இன்று ஹலோவீன். இது வான்கூவர் ஸ்பெஷல் Edition.
இது தெரிஞ்சே செத்தவன், சுண்ணாம்பானவன், சாத்தான், குட்டி சாத்தான், பெரிய சாத்தான், குட்டி செவுருல மேல உட்காந்து காலாட்டிட்டு இருப்பவன், முட்டை கண்ணன், முடி வெட்டாத முழுக்கண்ணன், ஒத்தை கண்ணன், வெள்ளை புடவை மோகினி, மஞ்ச புடவை ரோகினி, காடேறி காஞ்சனா, முட்டை கண்ணி, துப்பாகியோட அலையும் துர்பாக்கியவதி, கஞ்சா அடிச்சு செத்தவன், காதல் கைகூடாம கடலில் விழுந்தவன், பாலிடால் குடித்து செத்தவன், கயித்தில தொங்கினவன், மஞ்ச கயித்த கட்டினதால வாழ்ந்துகிட்டே சாகிறவன், ரத்தம் இல்லாம செத்து போனவன், ரத்தம் கக்கி செத்துப்போனவன், ரயிலில் இவன் ஏறாமல் இவன் மேல் ரயிலை ஓட விட்டவன், பித்து புடிச்சு செத்தவன், ரத்பத்து போட்டுட்டு செத்தவன் என பல ரக பிசாசுகளின் நினைவாக கொண்டாடப்படும் ஒரு கருப்பு நாள்.
இது பழமையான செல்டிக் திருவிழாவில் இருந்து தோன்றிய பயக்க வயக்கம் ஆகும். இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான கேப் – பை அடைக்க ஆவிகளுக்கு மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதற்கும் இதை கொண்டாடுகிறார்கள். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் இந்த நாளில் அணிந்து கொண்டாடுகின்றனர்.
இன்று பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. இது கெட்ட ஆவிகளை சமாதானப்படுத்த செய்யப்படுகிறது.
சரி வான்கூவரில் பேய்கள் உள்ளனவா? இதற்கு பதில் எனக்கு தெரியாது. இருந்தாலும் பேய்களை பார்த்த பலர் சொல்லி மிக பிரபலமான பேய் உலாவும் இடங்களின் லிஸ்ட் இதோ.
போய் பாருங்கள். சென்று பார்த்துவிட்டு, அதிர்ஷ்டம் இருந்தால் மீண்டும் திரும்பி வரலாம்.
காஸ் டவுன் ( Gas Town – Downtown, Vancouver) :
புஸ் என்று இங்கு காஸ் மட்டும் வருவதில்லை. புகை மூட்டம் இடையே நூறு ஆண்டுகளுக்கு முன் ரயிலில் அடிப்பட்ட ஒருவனின் ஆவி இரவில் கஞ்சா அடித்துவிட்டு சுற்றுபவோனோடு அடிக்கடி தகராறு செய்கிறதாம். இந்த பேய் தான் வெரி famous. பிக்காலி பசங்க, இதுக்கு ஒரு டூர் வேற வச்சு காசு பாக்கிறாங்க. வெப்சைட் போய் படிங்க. http://www.ghostlygastowntours.com/
இதில FAQ பக்கம் போய் படிச்சேன் ( http://www.ghostlygastowntours.com/#!about1/cb7z). Where do we meet? னு போட்டு இருக்காங்க. இது ஓகே. Whether we will return back? னு ஒரு கேள்வியும் இல்லை அதுக்கு பதிலும் இல்லை.
அடுத்து Old Spaghetti Factory in Gastown. http://www.oldspaghettifactory.ca/locations/british-columbia/gastown,vancouver/. இந்த உணவகத்தில் எடுக்கப்பட்ட ஆவியின் படங்கள் உலக பிரசித்தம். முடிந்தால் இன்று இரவு சென்று ரயிலில் அடிபட்டு இருந்த conductor ஆவியிடம் டிக்கட் வாங்கி நரகம் செல்லாலாம்.
அடுத்து பேய்கள் அதிகம் உலாவுவது, வாட்டர் பிரான்ட் ( Water Front) ஸ்டேஷன் ஹால்:
பேய்கள் பார்வை நேரம் இரவு 1.30 முதல் காலை 3.30 வரை ( ரயில் கிடைக்காதவன், பேய்களுடன் ஓடி பிடித்து விளையாடலாம். தோத்தவங்க கலையில் வரும் முதல் ஸ்கை train முன் குதிக்க வேண்டும்…எப்புடி?
அடுத்து King Edward and Cambie எதிரே Canada Line station அருகே இருக்கும் பேய் வீடு. புத்த பிட்சுக்கள் மட்டுமே இங்கு இப்போது தங்கி உள்ளார்கள். இரவு பகல் என எப்போதும் இங்கு விளக்குகள் அணைக்கப்படுவதில்லை. வேண்டுமானால் ராஜ பக்சேவை இந்த கும்பலோடு சேர்த்து விடலாம். தமிழக மீனவர்கள் சந்தோசம் அடைவார்கள்.
அடுத்து Vancouver Hycroft Mansion: இங்கு பேய்கள் வருடாந்திர மாநாடு நடத்துமாம். இந்த பில்டிங் ப்ளாக் அண்ட் வைட் போட்டோவை பார்த்தாலே ரணகளமா இருக்கு. இதுவும் உலக பிரசித்தம். இங்குதான் The University Women’s Club of Vancouver இருக்கிறது. அவர்களும் இங்குதான் கூட்டம் நடத்துகின்றார்கள்.. ஏன்? ஒருவேளை இந்த கூட்டத்தில் வரும் சத்தம்தான், பேய்களின் சத்தம் என்று தவறாக புரிந்துகொண்டார்களா? என்னோமோ போடா குட்டி சாத்தான்.
THE HITCHHIKER AT UBC UNIVERSITY BOULEVARD: உங்க பசங்க UBC ல் படிச்சா சொல்லி வைங்க. ஒரு அழாகான பொண்ணு, காலேஜ் படிக்கிற பையனை இரவில் நிறுத்தி லைப்ரரி அட்ரஸ் கொண்ட சீட்டை நீட்டும். வழி சொன்னவுடன் நீங்க கார்ல போனா பின்னாடி சீட்டில் ஏறி உட்காந்துக்கும். நடந்து போனா பட்டுன்னு மறைஞ்சிடும். இதை பல மாணவர்கள் ரிப்போர்ட் செய்து உள்ளார்கள் என்று வதந்தீ. முக்கியமா நோட் செய்ய வேண்டியது, எல்லா பசங்களும் அந்த பேய் பொண்ணு அழகுன்னு சொல்லி இருக்கானுங்க. அதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.
இதை தவிர ஹோட்டல் வான்கூவரில் ஒரு சிவப்பு உடை அணிந்த பேய் உள்ளது. Vouge திரை அரங்கிலும் ஒரு குட்டி பிசாசு உள்ளதாம். இவை ரெண்டுக்கும் வயசாகி விட்டதால் பிரச்சினை இல்லையாம். நான் இவ்வளவு சொல்லியும் நீங்க வான்கூவரில் பேய் இருப்பதை நம்பவில்லை என்றால், இன்று தான் சரியான நாள். போய் பாருங்கள்.
இல்லை என்றால், எனக்கு Message அனுப்புங்கள். எனக்கு ரெண்டு Surrey பஞ்சாபி பேய்களுடன் பழக்க வழக்கம் உள்ளது. பொற் கோயிலில், பிந்திரன் வாலேவுடன் குண்டு அடிபட்டு செத்த தீவிரவாதி பேய்கள். இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு காந்தி வழியில், கனடா பென்ஷன் வாங்கிட்டு பொழுதை கழிகிதுங்க.
வேணும்ன்னா, இன்று இரவு நாம், கரடி கிரீக் பார்க்கில் (Bear Creek Park), இந்த பஞ்சாபி பேய்களுடன் சீட்டு கட்டு விளையாடிக் கொண்டே, ரத்த சமோசா சாப்பிடலாம்.
Leave A Comment