இன்று என் பையன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.
அப்பா, உங்க ஆபீசில் உங்களுக்கு தனி ரூமா இல்லை தனி cubicle கொடுத்து உள்ளார்களா என்று ?
என் பதவிக்கு என் ஆபீசில் எனக்கு தனி ரூம் எல்லாம் கிடையாது மகனே, வெறும் ஒரு சின்ன cubicle தான் ஒதுக்கி உள்ளார்கள் என்றேன்.
cubicle என்றால் நிறைய disturbance இருக்குமே?
அப்போ, உங்க ஆபீசில் நீங்க எந்த போசிஷனுக்கு பதவி உயர்வு வந்தா தனி ரூம் கிடைக்கும் என்றான்.
நான் அதுக்கு சொன்னேன், எங்க ஆபீசில் நான் தனி ரூம்மில் உட்கார எனக்கு பதவி உயர்வு வரணும்னு அவசியமெல்லாம் இல்லை, Two பாத்ரூம் வந்தவே போதும்.
என்ன ரூம் கொஞ்சம் சின்னதா இருக்கும். அவ்வளவுதான். அந்த ரூமில் நான் ‘இருக்கும்’ போது எனக்கு எந்த disturbance சும் இருக்காது என்றேன்.
நாம் எங்க உட்காருகிறோம் என்பதைவிட, உட்காந்து என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
– உண்மை சம்பவம்
Leave A Comment