எக்ஸாம் கண்டிப்பா attend செய்யணும். ஆனா correct answer தெரியாது. வெத்து பேப்பரில் எதையோ கிறுக்குவோம். கேள்வியையே பதிலாக எழுதுவோம். இதை தான் பார்த்திபன் செய்ய நினைத்து உள்ளார் .

பார்த்திபனுக்கு மீண்டும் Re Entry வேண்டும். வித்தியாசமா “சூது கவ்வும்” மாதிரி படம் செய்யணும். ஆனா எப்பிடின்னு தெரியாது.

அப்பிடி உருவான படம் தான்- கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருப்பது போல் தெரியும். ஆனால், உண்மையில் இதில் கதை இல்லை.

புதிய பாதை பார்த்திபனிடம் இருந்து ஒரு வித்யாசமான “மொக்கை” படம். அஞ்சான் பார்த்து அழுது கொண்டு இருப்பவர்களுக்கு வேண்டுமானாலும் இது ஆறுதல் தரலாம். மற்றபடி பில்ட் அப் செய்யும் அளவிற்கு ஒன்றும் இல்லை.

First Half – கொஞ்சம் சிரிக்கலாம். உளுந்து வடை ஜோக் “எந்தவகை ஜோக் ? பார்த்திபன் சார்?” இது 25 வருட பழைய மாவு. புது முயற்சி.

Not a complete Movie to Astonish.

எனக்கு பிடிக்கவில்லை. ஒரு முறை அஞ்சான் பார்த்துவிட்டு உடனே பார்த்தால் இது சூப்பர் படம்.

படத்தின் ஓரே ஆறுதல் தம்பி ராமையா. இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். இரண்டு மனைவிகளைக் கொண்ட உதவி இயக்குநராய், 58 வயதிலும் திரைத் துறையை நம்பிக் காத்திருக்கும் அவர், குணச்சித்திரத்திலும் நகைச்சுவையிலும் அசத்தியிருக்கிறார்.

மற்றபடி, சொத்தை கதா பாத்திரங்கள். உயிர் இல்லாத நடிப்பு.

ஓகே, ஓகே ராகம்…சாரி ரகம்.

www.sridar.com Rating: 4.0