xingping – சீனா சென்றால் பார்க்க வேண்டிய ஒரு இடம். இது ஒரு hidden photography paradise . இது சென்ட்ரல் சீனாவில் லீ நதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமம். இங்கே ஓடும் நதியில் மீன் பிடித்து வாழும் மீனவ குடும்பங்கள் வசிக்கும் கிராமம் தான் சின்க்பிங். சின்க்பிங் செல்பவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டியது அந்தி சாயும் பொழுதில், மூங்கில் படகில் லீ நதியில் லாந்தர் விளக்கின் ஒளியில் பயணிப்பதுதான். சுமார் இரண்டு மணி நேரம் வரை இந்த நதியில் பயணம் செய்யலாம்.
சில குறிபட்ட இடங்களில் சூரியன் சாயும் போது மஞ்சள் வெயில் மலைகளின் வழியே ஊடிருவி, நதியின் நீரில் கலந்து லாந்தர் விளக்கின் ஒளியில் மின்னும். இங்கு ஏராளனமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. நீங்கள் ரூரல் சீனா வாழ்க்கையை பார்க்க இது ஒரு சிறந்த இடம். இந்த நதியை சுற்றி சுமார் 22 KM trail ஒன்று உள்ளது. இதில் நடந்து சென்று வர ஐந்து மணி நேரம் ஆகும்.
ஷங்கரின் “ஐ” படத்தில் வரும் ஒரு frame இல் சின்க்பிங் பார்த்தேன். P. C. ஸ்ரீராம் காமெராவில் சின்க்பிங் நதியை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.
Leave A Comment