இன்று உலக தற்கொலை தினம்.

இதே நாளில் கிரேக்க நாட்டில் ஒரு குழந்தை பிறந்தது. அப்போது 69 BC.
குழந்தையின் பெயர் கிளியோபாட்ரா.

ஒரு பேரரழிகி. கிரேக்க வரலாறு இப்பிடித்தான் எழுதப்பட்டு உள்ளது.

“இவள் மட்டும் தான் பிறக்கும் போதும் அழகாய் இருந்தவள் .இறக்கும் போதும் அழகாய் இறந்தவள்”

இவள், தந்தை இறந்தபின்பு தன் சகோதரனுடன் அரியணை ஏறிய கடைசி எகிப்து ராணி. எகிப்தில், சகோதரனை திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. தன் தந்தை இறந்த பின்பு, பத்து வயது உள்ள Ptolemy XIII என்ற தன் சகோதரனை மணந்து எகிப்து நாட்டின் அழகிய ராணி ஆனாள். இவள் மிக புத்திசாலி ராணியும் கூட. பிளவுபட்ட எகிப்து நாட்டை ஒருங்கே கொண்டுவந்து ஆட்சி செய்தாள். வீரம் மட்டும் இல்லை, மிக தைரியம் மிக்க ராணியும் ஆவாள் .

ரோமாபுரியில் ஆட்சி மாற்றம் நடக்க, எகிப்து நாட்டில் ரோம அரசு நுழைந்தது. ஜூலியஸ் சீசரை கரம் பிடித்தாள். இவளை மறைந்து நின்று காதலித்தவர்கள் கணக்கில் அடங்காது. இவர் மறைமுகமாக காதலித்தவர்களும் கணக்கில் அடங்காது. சீசர் மறைந்த பின்பு மார்க் அந்தோணியை மணந்தாள். ஊருக்கு தெரிந்தும் தெரியாமலும் பிள்ளைகளை பெற்றாள்.

பின்பு மன உளைச்சலில் ஒரு நாள் இறக்க முடிவு எடுத்தாள். I mean suicide. தற்கொலை.

ஒருவர் செய்த தற்கொலையை பற்றி 1000 வருடங்களாக வரலாற்றில் சிலாகித்து எழுதியது கிளியோபாட்ராவவின் தற்கொலையை பற்றிதான். எண்ணில் அடங்கா ஓவியங்கள். கட்டு கட்டாக கட்டுக்கதைகள். காரணம் அவள் இறந்த விதம்.

உலகில் அதிகமாக தற்கொலைக்கு கரானமாய் இருப்பது “கயிறு”. நான் தாலி கயிறை சொல்லவில்லை.

1. Rope, 2. Jump 3. Poison 4. firearm 5. gases

ஆனால் அவள் உபயோகித்தது ஒரு கருந்தேளை. அவள் வாழ்ந்த காலத்தில் இருந்த புலவர்கள் சில பேர் அவள் பாலைவன ராஜநாகம் தன்னை கொத்த செய்து தற்கொலை செய்து கொண்டாள் என்கிறார்கள். இன்னும் சிலர், இவள் கொடிய விஷமுள்ள தேளை தன் மார்பகத்தில் கடிக்க செய்து கொண்டு இறந்துவிட்டாள் என்றும் சொல்கிறார்கள்.

இரண்டாவது காரணம் ஓவியர்களுக்கு ஒரு Art மற்றும் Hot Subject. பிண்ணி பெடலேடுத்து மாய்ந்து மாய்ந்து வரைந்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தது மூன்று ஓவியங்கள். மூன்றுமே உலக பிரசித்தம்.

Juan Luna 1881 ல் வரைந்த “கட்டிலில் கிடந்தாள் ” என்ற ஓவியம்.

the_death_of_cleopatra

Guido Cagnacci, 1658 வரைந்த ” அவள் இறந்துபோனாளே” என்ற ஓவியம். (பாம்பு தியரி)

640px-Guido_Cagnacci_003

Reginald Arthur, 1892 வரைந்த ” மார்பில் ரத்தம் ” ஓவியம். (தேள் தியரி)

kleopatros-mirtis-5346b6843b78b

இதுதான் வரலாற்றில் வெகுவாக டாகுமென்ட் செய்யப்பட்ட “ஒரு முதல் அழகிய தற்கொலை”. அன்றில் இருந்து இன்றுவரை எத்தனையோ தைரியசாலிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த தைரியசாளிகளில் இவளும் ஒருவள்.

International Association for Suicide Prevention (IASP) என்ற அமைப்பு ஒன்று உள்ளது. (http://www.iasp.info).

ஒருவேளை கிளியோபாட்ரா இந்த அமைப்பில் இருந்து இருந்தால் காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.
என்ன அற்புத தற்கொலை ஓவியங்கள் சில வரையாமல் வரலாறு எழுதப்பட்டு இருக்கும்.

முடிந்தால்இந்த தற்கொலை தவிர்க்கும் முறைகள் பற்றிய கட்டுரையை படித்து பாருங்கள். Article அட்டகாசமாக இருந்தது.

http://www.who.int/mental_health/suicide-prevention/world_report_2014/en/

சரி, இதை ஏன் படிக்கணும்? காரணம் கனடாவில்தான் அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன. முக்கியமாக BC யில் அதிகம்.
BC தான் உலகத்தில் அதிக தற்கொலைகள் நடக்கும் இரண்டாம் இடம். உலகில் அழகான இடத்தில தற்கொலையா?

அழகு இருக்கும் இடத்தில் தொல்லையும் இருக்கும். கொலையும் நடக்கும்.

நுனாவுட் – ஒரு தற்கொலை நகரம். ஒரு காலத்தில் 30,000 பேர் இருந்த ஊரில், இறந்த 40% பேர் தற்கொலைகளில்தான் இறந்தார்கள். ஆறு வாரத்துக்கு ஒரு முறை சங்கு ஊதப்படும். முக்கிய காரணம் BC யின் தட்பவெப்பம், மழை, தூறல்.

மழை மற்றும் குளிர் காலங்களில் வான்கோவர் மற்றும் ஏனைய BC யில் வாழும் மக்களுக்கு ஒரு சோகம் தானாக வந்துவிடும்.

இது ஒரு சமூக மற்றும், உளவியல் சப்ஜெக்ட்.

இதைப்பற்றி பின்பு எழுதுகிறேன். இப்போதைக்கு இது போதும்.

நாளை உலக தற்கொலை தினம்.

நாளை யாருக்காவது திருமண நாளாக இருப்பின் அதையும் இதையும் தொடர்புபடுத்த வேண்டாம்.