லிங்கா பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருந்தேன்.
படம் மகா மரண மொக்கை என்று.

இதை நான் சூர்யா படத்துக்கோ இல்லை விஜய் படத்துக்கோ எழுதி இருந்தா, ஒரு வரியோட இது முடிஞ்சு இருக்கும்.

ஆனா தொட்டது பெரிய இடம் ஆச்சே !!! ..ரஜினியை விமர்சனம் செய்தா ….வுட்டான்களா …. இல்லையே ….

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நண்பர், அப்பவே சொன்னாரு,

இன்னும் கொஞ்ச நாளைக்கு Facebook க்குல லிங்கா எப்படியும் ஆகா ஓகோ, மரணமாஸ்னு சொல்ல போறாங்க…நமக்கு என்ன அவங்களோட வாய்க்கா தகராறா என்ன??
எதுக்கு வம்பு!!! வழக்கம் போல கூட்டத்தோட கூட்டமா வாழ்கன்னு கத்திட்டு ஓடிடுவோம்னு சொன்னாரு.

நான் இதை கேட்டேனா …இல்லை கேட்டேனா ???
அடங்காம எழுத ஆரம்பிச்சவன், இன்னிக்கி லிங்கா பத்தி ஒரு புக் எழுதும் அளவுக்கு என்னை சினிமா விமர்சகனா ஆக்கிட்டாங்க.

பத்து வரியோட போக வேண்டிய விமர்சனம் இது …வுட்டான்களா …. இல்லையே …

யோவ், நான் 20 வயசு வரை சுமார் 20 சினிமா வரைதான் தியேட்டர் போய் பார்த்தேன் என்றேன்….வுட்டான்களா …. இல்லையே ..
எனக்கு சினிமா பார்க்க அவ்வளவு புடிக்காது என்று சொன்னேன். …வுட்டான்களா …. இல்லையே ..
ஊட்டியில் எங்க தாத்தா வீட்டில், tom and Jerry மட்டும் பார்த்து வளந்த குழந்தை…அதனால நான் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க என்றேன்……வுட்டான்களா …. இல்லையே ….

 

என் கட்சிகாரன் இந்த இன்டர்நெட் உலகத்திலே என்ன தப்பு செஞ்சான்…..???

லிங்கா பத்தி ஒரு நாலு வரி எழுதிட்டான். இது தப்பாயா?
முதலில், படம் மொக்கையாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள் என்றேன்.
உடனே, படத்தை பார்க்காமல் எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
தப்புதான்னு உடனே ஜகா வாங்கிட்டு ஓடி போயிட்டேன். …வுட்டான்களா …. இல்லையே ..
படத்தை பாரு…அப்புறம் வந்து எழுது என்றார்கள்.
அப்பவே சொன்னேன் நான் அவுரு நடிச்ச கடைசி 5 படத்தை பார்க்கலை … உங்களுக்காக வேணா நான் பார்த்து எழுதுறேன்னு …
நானும் ஆன்லைனில், கும்னுனு ஒரு பிரிண்ட் வரவே மொக்கையை எதுக்கு காசு கொடுத்து பாக்கனும்னு நெட்டில் படம் பார்த்துட்டு வந்து மோசம் என்றேன்.

 

நான் இங்க என்ன செங்கிஸ்கான் வரலாறா எழுதுறேன் ?

இல்லை பாகியான் எந்த செருப்பு போட்டுட்டு இந்தியா வந்தாருனு ஆராய்ச்சி நூல் எழுத வந்தேனா??
அங்க இங்க ரெண்டு தப்பு இருக்கும். படிச்சோமா, ரெண்டு கமென்ட் போட்டோமான்னு போயிட்டே இருக்கனும்.

 

இதுக்குதான் பொதுவா விமர்சனத்தை என் Website ல் எழுதுவேன்.

திட்டி வந்த கமென்ட் ஆடோமாடிக்கா ஸ்பாம் போல்டெர் போயிடும்.
அது மொக்கை போஸ்டிங் இங்கையும் Publish ஆகும். வெப்சைட் என் சொந்த வீடு. அங்க தான் 2001 லில் பிறந்தேன். Facebook என் வாடகை வீடு.
மார்க் இதை மூடிட்டானா நான் சுவாமிஜியா சிந்திச்சது எல்லாம் என் பேரன் பேத்திங்க எங்க போய் படிப்பாங்க … சொலுங்க???
அங்க ஆயிரம் பேர் வந்து படிக்கிறான். அது தான் என் Repository…
இங்க நூறு பேர் வந்து படிச்சா போதும் ..
எனக்கு சொந்த வீடு தான் முக்கியம். வாடகை வீட்டில் இஷ்டம் போல் ஆணி அடிப்பேன், புடுங்குவேன்.

 

என்னப்பா பொல்லாததை எழுதிட்டேன் …?

விமர்சனத்தில் லிங்காவில், மொத்தம் நூறு ஓட்டை சாமியோவ் என்று சொல்லிவிட்டு, ரெண்டு உதாரணத்தை ஓரமா நின்னு மரியாதையா சொன்னேன்.
டபுக்குனு ஒருத்தர் வந்து நீ சொன்ன கொடியில், அனுஷ்கா காட்டிய இடை தப்புன்னு சொன்னார்.
நான் சொன்னேன், ஐயா படம் ஓடும் போது தியேட்டரில் கூட்டம் இல்லாமல் இருந்ததால் வாய்ஸ் நல்லா கேட்டுச்சு சார்.
ஆனா, கேமரா quality சரியில்லை போல ..பிரிண்ட் ….மொசுமொசுனு தெரிஞ்சது.
அட்ஜஸ்ட் செஞ்சுகோங்க …. கொடியில் சொன்னது தப்பா இருந்தாலும் இருக்கும்.
வேணும்னா திருத்தி எழுதுறேன் என்றேன்….வுட்டான்களா …. இல்லையே ….
அப்புறம் ..படத்தில் ஒரு புக் வருது…அதை காந்தி செத்த பின்பு தான் வெளிவந்தது.
எப்புடி உங்க ஜாமீன், எந்த மூல புத்தக கடையில் அதை வாங்கி படிச்சாரு என்று கேட்டேன்.

 அதுக்கு இன்னும் பதிலை காணோம்.

அது மட்டும் இல்லை …படத்தில் ரொம்ப அறிவாளியா காமிக்கிற சீன், 1966 ல் சிவா கார்த்திகேயன் அப்பா நடித்து வாரணாசியில் வெளிவந்த ” அது இது ஏது” வில் வந்த சீன் என்று ஒரு லிங்க் போட்டுடு போயிட்டேன் . …வுட்டான்களா …. இல்லையே ….

கப்புன்னு ஒருத்தர் வந்து பொதுவில் ஒரு கேள்வி கேட்டார் … பீட்டர் இங்கிலிஷில் பொத்தாம் பொதுவில் கேட்டு விட்டு சந்தோசமா போய் அறிவாளியா தூங்கிட்டார்.
அதுக்கு லைக் போட்ட ரெண்டு ஆளில் நானும் ஒருத்தன்.

அந்த கேள்வி இது தான்: தமிழில் ..

“ஒரு படைப்பை நியாமான முறையில் விலை கொடுத்து வாங்கிய பின்னர் கருத்துகளை பதிவு செய்வதில் தவறு இல்லை. பல்லாயிர கணக்கானவர்களின் உழைப்பிற்கு சரியான விலை கொடுக்காமல் செய்யும் விமர்சனத்துக்கு முகாந்திரம் இல்லை”

தம்பி ….நீ தியேட்டர் போய் பார்த்தா மட்டும்தான் விமர்சனம் சொல்ல வேண்டும் ….ஆன்லைனில் பார்த்தவனுக்கு இதை சொல்ல முகாந்திரம் இல்லை என்பது தான் அதன் அர்த்தம்.

நான் ஏன் அதுக்கு லைக் போட்டேன், தெரியுமா சார் ? காரணம் அந்த கமென்ட் புடிச்சு போனதால் இல்லை.
பதில் சொல்ல ஒரு நல்ல கேள்வி கேட்டதுக்கு, நெம்ப நன்றினு அர்த்தம் சாரே ..

 

இது பொதுவான கேள்வி . அதனால் இது பொதுவான பதில்.

கேள்வி கேட்டவருக்கு உண்டான பதில் இல்லை, இது அந்த கேள்விக்கு உண்டான பதில்.
தனி நபரை தாக்கி இங்கு எழுத மாட்டேன். கேட்ட கேள்விக்கு பதிலாக மட்டும் படிக்கவும்.
பேச்சு பேச்சா இருக்கணும். தனி நபரை விமர்சனம் செய்ய கூடாது. பீரியட் ….

 

என்னடா ஒரு நாலு வரிக்கு இத்தனை விளக்காமா என்று நீங்க நினைக்கலாம்.

படத்துக்கு விமர்சனம் எழுதுவது ஒன்னும் வேர்கடலை கொறிச்சுகிட்டே சினிமா பார்ப்பது போல் இல்லை, சார்.

ஒரு விஞ்ஞானி, இங்க கை வலியிலும் நைட் ஒரு மணிக்கு உட்காந்து ” மூடர் கூடம் ” படத்துக்கு அஞ்சு பக்கம் தமிழில் தப்பு இல்லாமல் அடிக்கிறார். எதுக்கு வயசான காலத்தில் தமிழில் எழுதுறார் ….சொல்லுங்க பார்ப்போம் ?
அதை நீ படிச்சுட்டு அவரை அறிவு ஜீவின்னு நினைக்கவா.? இருக்கிற அறிவுக்கு அல்ரெடி அவருக்கு விஞ்ஞானி பட்டம் இருக்கிறது. ஏதோ நம்மால் முடிஞ்சதை எழுதினா ரெண்டு பய புள்ளைங்க படிச்சிட்டு, அந்த படத்தை பார்த்து சந்தொசபடட்டும் என்ற எண்ணம் தான் . அதையும் அந்த மனுஷன், The Movie is good, please watch னு அடிக்கிறாரா ? தூய தமிழில் தப்பில்லாமல் நாலு பக்கம் எழுதுறார். இது தான் அந்த படத்தை எடுத்தவனுக்கு ஒரு முதிர்ந்த தமிழ் எழுத்தாளன் கொடுக்கும் மரியாதை.

மூடர் கூடம் எந்த தியேட்டரில் இங்க ஓடுச்சு இங்க சொல்லுங்க பாஸ் ???

இல்லை அதை படிச்சு படத்தை பார்த்த நீங்க என்ன அவர் கை வலிக்கு மருந்தா போட்டு விட்டீங்க? இல்லை பேனாவுக்கு ink ஊத்தி விட்டீங்களா.
எங்க பார்த்தால் உங்களுக்கு என்ன பாஸ்… நல்லா இருந்தா படத்துக்கு மரியாதையை நாங்களும் எழுத்தில் கொடுப்போம்.

மோகன்லால் நடித்த த்ரிஷியம் படத்தை பார்த்துவிட்டு நைட் ஒரு மணிக்கு போஸ்டிங் போட்டேன். கண்டிப்பா பாருங்க என்று. ஏன் எனக்கு படம் பார்த்துட்டு தூங்க தெரியாதா ? இது என்ன கோட்டயமா …இல்லை ஆழ புழாவா …??? படம் சினிமாக்ஸ்ல ஓடுறதுக்கு…எனக்கு ஒரு professor america வில் இருந்து லிங்க் கொடுத்தார் … நான்தான் லிங்க் கொஞ்ச பேருக்கு கேட்டவுடன் அனுபிச்சேன். ஒரு மலையாள மமுட்டியே நெட்டில் நொண்டி பார்த்துட்டு, நல்ல பிரிண்ட் இல்லாம போன் போட்டு என்கிட்ட கேட்டாரு.

வந்துடாரு நமக்கு சொல்ல ஒரு பீட்டர்.. பீதாம்பரம் ..

நீங்க ஏன் தியேட்டர் போக வேண்டியதுதானேனு.?
நீங்களும் 12 டாலருக்கு கனடாவில் எல்லா தமிழ் படத்தையும் செவ்வாய் கிழமை rebate ரேட்டில் கொண்டு வந்தா நான் அங்க போய் பார்ப்பேன்.
நீ எடுக்கிற மொக்கையை, உன் தலைவன் நடிச்சான் என்பதற்காக, நான் போய் காசு கொடுத்து பார்க்கனும்னு இங்க வந்து advice செய்ய வேண்டாம்.


இன்டர்நெட்டில் எழுதுறவன் எல்லாருமே வேலை வெட்டி இல்லாமல் எழுதல…

உனக்கு வாயை பொளந்துட்டு கிரிகெட் பார்க்க புடிச்சா இன்னொருத்தனுக்கு காதை தொறந்து சூப்பர் சிங்கர் கேட்க்க புடிக்கும்.
எனக்கு இங்க எழுத புடிக்கும். இன்னொருத்தனுக்கு கமெண்ட் செய்ய மட்டும் புடிக்கும். சில பேர் படிக்க மட்டும் செய்வார்கள்.

நாங்க எல்லாம் , உங்களை மாதிரி பஸ் புடிச்சி ஆபீஸ் போய் எல்லாத்தையும் பகலில் வெட்டி முறிச்சிட்டு, வீட்டு வேலை எல்லா வேலையும் பார்த்துட்டு வந்துதான் இங்க ஆணி புடுங்க வரோம்.

 

Facebook இல் வேலை வெட்டி இல்லாம எழுதறாங்க என்று சோபாவில் படுத்துட்டு பேசுறவன்தான் சார், எந்த வேலையும் பாக்காம வெட்டியா பேசும் வெட்டி பயலுங்க.

நாங்க எல்லாம் பாத்திரம் கழுவும் போதும் போஸ்டிங் போடுவோம். Toilet போயிட்டேவும் போஸ்டிங் போடுவோம்.
சொந்தமா ரெண்டு வேலை சுயமா சமைச்சு சாபிடறவன் கிட்ட வந்து, கை ஏந்தி பவன் இட்லி சாபிடுறவன் சட்னியில் உப்பு பத்தலை என்று சொல்ல கூடாது.
என்கிட்டே வாங்க சார், நான் காமிக்கிறேன் ஒரு விமர்சனம் எப்படி உட்காந்து எழுதுறோம்னு.

 

அது ஒரு தேவகலை. சொல்லறேன் …கேட்டுகோங்க

படம் பாக்கும் போது படுதுக்கிட்டு பாப்காரன் சாப்பிட்டா விமர்சனம் எழுத முடியாது பாஸ்.
படம் ஓட ஓட நோட்ஸ் எடுக்கணும்.
எவன் கேமரா புடிச்சான், ஹீரோ ஹீரோயின் இடுப்பை எங்க புடிச்சான் என்று பாக்கணும்.

எவன் எந்த சீனுக்கு எவனுக்கு விளக்கு புடிச்சான் என்பது வரை ஆராயனும்.
Proof பாக்கணும். பட்டி பார்த்து டிங்கர் அடிக்கனும்.

திருப்பி நாமளே ஒரு முறை படிச்சு பாக்கணும்.
திருவிளையாடல் படம் போல பொருட் பிழை, இலக்கண பிழை எல்லாம் பாக்கனும்.

இங்கிலீஷ் கீபோர்டில் இருட்டில் தடவி தடவி தப்பில்லாம அடிக்கனும்.
படம் ஓட ஓட மனசு ஓடனும். கோர்வையா தினக் செய்யணும்.

பெரிய றாவா, சின்ன ராவானு போன் செஞ்சு தமிழ் பெரியவங்க கிட்ட சுறா மாதிரி கேட்கணும்.
பாட்டை ஒட்டி பாக்க முடியாது. டீடைல் மிஸ் ஆயிடும்னு முழுசா பாக்கனும்.

கொடுமையா எடுத்த பலூன் சீனை, ப்ளூ பிரிண்ட் எடுக்கணும்.
காலையில் அஞ்சு மணிக்கும் நைட் ஒரு மணிக்கும் கண் முழுச்சு கஷ்ட்டப்பட்டு எழுதுறவனுக்குதான் அதன் வலி தெரியும்.

இதை store செய்ய ஒரு வெப்சைட் வேணும். அதுக்கு 550 டாலர் செலவு செஞ்சு வருசா வருஷம் சர்வர் காசு கட்டனும்.
Web technology தெரிந்தா தான் வெப்சைட் நடத்த முடியும்.

இதை எல்லாம் தாண்டி ஒருத்தன் நாலு வரி எழுதி போட்டா நீங்க வந்து இங்க நொட்டை சொல்றீங்க.

நீங்க கேட்கிற நாலு வரி கேள்வியையே சோம்பேறியா தமிழ் போல் இங்கிலிஷில் டைப் அடிச்சிட்டு போற உங்களுக்கே இவ்வளவு அதும்பு இருந்தா, மழையிலும், வெயிலிலும் இங்க அடிக்கிற குளிர் காத்துலயும் கஷ்ட்டப்பட்டு வேலைக்கு போயிட்டு வந்து குடும்பத்தையும் காப்பாத்திட்டு, வீட்டுக்கு வந்து toilet போகும் போது யோசனை செஞ்சு தமிழில் விமர்சனம் எழுதுற எங்களுக்கு எவ்வளவு அதும்பு இருக்கனும்?

ஆனா, அந்த சொரணை எல்லாம் இருக்கா எங்களுக்கு?
இல்லையே, தப்பா எழுதிட்டா …சாரின்னு தானே கேட்கிறோம்.

மீண்டும் வந்து எடிட் செய்யிறோமா இல்லையா? அதுவும் ரெண்டு இடத்தில செய்யனும்.
வெப்சைட்ல ஒரு முறை, Facebook ல ஒரு முறை.

சொல்ல போனா, உங்க மொண்ணை நியாத்தை நான் தான் கஷ்டப்பட்டு தமிழில் Transliterate செய்து பதில் எழுதுறேன்.

 

எழுத்தாளனுக்கு மரியாதை இல்லாததால்தான் சார் பாரதியை யானை கொன்னுச்சு.

வின்சென்ட் வான் கோ பயித்தியமா நெதர்லாந்தில் நெட்டுகிட்டு செத்தாரு.
T Rajendar போன்ற கலைஞன் கோமாளியா பேசிட்டு திரியுறான். இங்க வந்து உழைப்பு, உப்பும்மானு பேசகூடாது பாஸ்.

உங்க தலைவன் சினிமா எடுப்பது மட்டும் கஷ்டம் இல்லை சார். மொக்கையை காசு கொடுத்து பார்த்து விமர்சனம் எழுதறதும் எங்களுக்கும் கஷ்டம் தான். நீங்க படம் புடிக்கிலைனா லேப்டாப் மூடி வச்சிட்டு படுத்து தூங்கலாம். நாங்க அந்த மொக்கையை முழுசா பார்த்து எழுதறது ஒரு வகை கலை தியாகம். லாபமே இல்லாமல் நைட் பகலா அதுக்கு review எழுத நாங்களும் தான் இப்படி கஷ்டபடுறோம். கஷ்டப்பட்டு நான் எழுதிய review க்கு, நீங்க படிக்க நான் 15 டாலர் கேட்டா குடுப்பீங்களா சார்? அப்பிடி யோசிங்க சார்.

ரெண்டு வருசதுக்கு ஒரு சினிமா தான் உங்க தலைவர் நடிப்பார். நாங்க தினமும் ரெண்டு சினிமாவுக்கு review எழுதுறோம். நாலு போஸ்ட் எழுதுறோம். ரெண்டு நியூஸ் போடுறோம்.  நீங்க என்ன என் review படிச்சிட்டு எங்க பேங்க் அக்கௌண்டில் பணமா போட்டீங்க.

நீங்க கேட்கலாம் அப்ப எதுக்கு நீ இங்க எழுதுற என்று.

நீங்க ஓசியில் படிக்க எங்கள மாதிரி ஆளுங்க ரா பகலா எழுதுனாதான் உண்டு.
இல்லைனா, மூஞ்சி புத்தகம் புல்லா blank page தான் சாமியோவ்.

உலகத்தில் எவனோ ஒருத்தன் ஏதோ மூலையில் எதுக்கோ தன உழைப்பை கொடுத்தாதா தான் உனக்கு Facebook.

Whats app ல் குரூப் chat போட்டு நீ மட்டும் What? What? னு கேள்வி மட்டும் இந்த மாதிரி கேட்டால் thread ஓடுமா என்ன.
எவனோ ஒருத்தன் தன் நேரத்தை ஒதுக்கி எழுதுனா தான் நீ அதை நீங்க படிக்க முடியும்.
இல்லைனா, வாயை திறந்துட்டு வெறும் வெள்ளை பக்கத்தை மட்டும் பார்த்துட்டு இருக்கணும்.

இங்க வந்து தலைவன் உழைப்பு, ரஜினி உப்பும்மானு …??

இது இருக்கட்டும், நான் free யா use செய்யும் விக்கிபீடியாவுக்கு வருடம் 150 டாலர் donation கொடுத்த receipt டை போஸ்டிங் போடுறேன்.
நீங்க இதுவரை இலவசமா படிச்சு விக்கி பீடியாவில் படிச்சு கிழிச்சதுக்கு ஒரு குண்டு ஊசி தூக்கி போட்டதுண்டா?
இல்லை ஏதாவது Contribute Article எழுதியதுண்டா? நான் இதுவரை 17 தமிழ் article லுக்கு contribute ஆத்தர் .
இங்க உங்க லிங்கத்தை தூக்கிட்டு வந்துட்டாரு …நான் கொடியில் கோமணத்தை பார்த்தேன்…நீ online என்னத்த பார்த்தனு.

 

மரியாதை என்பதும், உழைப்பு என்பதும் உன் தலைவன் சொத்து இல்லை பாஸ்.

அவர் உங்களுக்கு வேணா மாசா இருக்கலாம்.. சோசியல் மீடியாவில் சிலுக்கு செத்து போனதும் வரும். மார்சுக்கு மங்கல்யான் போனதும் வரும்.
ஒத்தை வரி எழுதலனாலும் வரி குதிரை மாதிரி பின்னாடி காமிச்சிட்டு நடந்தா, சிங்கம் வந்து back portionல கடிக்கும்.

 

Facebook: Twitter : Google Plus: Website : Blog : இவை அனைத்தும் ஒரு Platform.

என்னை மாதிரி இங்க ஆயிரம் train வரும். உனக்கு புடிச்ச train ல ஏறி போயிட்டே இருக்கனும்.

புடிக்கிலையா…. ஸ்டேஷன் பக்கம் தலை வச்சு கூட படுக்ககூடாது.
அதை விட்டுட்டு நீ டிக்கெட் வாங்கிட்டு வந்தியா, என் தலைவன் உழைப்பை பார்த்தியான்னு ?

சிலது கூட்சு வண்டி, சிலது புல்லட் வண்டி. புடிச்சதில் ஏறி கம்முனு போகனும்.

இது வேற பத்தாதுன்னு கொஞ்சம் பேருக்கு தலை கொஞ்ச நேரம் ஸ்டேஷன்குள்ள உள்ள இருக்கும்.
கால் மட்டும் வெளிய வச்சிட்டு படுத்துட்டு Face Book ல் படுத்துட்டு இருப்பாங்க.

ஏன்னு கேட்டா நான் எடுத்த போட்டோ National Geographic ல மட்டும் தான் வரும்.
நீ எடுத்தத மட்டும் இங்க போடு என்பார்கள். ஓகே அது உங்க இஷ்டம்னு சொல்லிட்டு போக பழகனும்.
இதுக்கு எல்லாம் ஒரு தியான நிலை வேண்டும். இதுக்கு ஜப்பானில் ஜென் நிலை என்று பெயர்.

இன்னொரு குரூப் இருக்கு. கலையில் நாம train ஓட்டினா நைட் privacy settings மாத்திட்டு தண்டவாளத்தில் வந்து படுத்துகுவாங்க.
அடிபட்டுட்டு ஐயோ Facebook is bad, I am not going to be here என்பார்கள்.

ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை இப்பிடி 1500 பேர் தேவை இல்லாமல் வந்து என் ID யில் படுத்து தூங்குதுங்க.
இவுங்களை UnFriend செஞ்சு தூக்கி போட மூணு நாள் நான் உழைக்கனும்.

இன்னொரு குரூப் இதை நியூஸ் பேப்பர் மாதிரி நினைச்சு படிக்கும். ஏன் அதுக்கு நீ நியூஸ் பேப்பர் வாங்கி படின்னு சொல்லமுடியுமா? அவுக இஷ்டம் சார்.
சிலதுங்க ஒரு நாளைக்கு ஒரு முறைதான் வரும். பத்து நிமிஷம் மட்டும். Mobile Data பிரச்சனை. குத்தம் சொல்ல முடியுமா?
சிலர் கண்ணுல தெரியரத மட்டும் படிச்சிட்டு, கண்டுக்காம போயிடும். சார் , நான் ஒன்னு கஷ்ட்டப்பட்டு போட்டத நீங்க படிசிங்களா என்றால் அப்பிடியா என்னனு சொல்லுனு கேட்கும்.
நாம எழுதுனத மீண்டும் வாயால ஞாபக படுத்தி சொல்லனும்.

இன்னொரு குரூப் இருக்கு..அது ஆடிக்கு ஒரு முறை, அம்மாவசைக்கு ஒரு முறை வரும். இருக்கா இல்லையானே தெரியாது.
இது எல்லாம் கூட பரவாயில்லை …ஒரு குரூப் வந்தோமா படிக்காம லைக் போடாமானு ஒரு நூறு லைக் அள்ளி போட்டுட்டு போயிட்டே இருக்கும்.

இன்னொன்னு போட வேண்டிய இடத்தில போடாம,
கல்லு மேல உட்காந்து ஏன் நான் போடுறதில்லைன்னு விவேகானந்தர் மாதிரி ஒரு விளக்கம் சொல்லும்.

இதை எல்லாம் நாங்க பொறுமையா கேட்கணும்.
இன்னொன்னு பொண்டாட்டி திட்டினா ஒரு வாரம் Facebook பக்கம் வராது. இன்னொன்னு திட்டுவாளேன்னு வராது.

அவன் அவனுக்கு எவ்வளவு கஷ்டம் சார் இந்த உலகத்தில். அவங்களுக்கு புடிச்சதை புடிச்ச நேரத்தில் செலவு செய்ய அவங்களுக்கு உரிமை உண்டு.
இந்த மாதிரி ஆயிரம் ரகம் மக்கள். எல்லார்க்கும் ஒரே பேரு – Facebook Friends.

எனிமி ஒரு லிஸ்ட் Facebook காரன் கொடுத்து பார்க்க சொல்லுங்க..பத்தி பயலுக அதில் தான் விழுவாங்க.
கொடுமை சார் …இது கொடுமை. இதை எல்லாம் நாங்க பொறுத்துட்டு இந்த தொழிலை இங்க செய்றோம்.

தப்பாச்சுனா, அதுக்கு தான் நாங்க சாரியை ஈசியா சொல்லுரோம்ல …
நாங்க ரோஷம் பார்த்தா எழுதமுடியாது.

 

திட்டினா தூக்கி போட்டுட்டு தன் தவறை திருத்திட்டு இங்க வரவன்தான் Facebook போராளி.

இதுக்கு தான் எழுத வந்துட்டா எதை பத்தியும் கவலை பட கூடாது.
உன்னை விட்டா உலகத்தில் ஆயிரம் பேர். என்னை விட்டால் உனக்கும் அதே ஆயிரம் பேர்.
இதுல நீபாட்டுகிட்டு வந்து கேள்வி கேட்டுட்டு போயிடுவீங்க ? நான் இல்லை போராடி Facebook போராளியா பதில் எழுதனும்.

ஒரு நாள் காட்டுக்கு காம்பிங் போய் சமைக்கிறதுக்கும், தினம் வீட்டில் சமைக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு பாஸ்.
சினிமாகாரன் வந்து என் கேள்விக்கு பதில் சொல்லமாட்டன். நீங்களும் சொல்லமாடீங்க.

ஆனா ஒரு Blogger என்றால் நாலு பேர் படித்துவிட்டு நாலு கேள்வி கேட்பீங்க. அதுக்கு நாங்க தினமும் விளக்க உரை எழுதவா முடியும்? ஆனா பாருங்க உங்க நாலு வரி கமெண்டுக்கு ஒரு புக் எழுத வச்சுடீங்க.

நான் ரெண்டு கேள்வி கேட்டேனே …அதை உங்க தலைவர் கிட்ட கேட்டு பதில் சொல்லமுடியுமா?
அதை கேட்காமல் எப்ப தலைவாஅரசியலுக்கு வருவீங்கன்னு 20 வருஷமா கேக்குறீங்க? அவர் உன்கிட்ட சொன்னாரா? வரேன்னு ..? நீயா கேட்டுட்டு அமைதியாய் 20 வருஷம் பதிலுக்கு மட்டும் வெயிட் செய்றீங்க…
ஆனா நான் விமர்சனம் போட்ட பத்து நிமிஷத்தில் நீங்க என்னமோ ரஜினி தூக்கி போட்ட பிஸ்கட் துண்டை கவ்வி புடிச்சு வளந்த நாய் குட்டியாட்டம் லொள்ளு லொல்லுனு விசுவாசமா இங்க வந்து கேள்வி மட்டும் கேட்டு சத்தம் போட்டா என்ன சார் நியாயம்.

உலகத்தில் இன்னொருத்தனை கேள்வி கேட்பது ரொம்ப ஈசி சார். பதில் சொல்றது தான் கஷ்டம்.

 

ஆனா பாருங்க, ஒரு எழுத்தாளன் தன் பதிலை அறிவாளிதனமா கூட சொல்லக்கூடாது.

அவன் தன்னை மடையனா சுவாமிஜினு மட்டம் தட்டிட்டு எழுதினா ரசிப்பீங்க.
எழுதும் போது நான் தான் ஏமாந்து போகணும்.
நான் தான் காதலில் தோத்து கவிதை எழுதனும்.
பஞ்சாபிகிட்ட, பிச்சை காரன்கிட்ட, முடி வேட்டுறுவ கிட்ட அடி நான்தான் ஏமாறனும்.

 

இது ரத்த பூமி. எத்தனை பேர் கிட்ட இங்க வெட்டு காயம் வாங்கி எழுதிட்டு இருக்கோம் தெரியுமா?

சார், சோசியல் மீடியா என்பது சோசியலா இருக்க தான். இங்க வந்து சோவியத் யூனியன் சோசியலலிசம் தத்துவமெல்லாம் பேசபடாது.
ஸ்டாலின் செத்து ரொம்ப நாளாச்சு. பிடல் காஸ்ட்ரோ பாவம் கடைசி மூச்சை விடும் காலத்தில் நான் ரஜினி ரசிகன், நீ அவர் உழைப்புக்கு மரியாதையை கொடுத்து எழுதுன்னு சொன்னா எவன் சார் எழுதுவான்?
கருணாநிதியில் இருந்து காந்திமதி வரை தப்பு செஞ்சா இங்க கழுவி ஊத்துறான்.
உங்க தலைவரை ஒரு வரி சொல்லிட்டா இங்க வந்து ஜங்குனு ஏன் குதிக்கிறீங்க?

 

எழுத்து என்பது ஒரு ஆயுதம்.

கத்தி படம் பார்த்தா மட்டும் ரத்தம் வராது.
இப்பிடி எழுதியே குத்தினாலும் ரத்தம் வரத்தான் செய்யும்.
இதை எல்லாம் ஜாலியா படிங்க. இதை நான் நல்ல மூடில் எழுதி உள்ளேன், அப்பனா பாத்துகோங்க சார்.
இது வெறும் முன்னுரை தான். நீங்க பொதுவா கேட்ட நாலு வரியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் கொடுத்து போஸ்டிங் போடுவேன்.
ஜஸ்ட் ஒரு முணு நாள் . இது ஆரம்பம் தான்… கிருஸ்த்மஸ் சமயத்தில் தீபாவளி சாரே ….என்சாய் …

தொடரும்

The Lion King – சிவாஜிராவ் ..in www.sridar.com

Part 2 (நானும் ரஜினி ரசிகன்தான்)