா நைட் போய் சிக்கன் சூப் குடிச்சு என்ஜாய் செஞ்சுட்டு வந்து தூங்கிட்டான்.

ரஜினியின் ஏதோ ஒரு படத்தை பார்த்து அவன் பயித்தியம் ஆனான் என்று கேள்வி பட்டேன். என்ன படம்னு சரியா ஞாபகம் இல்லை.

ஆனால் வெளியே சொல்லாமல் எப்படி அவர் ரசிகன் ஆனான் என்பது இன்றுவரை எனக்கு புரியலை.

 

சந்தோஷ படாம இருக்க முடியுமா என்ன? அது தான் அந்த கிறுக்கு பயலின் முதல் படம் ஒரு பத்திரிக்கையில் வந்தது.

இந்த இரண்டு படங்களுக்கு சேர்த்து 500 ரூபாயை money ஆர்டர்ரில் அனுப்புவதாக மெயில் வந்ததாக ஞாபகம்.

அந்த இதழில் நான் ரஜினி படம் வரைந்ததே எனக்கு பெரிய பாக்கியம், எனக்கு காசு வேண்டாம் என்று ஹோட்டாக ஹாட்மெயில் அனுபிட்டான் மடையன்.

 

அந்த மடையன் வேறு யாரும் இல்லை. நான் தான்.

 

நான் ரசித்து வரைந்த ரஜினியின் படம் தான் முதல் முறையா ஒரு பத்திரிக்கையில் வந்தது.

அதுக்கு அப்புறம் மொத்தம் 38 ரஜினி படம் வரஞ்சேன்.

அதுக்கு அப்புறம் மொத்தம் 168 நடிகர், நடிகைகளை வரஞ்சேன்.

ஆனா நான் ரொம்ப ரசிச்சு வரஞ்ச மூணு ஆளுங்க

1. ரஜினி 2. ஷாருக் கான் 3. ஐஸ்

என்ன இருந்தாலும் ரஜினி தான் அதில் தூள்.

 

நான் வரைந்த அந்த ஒரிஜினல் ரஜினி படங்கள் இன்றும் என் கோவை வீட்டில் உள்ளது.

எல்லா நடிகர் நடிகைகளின் படங்களையும் என் portfolio வில் வைத்த எனக்கு அவர் படத்தை இன்று வைக்க பிடிக்கவில்லை.
இந்தியாவில் இருந்து எடுத்து வரும் போது இந்த ரெண்டு படம் மட்டும் எடுத்துட்டு வந்தேன்.
அதை லிங்கா வந்த அன்று ஸ்கேன் செய்தேன்.
அந்த படத்தின் சாயம் கூட இன்னும் போகவில்லை.
நான் ரொம்ப மாறிட்டேன். அவரும் தான் மாறிட்டார்

ஒரு காலத்தில் எனக்கு ரஜினியை மிகவும் பிடித்தது.
இந்த ரஜினி ரசிகன் 17 வருடத்தில் மாறிவிட்டான்.

லிங்காவிருக்கு முன் வந்த 5 படங்களை நான் பார்க்கவில்லை.
ஒரு வரி கூட அவர் படங்களை பற்றி எழுதியதில்லை.
ஏனோ தோணவில்லை.

சொல்லப் போனால், லிங்கா தான் என் முதல் ரஜினி பட விமர்சனம்.

அவர் படங்களை பார்க்க தவிர்த்த காரணம்,

அவர் படத்துக்கு போனா, அவர் அரசியலில் பேசின வசனம் ஞாபகம் வருது.
அவர் அரசியல் பேசும் போது, படத்தில் பேசின வசனம் ஞாபகம் வருது.

அவர் நடிகரா இல்லை அரசியல் வாதியா என்ற குழப்பம் அவருக்கு மட்டும் இல்லை எனக்கும் தான்.

 

 

தொடரும்

Lion King – சிவாஜி ராவ் – யாருக்கு யாரை புடிக்கும் ( Part 3)