கோவையில் நான் வசிக்கும் போது என் வீட்டு வேலைக்கு ஒரு வேலைக்காரி வைத்து இருந்தேன். அவர் பெயர் பேபி.

சுமார் 50 வயசு அவுங்களுக்கு. நல்லவங்க.

அவங்க ஒரிஜினல் பெயர் தெரியவில்லை. சேரும் போது பேபின்னு சொன்னாங்க அதனால நாங்க அவுங்கள பேபின்னு தான் கூப்பிடுவோம்.
அவுங்க புருஷன் பக்கத்துக்கு ஓட்டலில் செக்யூரிட்டி வேலை பார்த்தார். நல்ல குடும்பம். அவர் தன் மனைவியை பேபிமானு பாசமாதான் கூப்பிடுவார்னு, பேபி சொல்லுச்சு.

அவுங்களுக்கு ஓரே ஒரு பேபி. அதுக்கு வயசு 18. பொட்டை புள்ள.
அதை நம்ம பேபி, பேபிம்மானுதான் ஆசையா கூப்பிடும்.
அவர் புருசனும் வீட்டில் பேபி இல்லாத போது தன் மகளை பேபிமானுதான் கூப்பிடுவாரு.
இதையும் என்கிட்டே பேபி தான் சொல்லுச்சு.

நல்லா போயிட்டு இருந்த குடும்பத்தில் ஒரு நாள் திடீர் திருப்பம்.
ஒரு நாள் கலையில் பேபி எங்க வீட்டுக்கு வேலைக்கு வரலை.
போன் செஞ்சா பேபி எடுக்கலை.
பேபி புருசனுக்கு போன் போட்டு, ஏன் பேபி வீடு வேலைக்கு வரலைன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் நொந்து சொன்னாரு, அவரோட 18 வயசு பேபிமா, தனுக்கு ஒரு தனி பேபி வேணும்னு ஒரு பையன் கூட இன்ப சுற்றுலா போயிடிசுன்னு.
அதனால தான் பேபி வேலைக்கு வரலைன்னு சொன்னாரு.

பேபி இல்லாம எங்க வீட்டில் வேலை எதுவும் நடக்காது.
வேலையில் இருந்த அவர்கிட்ட பேபி வூட்டு அட்ரஸ் வாங்கிட்டு பேபியை தேடி நான் பேபி வூட்டுக்கு போனேன்.
அங்க போய் பார்த்தா பேபி வூடு பூட்டி இருக்கு.
ஏன்னு பக்கத்துக்கு வீட்டு ஆளுகிட்ட கேட்டேன்.
அவர் அதுக்கு, பேபி தன்னோட பேபி பொண்ணை தேடி கலையிலே கிளம்பிருச்சு வேணும்னா உங்க போன் நம்பர் கொடுங்க, பேபி வந்தா சொல்றேன்னு சொன்னாரு.
என் நம்பர் கொடுத்துட்டு அவசரத்துக்கு அவர் நம்பர் கேட்டேன். கொடுத்தாரு.
அதை save செய்யும் போது அவர் பேர் கேட்டேன்.
அவர் பெயர் பாபினு சொன்னாரு.

அஞ்சு நாள் கழிச்சு பாபி போன் பண்ணி, சார் பேபி வீட்டுக்கு அவுங்க பொண்ணு பேபியோட வந்தாச்சு.
இதை விட சந்தோசம் எனக்கு.
காரணம், பொண்ணு பேபி அவுங்க புது புருசனோட பேபி வூட்டுக்கே வந்தாச்சுன்னு குட் நியூசை பாபி சொன்னாரு.

நான் பேபிக்கு போன் போட்டேன்.
பேபியோட, பேபி தான் போன் எடுத்துச்சு.
பேபிமா நாளையில் இருந்து வேலைக்கு வரும்னு பேபி பொண்ணு சொல்லுச்சு.
இதை சொன்னவுடன்தான் எனக்கு போன நிம்மதி மீண்டும் வந்துச்சு.
இது மட்டும் இல்லாம பேபி பொண்ணும் தன் அம்மாவை பாசமா பேபிமானு தான் சொல்லுதுன்னு தெரிஞ்சுது.

பொண்ணு பேபிக்கிட, அவுங்கம்மா பேபியிடம் போனை கொடுக்க சொன்னேன்.
பேபி பக்கத்துக்கு வீட்டு பாபியிடம் அவரசரமா பேச போயிருக்கு.
இருங்க எங்கப்பா கிட்ட போனை கொடுக்குறேன்னு சொல்லுச்சு, பொண்ணு பேபி.

நான் பேபி புருஷன் கிட்ட, என்ன சார் எல்லாம் சரியாயிடிச்சு போல, பேபி திரும்ப எப்ப சார் திரும்ப வேலைக்கு வரும்னு கேட்டேன்.
அதுக்கு அவர் எங்க பொண்ணு பேபியம்மா காதலை, நானும் என் பொண்டாட்டி பேபியும் சமதிச்சு பேபியம்மா கல்யாணத்தை அடுத்த மாசம் தடா புடலா நடத்த போறோம். அதனால பேபி கண்டிப்பா நாளையில் இருந்து உங்க வேலைக்கு வரும் சார். கவலை படவேண்டாம் என்றார்.

எனக்கு செம சந்தோசம்.
அவர்கிட்ட கேட்டேன், ஏன் சார் நீங்க உங்க பொண்டாட்டியை பேபிமானுதான கூப்பிடுவீங்கனு பேபி என்கிட்ட சொல்லியிருக்கு. ஏன் என்கிட்ட பேசும் போது உங்க பொண்டாடியை பேபின்னு சொல்றீங்க என்றேன்.
அதுக்கு அவர் நான் வீட்டில் என் பொண்ணு பேபிம்மா இல்லாத போதுதான் என் பொண்டாட்டி பேபியை பேபிமானு கூப்பிடுவேன், பொண்ணு பேபிம்மா இருக்கும் போது பொண்டாட்டியை வெறும் பேபிதாணு மத்தவங்க கிட்ட சொல்வேன்னு சொன்னாரு.

அப்பத்தான் புரிஞ்சிது, பாசத்தில் கூப்பிடும் எல்லா கேரக்டர்களும் “பேபிமா” என்றும், பாசம் இல்லாமல் இருக்கும் கேரக்டர்கள் எல்லாம் பேபி என்றும் புரிந்து கொள்ளவேண்டும் என்று. இதை ஏன் இன்னிக்கி சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்.

நேத்து, அந்த பேபி பொண்ணுக்கு ஒரு பேபி பொறந்து இருக்காம் . whats ஆப்பில் மெசேஜ் வந்துச்சு.

அந்த பிறந்த பேபி பேரும் பேபியாம்.
ரெண்டு பேபிக்கும் புது பேபி பொறந்ததில் சந்தோசம்.
வீட்டில் அதை பாசாமா பேபிமானு எல்லாரும் கூப்புடுறான்களாம்.

இது பாபி whatsaap மூலம் தான் எனக்கு தெரிஞ்சுது.
அப்பத்தான் யோசிச்சேன்.
பேபி புருஷன் பேரு என்னனு?
கதையை படிச்ச உங்களுக்கே பேபிதான் முக்கியமா படும் போது கதையை சொன்ன எனக்கு எப்படி அது முக்கியம்.

 

நீதி: கதையானாலும், உண்மையானாலும் வீட்டில் என்றும் பேபிக்கு தான் முக்கியத்துவம்.

இது ஒரு உண்மை சம்பவத்தில் அடிப்படையில் எழுதபட்ட புனைவு கதை.