Apothecary is a 2014 Malayalam psychological thriller film. சுரேஷ் கோபி, விருமாண்டி அபிராமி, ஜெயசூர்யா நடித்து உள்ளனர். ஒரு டாக்டரின் மனசாட்சி, நோயாளிகளின் மனம் வழியே பேயாக பேச வைத்து இருக்கிறார்கள்.

என்ன கொஞ்சம் ஓவராக சில இடங்களில் பயம் காட்டுகிறார்கள். இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்காமல் இருக்கலாம். மற்றபடி சொல்லவந்த கருத்தை, படம் நன்றாக சொல்லுகின்றது. corporate மருந்து கம்பெனிகள் செய்யும் தில்லு முல்லுவும் அதற்க்கு துணை போகும் கொடூரமும் தெளிவாக யதார்த்தமாக சொல்லப்பட்டு இருக்கும்.

ஓரே ஒரு வீடு, ஒரு hospital …இதை வைத்து அட்டகாசமாக எடுத்து உள்ளார்கள். சுரேஷ் கோபியின் நடிப்பும், ஜெயசூர்யாவின் நடிப்பும் கவனிக்க தக்கவை.

மற்றபடி இது மனசாட்சிகளின் போராட்டம். ஒரு முறை பார்க்காலாம். குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.

எனக்கு பிடித்தது: கருத்தும், கருத்தம்மா அபிராமியும் ( ரொம்ப நாள் கழித்து… அபிராமி அபிராமி)
பிடிக்காதது: ஓவர் பேய்களின் நடமாட்டம், கொஞ்சம் குறைத்து இருக்கலாம்

மெலோ ட்ராமா வகை, psyco படம் பார்பவர்களுக்கு மட்டும்

www.sridar.com Rating: 5.5