Parents டீச்சர் மீட்டிங்:

இந்த முறை நான் மட்டும் பையன் கூட போனேன். எனக்கு அவன் படிப்பை பற்றி அதிகம் கவலை இல்லை. கம்ப்ளைன்ட் எதுவும் இதுவரை ஸ்கூலில் இருந்து வந்ததில்லை. ஆனால், என்னிடம் ஒரு கம்ப்ளைன்ட் வாத்தியிடம் டீல் செய்ய உள்ளது.

நம்ம பையன் ஒல்லி பிச்சான். ஸ்கூல்லுக்கு கொடுக்கும் சாப்பாடு சரியாக முழுவதும் சாப்பிடுவதில்லை என்று ஒரு சந்தேகம். Friends க்கு சாப்பிட கொடுத்துட்டு இவரு சாப்பிடாம வரார்னு எனக்கு ஒரு சந்தேகம். காரணம் லஞ்ச் பாக்ஸ் காலியாக இருக்கும். ஜட்டி சைஸ் ஒரு அஞ்சு வருசமா increase ஆகவில்லை.

பையன்கிட்ட வீட்டில் கிளம்பும் போது கேட்டேன். உங்க வாத்தியார் கிட்ட கேட்கட்டுமா என்ன மேட்டருன்னு?

அதுக்கு அவுரு, நான் friends க்கு கொடுபதில்லை என்றான்.

சரி, இந்த parent டீச்சர் மீட்டிங்ல் உங்க வாத்தியார் கிட்ட நான் கேட்க போறேன்னு சொன்னேன்.

அதை ஏன் வாத்தியார் கிட்ட கேட்கறீங்க என்று இழுத்தான்…

பையன் திரு திருன்னு முழுச்சான். வகையா சிக்கிடான்னு நினைச்சு அவன் கூட மீட்டிங் போனேன்.
மனைவி கிட்ட ஒரு பதிலோட வரேன்னு சொல்லிட்டு போனேன்.

மீட்டிங் ரூம் போகும் முன் மீண்டும் ஒரு முறை ஒரு லைட் மிரட்டல் ஹஸ்கி வாய்சில் ஹம்மிங் செய்தேன்..

“வாத்தி … சாப்பாடு … லஞ்ச் பாக்ஸ் … காலி … நீயும் கொஞ்ச நேரத்தில் காலி மகனே …” என்று.

பையன் மீண்டும் முழிச்சான்.

கதவு திறந்தது…

வெள்ளைக்கார வாத்தியார். குறுந்தாடியுடன் குறுகுறுன்னு இருந்தார்.

வாங்க வாங்க என்றார். நீங்க தான் கிரீஸ் அப்பாவா என்றார்.

ஆம் என்று சொல்லிவிட்டு, என் வாயை திறந்து என் கம்ப்ளைன்ட் சொல்லுவதற்குள் …

சார் உங்க வீட்டு ” Potato fry ” சூப்பர். அப்புறம் அந்த indian chiken gravy சூப்பர் என்றார்.

அடுத்த 15 நிமிடங்களுக்கு என் காதில் எதுவும் விழவில்லை.

கதவு மூடும் போது, திரும்பி பார்த்தேன். போன முறை விட வாத்தி ஒரு சுற்று குண்டாக இருந்தார்.