இன்று மாடர்ன் john pennycuick ரஜினியின் பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்துக்கள்.
ஒரிஜினல் ஜான் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய engineer, விவசாயி நலன் கருதி ஒரு அணை கட்ட முற்பட்டார். அவருக்கு காசு பத்தவில்லை. உடனே தான் சம்பாதித்த சொத்துடன், இங்கிலாந்தில் இருந்த தன் மொத்த பூர்வீக சொத்தையும் விற்று தேனி மாவட்டம் கொண்டு வந்து முல்லை பெரியார் அணையை கட்டி முடித்தார்.
C .E .Buckland என்பவர், Dictionary of இந்தியன் biography (1906) எனும் புத்தகத்தில் பல தகவல்களை புட்டு புட்டு வைத்துள்ளார். இந்த கேஸ் supreme கோர்ட்டில் நடக்கும் போது இந்த புத்தகத்தை நீதிபதி இங்கிலாந்து நூலகத்தில் இருந்து வாங்கியும் படித்தார். பென்னிகுயிக் முல்லை பெரியார் கட்டும் போது வழக்கத்தை விட அதிகம் மழை பெய்தது. அதற்காக அவர் செய்த சிமெண்ட்டு கலவை – சுண்ணாம்பு மிக்ஸ் ( burnt brick powder ) உறுதியுடன் இருந்தது. அதானால்தான் அது இவ்வளவு வருடம் தாங்கி இருக்கிறது. என்ன தான் கேரள மற்றும் தமிழ்நாடு engineer கள் ரிப்போர்ட் கொடுத்தாலும், இதில் ஒரு லாஜிக் இருக்கிறது.
நீதிபதி இந்த புத்தகத்தை வாங்கி படிக்க காரணம், சுயநலம் இல்லாமல் தன் மொத்த சொத்தையும் வித்து அணையை கட்டியவர் கண்டிப்பாக உறுதியாகத்தான் கட்டியிருக்க வேண்டும். பென்னி சாகும் முன் சொன்னது இதுதான் ” “I am going to be only once in this earthly world, hence I need to do some good deeds here. This deed should not be prorogue nor ignored since I am not going to be here again”
லின்காவின் கதையை பற்றி ஏற்கனேவே எழுதிவிட்டேன். முல்லை பெரியார் – ஆங்கிலேயர் ஸ்டோரி பேஸ் லைன் இல்லாமல் இருந்தால் சந்தோசம். இன்று இரவு லின்காவில் அணையை கட்டபோகும் நம் மாடர்ன் engineer பென்னியின் எல்லா பண்புகளையும் பெற்று ஊர் மக்களின் நலனை பாதுகாப்பார். கண்டிப்பாக அதற்ககு சித்தாள் சொனாக்க்ஷியும், செப்பு சிலை அனுஷ்காவும் உதவுவார்கள். இதை பற்றி கவலை இல்லை.
லிங்கா படம், படமாக இருந்தால் சந்தோசமே. நடுவில் மக்கள் நலம், விவசாயின் நலம், நீரின் முக்கியம் என அரசியல் பேசினால் கதையில், இந்த சொந்த சொத்தை வித்து கட்டிய பிட்டும் சேர்த்து காட்டவும்.
காரணம், கர்நாடகத்தில் உள்ள தன் சொத்தை எல்லாம் விற்று காவிரியை, கங்கையோட இணைக்க லிங்கா அடுத்து முயற்சி செய்ய அது உதவும்.
கத்தி போல் அரிசியல் வெண்ணை பேசாமல், இது ஒரு true ரஜினியின் பாட்ஷா போல இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல ராகவேந்திரரை வேண்டிகொள்கிறேன்.
நான் ரஜினியின் ரசிகன் இல்லை, இருந்தாலும் தனி மனிதனாக இவ்வவளவு பேரை தாலைவா என்று அழைத்த அவர் வசீகரம் இந்த நூற்றாண்டில் எந்த இந்திய நடிகருக்கும் இல்லை என்பதே உண்மை.
அரசியல் இல்லா ரஜினி எப்படி சூப்பர் ஸ்டாரோ அது போல் அரசியல் இல்லா லிங்கா இருந்தால் அதுவும் சூப்பர் ஹிட் தான். நான், கடந்த 4 ரஜினி படங்களை பார்க்கவில்லை.
லிங்காவை கதைக்காக பார்ப்பேன்.
Leave A Comment