சீடன் சீத்தாபதி கேள்வி.
குருவே, எனக்கு வர வர அதிகமாக கோவம் வருகிறது.
எதற்கெடுத்தாலும் வரும் இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
இதற்கு யார் மூல காரணம்?
சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டரின் பதில் :
டேய் சீத்தாபதி, நம்ம வாழ்க்கை ஒரு கோதுமை மாவு மாதிரி.
சகிப்பு தன்மை தண்ணி மாதிரி.
இரண்டையும் சரியா மிக்ஸ் செஞ்சு, வாழ்க்கை என்ற மாவை எப்படி வேண்டுமானலும் நாம நினைச்சபடி உருட்டலாம்.
எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு.
சாந்தமான வாழ்க்கை சப்பாத்தி மாதிரி. கோவமான வாழக்கை சூடான உப்பிய பூரி மாதிரி.
எதுக்கெடுத்தாலும் பட படன்னு, எண்ணையில் விழுந்த பூரி மாதிரி கோவத்துல பொறிஞ்சு தள்ளக்கூடாது.
பூரி பொரிஞ்சு சிவப்பானாலும், நம்ம கண் சிவப்பானாலும் உடம்புக்கு கெடுதல்.
தேவை, அமைதி மட்டுமே.
ஒரு மணி நேரம் அமைதியா இருந்து பார்.
பூரி அமுங்கி Flat ஆன மாதிரி, நீயும் கோவம் கம்மி ஆகி Flat-டாகி அமைதியா போயிடுவே.
உடனே நீ கேட்கலாம், அப்ப கடாயில் வேகும் சூடான எண்ணெய் யாருன்னு?
அதுதான் கட்டின பொண்டாட்டி.
உலகத்தில் உள்ள எல்லா பூரிகளும் இந்த வீணாப்போன எண்ணையால்தான் வேகுதுங்க.
ஒருத்தன் வாழ்க்கையில் ஒரு காடாயில் ஊத்தின பழைய Oil லை வச்சுக்கிட்டு படற வேதனை இருக்கே… அது ஒரு இத்துப்போன இதிகாசம்.
இது தான் நம்ம கோவத்தின் Source Code.
இதை என்க்ரிப்டும் செய்யமுடியாது, டீக்ரிப்டும் செய்யமுடியாது.
என்னடா, இந்த எண்ணெய் பழசா இருக்கு மாத்தலாம்னு ட்ரை செஞ்சே, மவனே
அவுங்க உன் வீட்டு கிச்சனையே கூலா எரிச்சுட்டு போயிடுவாங்க. அதனால சீதாபதி கோவபடாதே. சூதனமா இரு.
‘பூரி-யும், புரி-யாத வாழ்க்கையும்” என்னும் புத்தகத்தில்
” நீ பூரியா இல்லை சப்பாத்தியா? ” என்னும் அத்தியாயத்தில் – சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்.
வீட்டம்மாவை எண்ணெய் என்ற போது, அவங்க பதில் “போடா வெண்ணெய் “.
வெண்ணெய் – எண்ணெய் – Already used in Dosa Post sir, that’s why I didn’t use that in this writing.