கனடாவில் பிறந்த குழந்தைகள் இனி தமிழ் படிக்குமா? அவர்களுக்கு தமிழ் ஆர்வம் இருக்குமா? இல்லை போக போக எல்லா தமிழும் மறந்து போகுமா என்று எண்ணம் இருந்தால், இந்த கனேடியரை பற்றி ஒரு கணம் நினைத்து பாருங்கள். தமிழ் மொழிபற்றுக்கு கனடாவில் இவரை விட மிக சிறந்த உதாரணமாக, இன்னொருவரை நீங்கள் காட்ட முடியாது.

ஒரு கனேடியன் இறக்கும் முன் தன் உயிலில், இறப்புக்கு பின் தனது கல்லறையில் இப்பிடி எழுதவேண்டும் என்று எழுதிவிட்டு இறந்தார். “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

நம்ப முடிகிறதா?

இவர் ஒரு Canadian Born Citizen. பெயர் ஜி. யு. போப் (George Uglow Pope)

இவரை பற்றி படித்து இருப்பீர்கள். ஆனால் இவர் ஒரு அக்மார்க் கனேடியன் என்று உங்களுக்கு தெரியுமா?

கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவு ( Price Edward Island) என்று ஒன்று கிழக்கே உள்ளது. அது என்ன தீவு என்கிறீர்களா? இந்த தீவின் அருகே தான் ” லியனார்டோ டி காப்ரியோ ‘ டைட்டானிக் நாயகனாக இறந்தார். கரெக்ட். உலகப்புகழ் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் முட்டி மூழ்கியது இந்த தீவின் அருகில் தான் . இந்த தீவில் இருந்தவர்கள்தான் படகில் சென்று பலரின் உயிரை காப்பாற்றினார்கள். இங்கே தான் இறந்தவர்களின் கல்லறைகளும் உள்ளன.

ஜி. யு. போப் ஏப்ரல் 24, 1820-ல் இந்த ஊரில் தான் பிறந்தார். கப்பல் மூழ்கியது இவர் இறந்து ( பெப்ரவரி 12, 1908) 4 ஆண்டுகள் கழித்துதான். சரி, மேட்டருக்கு வருவோம்.

ஜி. யு. போப், கனடாவில் பிறந்து பின்பு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். இவருக்கு தமிழ் என்றால் உயிர். சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு கப்பலில் வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களில் குடித்துவிட்டு, படுத்து தூங்காமல், ராவெல்லாம் தமிழை left and right படித்து பிய்த்து விட்டார்.

தமிழ் ஆர்வம் தலைக்கு ஏறி, 1886 ஆம் ஆண்டே திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை புத்தகமாக பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

தூத்துக்குடிக்கு அருகே தங்கி ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.

1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து return ஆன போப், அங்கு திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

1859 ஆண்டில் ஊட்டியில் தமிழ் இலக்கண வகுப்பை ஆரம்பித்தார். 1870 இல் பெங்களூரு சென்று ஒரு பள்ளியில் தமிழ் கற்பித்தார். அவர் அந்த பள்ளியின் Principal ஆனார். அந்த பள்ளி வேறு எதுவும் இல்லை, தி famous Bangalore Bishop Cotton’s School தான் அது.

Boys Bishop Cotton’s School லில் படித்த ஒரு பிரபலம்: ‘சின்ன தம்பி” பிரபு
Girls Bishop Cotton’s School லில் படித்த ஒரு பிரபலம் : பெரிய “அம்மா” – ஜெயலலிதா

Vancouver மற்றும் Surrey Library – போப் பற்றிய புத்தகங்கள் ஒன்று உள்ளது. (2011 -ல் ஒன்றை தேடி பிடித்து படித்தேன்)
அதில் ஒன்று ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படும் – அவரது திருவாசக மொழிபெயர்ப்பு.

இதை எப்போது எழுதினார்?

தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், ” நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்” என்று வற்புறுத்தி இருக்கிறார்.

அதற்கு போப், அது மிகப் பெரிய வேலை, அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை , பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர் “ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி. நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்”.

அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.
தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life’s literary work.”

போப் கல்லறையை இங்கிலாந்தில் தேடி பிடித்தேன்.
http://www.stsepulchres.org.uk/burials/pope_george.html

அமேசான் புக் லிங்க்:

http://www.amazon.com/Tiruvacagam-Sacred-Utterances-Tamil-Manikka-Vacagar/dp/1437341489/ref=sr_1_4?s=books&ie=UTF8&qid=1409267443&sr=1-4&keywords=GU+pope