இன்று மிஸ்கின் படம் பிசாசு வரவிருக்கிறது. பிசாசுவை பற்றி ஒரு எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசாலாம்.
கடவுளை போன்று இருக்கிறதா இல்லையா என்ற சப்ஜெக்ட்.
இன்னிக்கி ஒரு நிஜ பிசாசு பத்தி சொல்றேன்.
அவர் தான் கொல்லி வாய் பிசாசு.
இதை சினிமா உலகம் வாயில் இருந்து நெருப்பு வரவைத்து காமிச்சுது.
உண்மையில் இது தஞ்சாவூர், திருச்சி மாவட்ட கிராமங்களில் உண்மையாக இருக்கும் பிசாசு.
இரவில் நடந்து செல்பவரை இது மெதுவாக பின் தொடரும். திடீரென்று ஒரு நெருப்பை அள்ளி வீசி கொன்றுவிடும்.
நம்புங்க இதை நேரில் பார்த்தவர்கள் இன்றும் தஞ்சாவூர் திருச்சியில் இருக்கிறார்கள். இதில் இறந்தவர்களும் உண்மை.
இந்த பேய் ஏன் அந்த இடங்களில் மட்டும் இருந்தது என்று ஏகப்பட்ட புரளி.
சிலர் அது பொய் என்று கூட வாதிட்டார்கள்.
உண்மையில் அவர்களை கூடிக்கொண்டு போய் இரவில் காண்பித்தார்கள்.
ஆம், நெருப்புடன் பிசாசு இரவில் நட்பவனை துரத்தியது.
அறிவியல் படி பிசாசு ஒன்று இல்லை. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர்.
மெதேன் வாயுவுக்கு தமிழ் நாட்டில் கொள்ளிவாயு என்ற பெயர் உண்டு.
அறிவியல் சார்ந்தவர்கள் இது வாயு சம்மந்தப்பட்டு வந்த ஒரு மூடநம்பிக்கை என்பதால் கொள்ளிவாயு பேய் என்கிறார்கள்.
கிராமத்தில் இன்னும் மீதேன் மிதித்து தீப்பற்றி சாவதை பிசாசு கொன்றுவிட்டதாய் நினைத்து விடுகிறார்கள்.
இதே போல் என்னிடம் மொத்தம் 10 வகை தமிழ் பேய்கள் பற்றி குறிப்புகள் உள்ளன.
பேய் விரும்பிகள் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு சூப்பர் கிராமத்து பேய் கதையை ரொம்ப ரசித்து கேட்டது எங்கள் அண்ணன் திரு. ராஜாகுமார் அவர்களிடம் இருந்துதான்.
அதை நான் சொல்வதை விட அவரே எழுதினால் நன்றாக இருக்கும்.
அவர் தான் வான்கூவரில் பேயை நேராக பார்த்தா ஓரே ஆள்.
சின்ன வயசில் அவர் பேய் பார்த்தது ஒரு மகா காமெடி…சாரி மெகா காமடி.
‘கொள்ளி-வாய்’ பிசாசா (நெருப்பை உமிழும் பிசாசா)? அதாவது “The Will-o’-the-wisp (ignis fatuus) Phenomenon”?
அல்லது
‘கொல்லி-வாய்’ பிசாசா (அதாவது பேசியே கொல்லும்- இன்றும் வெளியே உலவும் பிசாசா)?
அபாரமான பதிவு!
பேச்சு வழக்கில் இதை கொல்லி என்றே அர்த்தம் கொள்வதால் சின்ன ‘ல்’ பயன்படுத்தினேன்.
“தவறொன்றும் இல்லை!”
முடிவை ஒட்டிய (கொல்லப் படுதலுக்கு காரணியாக நிற்கும்) கூற்றைச் சொல்ல வருவதாலும் மற்றும் பேச்சு வழக்கில் உள்ளதாலும் “லகரம்” தவறல்ல என்றே கொள்ளலாம்!
Fantastic account! Did you watch that movie? How was it?