கண்ணே தீபா,
தீபாவளி முடிஞ்சு போச்சு, ஆனா
எல்லாமே முடிஞ்சு போகல என் செல்லமே.
என் மனசு நீ தீபாவளிக்கு சுட்ட
மைசூர்பா மாதிரி கல்லு இல்லை
நீ எவ்வளவுதான் திட்டினாலும், நான்
முறுக்கா முறுக்கிக்கிட்டு போகமாட்டேன்
அதுக்காக என்னை, பால் மனுசு கொண்ட
பால் பாயாசம்னு மட்டும் நினைச்சுடாதே
எப்படி நீ கழுவி ஊத்தினாலும், உன்னை
ஜவ்வாய் ஒட்டும் கோதுமை அல்வாதான் நான்
புரிஞ்சிக்கோ, நான் கருப்பா இருந்தாலும்
தீஞ்சி போன அதிரசமும் இல்லை
செவப்பா இருக்கிறதால, நீ ஒன்னும்
சேட்டு வூட்டு ரவா லட்டும் இல்லை
Fact Fact தான், தப்பு உன் மேலதான்
புரிஞ்சிக்கோ என் புண்ணாக்கே
எதுக்கு எடுத்தாலும் எண்ணையில் போட்ட
காரா பூந்தியாய் பொறிஞ்சு தள்ளாதே
கூலாகி, கும்முன்னு மார்வாடி வீட்டு
ரசமலாய் போல் ரம்மியமாய் இரு
சீரகம் போட்ட சீடைக்கு ஆசைப்பட்டவனை
கிரகம் பிடிச்ச பீடை என்று திட்டாதே
முட்ட முட்ட முழிச்சதால் நான்
முறுகலான முந்திரி பகோடாவும் இல்லை.
கண்ணம் சிவக்க என்னை அடித்ததால் மட்டும்
நீ சாப்டான காரட் அல்வாவும் இல்லை
இப்பவாவது புரிஞ்சிருக்கும்..
நான் ஒரு ஊசிப் போன தட்டை வடை
நீ அதை போட்டு எடுத்த கரி சட்டி
இதுக்கும் மேல திட்டுன, ஓலை பகோடா போல்
பட படன்னு ஓடைஞ்சுடுவேன்
சொன்னதையே சொல்லி, கடுப்பேத்தாதே
என் கோனை கொழுகட்டையே
சாந்தமான ஒரு குலாப் ஜாமுனை
காரமுள்ள காராசேவாய் மாற்றி விடாதே
தண்ணிபட்ட எண்ணெயாய் வெடிக்காதே
ஐயங்கார் பேக்கிரி வெண்ணையே
கோவத்தை ஆறவிட்டு ஜாடியில்
மூடி வைடி என் ஸ்வீட் கேசரியே
சண்டைங்கிறது தீபாவளி மாதிரி
அடிக்கடி வரக்கூடாது என் ஜிலேபியே.
உலகத்தில எல்லா பலகாரமும்
எதோ ஒரு மாவிலதான் சுடுவாங்க
அதுக்காக பலகாரம் சுட்ட புருஷனை
ஒன்னும் தெரியாத மாவாய் நினைக்காதே
வாழ்க்கை என்பது தீபாவளி மாதிரி
ஸ்வீட் கொஞ்சம், காரம்தான் மீதி
கொஞ்சம் கொஞ்சமாய், விட்டு விட்டு
வெடியாய் வெடிக்கணும் சண்டைகள்
உன் அட்வைஸ் ஒன்னும்
பத்தாயிரம் வாலா சரவெடி இல்லை
ஊசி பாட்டாசு மாதிரி சுருக்கமா பேசு
பாம்பு மாத்திரையா பேசி பேசியே நாறடிக்காதே
நம் வாழ்க்கை ராக்கெட் போல பறக்கனுமா
இல்லை, புஸ்வானம் போல புஸ்சாகனுமா?
எல்லாம், உன் கையில தான் இருக்கு,
அதனால மெதுவா அடி, வலிக்காம அடி
இந்த தீபாவளி முடிஞ்சு போச்சு. இதை
தீபா கொடுத்த ‘தீபா’ ‘வலியா’ மாத்திடாதே !!!
இப்படிக்கு
தீப ஒளி தீபாகரன்
Yennava feel pandrarurya 🙂
sombu romba adi vaangidichu.
இவ்வளவு விஷயமா
Any problem ?
ha ha…100% karpanai kathai Bala Murali
எல்லா குடும்பத்திருக்கும் பொருந்தும் செய்தியோ…ரொம்ப பிடித்த வரிகள்
“ஊசி பட்டாசு மாதிரி சுருக்கமா பேசு
பாம்பு மாத்திரையா பேசி பேசியே நாறடிக்காதே”
பல்லாட்டங்காணும்வரை
பலகாரம் போட்டுவிட்டு
பலசரக்கும் காட்டிவிட்டு
பல வலிகளை பல வழிகளில்
பார்த்துப் பார்த்து வலிந்து வலிந்து
படபடவென பட்டாசாய் வெடித்து
பல்சுவையையும் படிக்க மட்டும்
பாங்குடன் கொடுத்து விட்டீர்
பயப்படவும் வைத்து விட்டீர்
பார்த்திவற்றை யென் துணைவி
படைத்திடவே யெமைக்கேட்டால்
பாய்ந்தோட வேண்டுமென்றே.
டூ பிக் !