இன்று surrey leisure கிளப் சென்று இருந்தேன். வெளியே பயங்கர குளிர். Swimming செய்துவிட்டு உடம்பை சூடு ஏற்ற jacuzzi யில் இறங்கினேன்.
வழக்கத்தை விட தண்ணீர் சூடு கம்மியாக இருந்தது. அருகில் இருந்த சீன பொண்ணு தன் தோழியிடம் ” வாட்டர் is some what cold ” என்றாள் .
என் அருகில் ஒரு 60 வயது பஞ்சாபி பெரியவர் வந்து அமர்ந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன். .
இப்பதான் பஞ்சாபில் இருந்து வந்தாராம். அவ்வளவாக அவருக்கு இங்கிலீஷ் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் அரைகுறையாக இங்கிலீஷ் பேசினார்.
Where are you from என்றார் …
I am from the great தமிழ்நாடு என்றேன்…
உடனே oh காவேரி …நோ வாட்டர் … ஆஹா அஹா, ஒ ஓ ஊ …என்று தாடியை சொறிந்து கொண்டே சொன்னார்.
How is Punjab என்றேன்…அதற்கு அவர் மீசையை முறுக்கிக் கொண்டே பஞ்சாப் is ஹாட் …பின் தாடியை சொறிந்துகொண்டே you know….Punjabis are also வெரி hot என்றார்…
You know ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ், பியாஸ் ….All flowing down in punjab….சூப்பர் வாட்டர் , always வாட்டர் …எனி டே …நோ problem .
பஞ்சாப் is ஹாட் …Punjabis are வெரி hot என்று சத்தம் போட்டு மீண்டும் என்று திமிருடன் சொன்னார் .
அருகில் இருந்த சீன பெண்கள் என்னை ஏளனமாக பார்த்தார்கள்.
எனக்கு கடுப்பாகி போனது…
அவர் கண்களை மூடி ஏதோ தியானம் செய்வது போல் அமர்ந்து இருந்தார்.
என் முட்டியை சுற்றி சுடுநீர் மெதுவாக பரவியது. நான் உடனே ,டக் என்று எழுந்து வந்தேன்.
கண்களை திறந்து பார்த்த பஞ்சாபி, why ஆர் யு going ? finished என்றார்.
நான் உடனே, You are a hot guy from punjab, you are generating hot water underneath…என்றேன்.
அவருக்கு நான் சொல்வது புரியும் முன் அருகில் இருந்த சீன பெண்கள் அவரை விட்டு சிதறி வெளியே ஓடினார்கள்.
வாட் வாட்??? என்றார்…
யு are a hot Punjabi என்றேன்.
yeah yeah என்றார் புரியாமல்…
Leave A Comment