நேத்து நைட் இந்த படம் பார்த்தேன். படம் சூப்பர்.

யாருப்பா அந்த ஹீரோ…செம கலக்கல் !!! கண்டிப்பா பாருங்க. ஏமாத்துவதை, உங்களை ஏமாற்றாமல் சொல்லி இருக்கிறார்கள்.

ஈமு கோழி முதல் MLM வரை எதையும் விட்டுவைக்கவில்லை. மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்… என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத். ஒரு மனிதனின் பணத் தேவை எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், மற்றவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது, பேராசைப் பேர்வழிகளை மோசடி மன்னர்கள் எப்படி சைக்காலஜி தூண்டில் வீசி கவிழ்க்கிறார்கள், ஏமாற்றி அபகரித்த பணம் எப்படி நிம்மதியை ஆக்கிரமிக்கிறது என்று ‘கேண்டிட் சினிமா’வாக சொன்ன விதம்… சூப்பர் டூப்பர்.

படத்தின் மிகப்பெரிய பலம், வசனம். அதிலும் ஹீரோ பேசுகிற ஒவ்வொரு வசனமும் நச் நச். ‘நான் உங்களை ஏமாத்தல. ஏமாற்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன்’ ‘நல்லவனா இருந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம். கெட்டவனாயிருந்தா வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம்’ என்கிற அளவுக்கு இந்த படத்தில் லைசென்ஸ் தருகிறார் இயக்குனர்.

இதற்கு முந்தைய படங்களை பார்த்தவர்கள் ‘நட்டியெல்லாம் ஏன் நடிக்க வரணும்?’ என்று யோசித்திருக்கலாம். இந்த படத்தில் செம பொருத்தம் அவரிடம். இப்படத்தில் மிளகா, நாளை போன்ற படங்களில் நடித்த முன்னாள் இந்தி பட உலக ஒளிப்பதிவாளரான நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகி இஷாரா, நட்ராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதுவும் அவர் பேசும் மெஸ்மெரிச பேச்சும், அதற்கு அவரது கம்பீரமான குரலும் ஒரு ஈர்ப்பு என்றால், ஏமாற்றுகிற புண்ணியவான்களுக்கேயுரிய பாடி லாங்குவேஜ் அஷ்ட பொருத்தமாக நுழைந்து கொள்கிறது அவரது நடை உடை பாவனையில்! ‘எல்லாரையும் தோற்கடிச்சுட்டேண்டா’ என்கிற தொணியோடு அவர் கோர்ட்டிலிருந்து வெளியேறுகிற காட்சி ஒன்று போதும் உதாரணத்திற்கு! அவர் சாவுக்கு அவரே குழி வெட்டிக் கொள்ளப் போகிறார் என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தால், வைக்கிறார்களப்பா ஒரு ட்விஸ்டு! நச்…


www.sridar.com Rating: 7.0