சீத்தாபதி : குருவே, நான் தினமும் அதிகம் உழைக்கிறேன். கொடுத்த வேலையை விட பல மடங்கு கண் விழித்து உழைத்தும் நான் செய்யும் பல வேலைகளை என் மேனேஜர் சரியாக அங்கீகரிப்பதில்லை. வேண்டும் என்றே என்னை மட்டம் தட்டுவது போல் தெரிகிறதே….ஒவ்வொரு promotion போதும் எனக்கு பல்பு கொடுக்கிறார் ….ஏன்?

குருஜி : தாமஸ் ஆல்வா எடிசன், இரவு முழுவதும் கண் விழித்து, இருட்டில் கண்டுபிடித்த எலெக்ட்ரிக் விளக்கை அணைத்துவிட்டுதான் உலகில் பல முட்டாள்கள் தினமும் உறங்க போகிறார்கள். அதற்கு கவலை பட்டால் உலகுக்கு பல்பு கிடைத்து இருக்குமா?இல்லை.

செய்யும் வேலைக்கு அங்கீகாரம் என்பது அதுவா வரும். நீயா தேடி போவது expected அகங்காரம். உன் பிரச்சினை அது இல்லை. நீ ஒரு self loaded, selfish.

எடிசன் இரவில் உறங்குபவர்களுக்காக எலெக்ட்ரிக் விளக்கு கண்டுபிடிக்கவில்லை. இரவில் தூங்கும் அறிவாளிக்கு எரியும் விளக்கு தேவை இல்லை. அதைப்போல், பகலில் கண் முழித்து வேலை பார்க்கும் முட்டாள்களுக்கு வெளிச்சமும் தேவை இல்லை.

முதலில் நீ செய்யும் அதிகப்படியான வேலை, நீ உனக்கே எதிப்பார்போடு உருவாக்கிக் கொண்டது. எதிர்பார்த்து எதையும் செய்யாதே.

நீ செய்யும் வேலை முதலில், உன் மேனேஜருக்கு தேவையா என்று எண்ணிப்பார். நீயா ஒடிப்போய் ஒட்டகத்துக்கு சொரிஞ்சு விட்டாலும், அது குடிக்கிற தண்ணிதான் குடிக்கும்.

கொடுக்கும் காசுக்கு மேல், வேலை பார்ப்பது என்றும் தவறு. கேட்காத வேலையை நீயே விரும்பி செய்துவிட்டு மேனேஜர் சரியாக அங்கீகரிப்பதில்லை, கம்பனி எனக்கு promotion தரவில்லை, உழைத்த வேலைக்கு காசு தரவில்லை என்பது மடத்தனம். இதைத்தான் அறிவியலில் பல்பு வாங்குவது என்று சொல்லுவார்கள்.

தேவை எதுவோ, அதற்கு வேலை பார். தேவை இல்லமால் முதுகை உடைத்து வேலை பார்த்து கம்பனியை தூக்கி நிறுத்தியவன் இவ்வுலகில் எவனும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை.

மேனேஜர் அங்கீகாரம் கொடுக்க உழைக்காதே. கொடுத்த வேலையை மட்டும் முடித்துவிட்டு, இரவில் விளக்கை அணைத்துவிட்டு தூங்கு.

உன் மேனேஜர் வந்து தட்டி எழுப்பி உனக்கு அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் முழித்து இருக்க இன்னொரு வேலையையும் கொடுப்பார்.

அந்த கொடுத்த வேலையையும் smart டாக முடித்து தூங்க பழகு. வேலை முடிந்தவுடன், மீண்டும் பல்பை ஆப் செய்து தூங்க பழகு.

பல்பு, அணைக்காமல் எப்போதும் நான் பிசி என்று, பல்பு on செய்து office வேலையே கதி என்று செய்து பழகிவிட்டால் …ஒரு நாள், உன் மேனேஜர் வந்து பீஸ் புடுங்கிவிட்டு உன் கையில் பீஸ் போன பல்ப்பை கொடுத்து விட்டு போய் விடுவார்.

எடிசன் போல் எரியுதோ இல்லையோ, உலகத்துக்கு பல்பு கொடுத்து பழகு. நல்லா தூங்கு. தூங்காம கம்பெனிக்காக ஓவரா வேலை பார்த்தவன் எனிக்காவது ஒரு நாள் பல்பு வாங்கியே தீருவான்.

வரலாறு, இந்த கம்பெனியை நான்தான் கஷ்டப்பட்டு துக்கி நிறுத்தினேன் என்பவனைதான் முதலில் கம்பெனியை விட்டு தூக்கி எறிந்து உள்ளது.

இதுதான் Steve jobs க்கு பொருந்தியது. முதலில் தூக்கி எரியப்பட்டு மீண்டும் வந்து சாதித்தார்.

இதுதான் எல்லா job க்கும் பொருந்தும்.