நூறடிப் பயணம் ….

சாப்பாடு, ரெஸ்டாரென்ட், சுவை, இந்தியன், யுரோப் …. Super.

Steven ஸ்பீல்பெர்க், Oprah வின்பிரே …இவுங்க காசு போட்டு நம்பி எடுத்த படம்.  நம்பி பார்க்கலாம்.

ஒரு இந்திய குடும்பம் பிரான்ஸ் சென்று ஒரு இந்தியன் ரெஸ்டாரென்ட் ஓபன் செய்கிறது. படத்தின் ஹீரோ Hassan Kadam (Manish Dayal) …இவர் ஒரு பிறவி சமையல் புலி. இவுங்க அப்பா ஓம் பூரி. ஒரு தம்பி, ஒரு தங்கச்சி. மூட்டையை கட்டிக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் சென்று ஒரு கிராமத்தில் கடையை விரிக்கிறார்கள். எதிரே ஒரு ஆயா, 100 ஆண்டுகள் பாரம்பரிய ஆப்பக்கடை ஒன்றை நடத்திவருகிறது. பிசினஸ் போட்டி, பொறாமை, திறமை …இதை இந்த படம் இந்திய மசாலா கலந்து சொல்லுது.

இந்த படத்தில் கேமரா கவிதை பாடும். தமிழ் இசை கூட ஆடும் ( A. R. ரஹ்மான்)

எனக்கு புடிச்சது: ரெஸ்டாரென்ட் இருக்கும் Hamlet, ஹீரோ சுடும் ஆம்லட்
புடிக்காதது: ரெண்டு கிழடுகள் ஒண்ணா சேருவது, heroine close up shots ( இதை தெரிஞ்சு ஒரு மாதிரியான ஆங்கிளில் ஒப்பேத்தி இருப்பார்கள்)

கண்டிப்பா ஒரு இந்தியனா பாருங்க ….ha haa, ஒ ஓ கிடையாது… ரசனை, ருசி, அழகு இது மூணுக்கும் நான் காரண்டீ…

 

www.sridar.com Rating: 6.5

_________________________________________________
Directed by: Lasse Hallström
Produced by: Steven Spielberg
Oprah Winfrey
Juliet Blake
Written by: Steven Knight
Based on The Hundred-Foot Journey by Richard C. Morais
Starring: Helen Mirren,Om Puri, Manish Dayal, Charlotte Le Bon
Music by A. R. Rahman
Cinematography: Linus Sandgren