இந்த பஞ்சாபிகளின் காமெடிக்கு அளவே இல்லை.

ஒரு பஞ்சாபி கொஞ்சம் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டினா, கொஞ்சம்தான் நாம் சொன்னது அவருக்கு புரிஞ்சு இருக்குனு அர்த்தம். அவர், ரொம்ப நல்லா தலை ஆட்டினா சுத்தமா அதை புரிஞ்சுக்கிலைனு அர்த்தம்.

இன்னிக்கி, பஸ்ஸில் என்னை பார்த்த ஒரு பஞ்சாபி நீ மதராசியா? என்றார். நான் ஆமாம், நான் மதராசிதான், ஆனா இப்போ தமிழ் நாடு காபிடல் மெட்ராஸ் இல்லை. சென்னைதான் அதன் காபிடல் என்றேன். so நான் தமிழன். என்னை தமிழன் என்று கூட சொல்லலாம் என்றேன்.

இப்ப கொஞ்சம் தலை ஆடினார்.

சரி அண்ணனுக்கு சரியா புரியல போல என்று நனைத்து, மெட்ராஸின் புது பேர்தான் சென்னை என்றேன். So Chennai is the new Tamil name for Madras. அந்த காலத்தில் மெட்ராஸ்தான் எல்லாருக்கும் தெரியும்.. அதனால் வடக்கே தமிழனை மதராசி என்பார்கள் என்றேன்.

இப்போ முழுசா புரிஞ்சுதா என்றேன்?

ஓ… இப்பதான் புரிஞ்சுது…இதை முதல்லையே சொல்ல வேண்டியதுதானே என்று தலையை நல்லா ஆடினார்.

சரி சொல்லு என்ன புரிஞ்சுகிட்ட என்றேன்?

அதுக்கு அவர் “தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரெண்டு காபிடல். ஒன்னு மெட்ராஸ், இன்னொன்னு சென்னை. மெட்ராஸ் ஓல்ட் காபிடல். சென்னை நியூ காபிடல். நீ சென்னைகாரன். So, யு ஆர் from ஸ்ரீலங்கா. மதராசி இல்லை.

இதே பிரச்சனைதான் பஞ்சாபிலும். சண்டிகர்தான் எங்க காபிடல். ஆனா அதுதான் ஹரியானாவுக்கும் காபிடல்.

தமிழ்நாடு ஸ்டேட்டுக்கு மொத்தம் ரெண்டு காபிடல். ஆனா, அங்க எங்களுக்கு ரெண்டு ஸ்டேட்டுக்கு ஒரே காபிடல்… அதனால கனடாவுல என் கிட்ட which is யுவர் ஸ்டேட் காபிடல் என்று யாரவது கேட்டால் நான் பஞ்சாப்னுதான் சொல்லுவேன்.. எதுக்கு தேவை இல்லாம குழப்பனும். நீயும் உங்க ஸ்டேட் காபிடல் என்னனு கேட்டா இனி தமிழ்நாடுன்னு சொல்லிடு…என்ன? என்றார்.

இதை கேட்ட நான் டக்குனு, அவரை இழுத்து புடிச்சு பஜக்குனு ஒரு முத்தம் கொடுத்தேன்.

அதை பார்த்த அவர் பொண்டாடிக்கு புருஷன் அறிவை பார்த்து கண்ணுல ஆனந்த கண்ணீர் வந்துச்சு.