Maryellen Kennedy Duckett – இவர் ஒரு travel blogger. இவர் எழுதிய 100 Secrets of the Smokies: A Savvy Traveler’s Guide என்பது ஒரு அறுசுவை பயண புத்தகம். சமீபத்தில் இவர் National Geographic இதழில் எழுதிய பதிவில் 2015 ஆண்டில் குளிர்காலத்தில் செல்லக்கூடிய முக்கிய இடங்களில் பின்லாந்தில் உள்ள – Reindeer-Drawn Sleigh Ride Safari பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார்.
இதை நேற்று Lunch Break சமயத்தில் இந்த மாத Nat Geo இதழில் படித்தேன். இதை படித்த போது கொஞ்சம் ஆர்டிக் வரலாறு, மக்கள் காலாச்சாரம் எல்லாம் கலந்து என் மனதில் தோன்றியது. அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது…
Maryellen Kennedy Duckett குறிப்பிடுவது, பின்லாந்தில் உள்ள ஒரு இடம். இங்கு ஆர்டிக் மான்கள் எனப்படும் கரிபு இழுத்து செல்லும் பனி Sleigh Ride உலக பிரசித்தம். பொதுவாக டிசம்பர் மாதம் முதல் கிருஸ்துமஸ் வரை இங்கே வெளிநாட்டு பயணிகள் குமிந்து இந்த மான்களை ஒட்டி மகிழ்வார்கள். பனி சறுக்கும், புள்ளி இல்லாத மான்கள் என்றால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது – “சாந்தா” தான். யார் இந்த சாந்தா? அவர் வேறு யாரும் இல்லை….
அடியே “சாந்தா” என்று தமிழில் அன்போடு அழைக்கப்படும் ஆங்கில “Santa Claus” தான், கிருஸ்த்மஸ் முன் தினம், மொத்தம் 8 கரிபுக்கள் பூட்டிய பனி சறுக்கில் வந்து பரிசுகள் தருவார் என்பது இருநூறு ஆண்டு ஐதீகம் .
இந்த சாந்தா ஏன், முதிலில் இந்த ஆர்டிக் மானை பிடித்தார் என்பதை பார்ப்போம். இந்த மான்கள் பற்றியும், மான்கள் பூட்டிய பனி sledge பற்றியும் ஒரு முன்னோட்டம்.
Reindeer எனப்படுவது நார்த் அமெரிக்கன் கரிபு. இதன் அறிவியல் பெயர் Rangifer tarandus. இது ஆர்டிக், Subarctic, tundra, boreal மற்றும் வட ஐரோப்பா மற்றும் Siberia எல்லையில் வசிக்கும் ஒரு மான் வகை. பெரும்பாலும் கொம்புகள் உள்ளவை ஆண் கரிபுக்கள் தான். வழக்கம் போல் Clement C. Moore என்ற ஒரு புலமை பித்தன் – The Night Before Christmas என்ற பாடலை 1832 ஆம் ஆண்டு எழுதிவிட்டு போன பின்பு, அதுவே ஒரு மெதுவாக ஒரு உண்மை கதை போல் பரவ தொடங்கியது.
இது பின்பு ஜெர்மனி, பின்லாந்து, டச்சு போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பிரபலம் அடைய தொடங்கியது. அமெரிக்காவில் ஒரு சரவணா ஸ்டோர் பல நெடுங்காலமாக இருந்தது. அதன் பெயர் Montgomery Ward (1872–2000). இது தான் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட department செயின் of Stores. இது 2000 ஆம் ஆண்டில் கடையை இழுத்து மூடியது.
Robert L. May என்பவர் – Rudolph (the red-nosed reindeer) என்ற கதையை எழுதி இந்த ஸ்டோர் மூலம் குழந்தைகளுக்கு புத்தகங்கள் விற்க முற்பட்டார். அந்த கதையில் மானுக்கு சிவப்பு மூக்கு. அதனால் தன் படுக்கை அறையில் ஒரு மானுக்கு சிவப்பு மூக்கை தன் கதையில் இருப்பது போல ஒளிறவிட்டார்.
கிருஸ்துமஸ் முன் தினம் சாந்தா அந்த வீட்டுக்கு வரும் போது பனி மூட்டம் அதிகமாக இருந்தது. சாந்தா இவர் வீட்டுக்கு வந்து பரிசு கொடுக்க கதவை திறந்த போது அந்த சிவப்பு மானின் மூக்கை பார்த்து தனக்கு இந்த பனியில், எல்லோர் வீட்டுக்கும் சென்று உதவ அந்த மானுடன் வருமாறு கேட்டுக்கொண்டது. பின் அவர் அந்த மானுடன், பனி சறுக்கி முன் நடத்தி செல்ல எல்லோர் வீட்டுக்கும் சாந்தா சென்று பரிசு அளித்தார்.
இந்த செய்தி, கதையாய் …உலகம் எங்கும் பரவியது. மொத்தம் 8 பறக்கும் மானுடன் சாந்தா கிருஸ்துமஸ் முன் தினம் பரிசுகளோடு வருவார் என்று குழந்தைகளை நம்ப வைத்தனர் கடைகாரர்கள். குழந்தைகளும் அதை நம்ப, பெற்றோர்கள் பரிசு வாங்க கடைகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்.
பின்னாளில், சாந்தா 8 மான்கள் பூட்டிய பனி ரதத்தில் வராமல் கிருஸ்த்மஸ் வாராது என்றாகியது. இந்த கதையே பின்பு உருமாறி பல கதைகளாகவும், டிவி சீரியல் மற்றும் படங்களாகவும் எடுக்கப்பட்டன. சரி, உண்மையாக இந்த மான்களை வைத்து பனி சறுக்கில் செல்வது எப்படி இருக்கும்?
டி. ராஜேந்தர், interstellar படத்தில் நடிப்பதை போன்று இருக்கும். உண்மையில் இவை காட்டு விலங்குகள். இவைகளை ” Domestication” செய்ய முடியாது. கட்டுப்பாடு இல்லாமல் தலை தெறித்து ஓடும் இவைகளை இதிகாச வெங்காயத்தில் வேக வைத்து, ட்ரைனிங் செய்து பனி சறுக்கில் ஓட வைக்கிறார்கள். பின்லாந்தில் இதை வளர்க்க ஒரு farm உள்ளது . http://www.luostonporosafarit.fi/en/home.php . இங்கே மாடுகளை போன்று இவைகளை வளர்த்து பின் கிறிஸ்துமஸ் காலங்களில் குழந்தைகளோடு சென்று சவாரி செய்து இன்பம் பெறலாம்.
இங்கே Luosto என்ற ஒரு கோடை வாசஸ்தலம் உள்ளது. பின்லாந்தின் ஹெல்சிங்கியில் இருந்து ஒரு மணிநேர விமான பயணத்தில் இங்கு சென்று அடையலாம். இங்கு தான் இந்த மான்களை வைத்து வித்தை காட்டுகிறார்கள். இதை போல் அலாஸ்காவில் இரண்டு இடங்கள் உள்ளன. கனடாவில் வடக்கே Inuit மக்கள் வாழும் பகுதியில் இப்பிடி இந்த மான்களை உபயோக்கிறார்கள்.
சாமி என்ற பழங்குடிகள் மட்டுமே, இந்த மான்களை நோர்வே மட்டும் ஸ்வீடன் நாடுகளில் வளர்க licence தருகிறார்கள். ஐரோப்பாவில் சில தடைகள் இருப்பினும் வேண்டுமானால் பிடித்துவந்து வீட்டில் கட்டி போட்டு வளரக்கலாம்.
சரி, இதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த மாத ஆர்டிக் தொடரில் எழுதுகிறேன்.
Leave A Comment