நீங்கள் Root Beer என்னும் ட்ரிங்க்ஸ் பற்றி கேள்வி பட்டு இருக்கலாம், குடித்து இருக்கலாம். நூறு ஆண்டுகளில் டாப் 5 இடத்தை பிடித்த பானம். இது வடிவேலுவின் “அக்கா மாலா” கப்சி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பானம் தான்.

A&W, Super Store போன்ற இடத்தில் விற்கும் ரூட் பீர், Ginger ale, Dr. Pepper, டாக்டர் வெங்காயம் போன்றவை, வேறு ஒன்றும் இல்லை, நம்மூர் நன்னாரி சர்பத்தின் அட்ட Xerox காப்பி, Modified அப்ரடீன்சுகள் தான். 1920-ல் மோகன்லால் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிக்காவில் சுதந்திரத்திற்காக ஒத்துழையாமை இயக்கம் மூலம் வெள்ளைக்காரன் கூட சண்டை போடுற நேரத்தில், அதே வெள்ளைக்காரன் நம்ம ஊரு நன்னாரி மேட்டரை, இங்க mug-ல ஊத்தி பொண்ணுங்க கையில கொடுத்து, சுதந்திரமா 5 சென்ட்டுக்கு ஒரு மக்கு, வாங்கி குடிடா ஒரு பெக்குனு விக்க ஆரம்பிச்சான்.

தமிழனுக்கு ஒரு வீக்னெஸ் உண்டு. நம்ம ஊரு இஞ்சி பூண்டை, நசுக்கி டப்பாவில போட்டு அமெரிக்கன் டாலர் விலை ஒட்டி, நம்மகிட்டயே வித்தா “What an invention, வெள்ளக்காரன் வெள்ளக்காரன்தான்”னு, க்யூவில நின்னு வாயை பொளந்துட்டு வாங்குவோம். இதையே, ரோட்டு ஓரத்தில் ஒரு கோபாலு, முண்டாசு கட்டிட்டு, பாய் விரிச்சு அதை குமிச்சு போட்டு வித்தா, அவன் கிட்ட பேரம் பேசி, கடைசியில, போடா கோமாளி..இதுக்கு ஏன்டா இவ்வளவு விளைனு வாங்காம போவோம்.

கொடுமை என்னனா, வெள்ளைக்காரன் நமக்கிட்ட எடுத்து போய் வேற எங்கேயும் விக்கமாட்டான். நம்மகிட்ட தான் விப்பான். நாமளும் வேற எங்கேயும் வாங்க மாட்டோம். அவன்கிட்ட மட்டும் தான் வாங்குவோம்.

உலக வர்த்தக உடன்படிக்கையில் விளைந்த பன்னாட்டு உடன்படிக்கையில் ஒரு நாட்டில் இயல்பாய் தோன்றி வளரும் தாவர மூலங்களை வைத்து காப்பு உரிமை பெறக்கூடாது. வழக்கம் போல் வளர்ந்த கடா, வளரும் கடாவை பிரியாணிக்கு மாறு கை, மாறு கால் வாங்கும்.

நன்னாரியும் விதி விலக்கு அல்ல. வேம்பு, காஷ்மீர் பாசுமதி வரிசையில் patent மூலம் இழந்ததில் நன்னாரியும் குளுமையும் அடங்கும்.

இப்ப யாரவது இதை வாங்கி குடிக்கறீங்களா? நிறைய இடத்தில் இது இப்போது கிடைப்பதும் இல்லை.
சரி, அதை விட்டு தள்ளுங்க. மேட்டருக்கு வருவோம்.

நன்னாரிக்கு இன்னொரு பெயரும் உண்டு. கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி.

(Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla). இது ஒரு கொடி வகை. வேர் தான் மேட்டர் உள்ள இடம்.

இதை வேரோடு புடிங்கி, வேரை மட்டும் பிட்டு பிட்டா பிச்சு போட்டு, கொஞ்சம் தண்ணி, பனை வெள்ளம், சுக்குப்பொடி, மிளகுத்தூள் போட்டு கொதிக்க வச்சு, பின்னாடி பானையில் ஊத்தி வச்சுட்டு, நீங்க வெயில்ல அலைஞ்சுட்டு, காஞ்ச கருவாடா 4-5 மணி நேரம் கழித்து திரும்பி வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு ஒரு டாப் கிளாஸ் கூல் ட்ரிங்க்ஸ் ரெடியா இருக்கும்.

உங்களுக்கே தெரியும், நம்மூர் பானையின் கூலிங் turn ஓவர் டைம்: 4.5 hours. மண் மேல தண்ணி ஊட்டி வச்சா 3.0 hours மட்டும் தான். துண்டு ஒன்னை தண்ணீர்ல நினைச்சு பானை மேல மூடி வச்சா, கூலிங் retention 6 hours. (Ref: Recent Research published by Anna University)

திரும்பி வந்து பானையில் பாருங்க. நன்னாரி சர்பத் ரெடியாக இருக்கும். கப்புன்னு ஒரு டம்பளர் அடிச்சிட்டு அப்பிடியே சாயவேண்டியதுதான். கோடை வெயிலுக்கு, இவனை அடிச்சுக்க இனிமேதான் ஒருத்தன் பொறந்துதான் வரணும்.

இதுக்கு பல அறிய மருத்துவ குணங்கள் உண்டு. அந்த லிஸ்ட் எல்லாத்தையும் நான் சொன்னா என்னை ” சேலம் டாக்டர். சிவராஜ் சித்த மருத்துவர்” ரேஞ்சுக்கு கலாய்பிங்க. அதனால, சிம்ப்ளா சொலறேன், இது குடிச்சா மூணு மேட்டர் க்ளியர் ஆகும்.

உடல் சூடு, பசியின்மை, உச்சா.

தமிழ் நாட்டில் நன்னாரி பல மாவட்டத்தில் நிறைய விளைகிறது. இதன் extracts இல்லாத குளிர் பானங்களே மார்க்கெட்டில் இப்போது கிடையாது.

நாம இதை குடிசீட்டு, 1950’s ல சீட்டு ஆடிட்டு இருக்கும் போதே, வழக்கம் போல் அமெரிக்கன் இதன் Constituting Formula வுக்கு patent வாங்கிட்டான். நீங்க கடையில் பாக்கிற டாப் கிளாஸ் Dr. Brown’s, A&W, Mug, Sarsi (Philippines), Hey Song Sarsaparilla (Taiwan), F&N Sarsi (Malaysia) எல்லாமே நம்ம நன்னாரி பயல் தான். என்ன கொஞ்சம் ginger ஜாஸ்தியா ஒருத்தன் போடுவான், இன்னொருதான் சக்கரை ஜாஸ்தி போடுவான். பேருக்கு வாசனைக்கு சேர்த்துட்டு, மீதி எல்லாம் மானே,தேனே,பொன் மானே தான்.

இதை டாக்டர் பெப்பர் சொன்னார்னு விக்கிறாங்க. ஸ்லிப்பர் எடுத்து அடிச்சிக்க வேண்டியதுதான்.

Allan மற்றும் Frank (A&W) என்னும் பிசினஸ் பாட்னர்கள், கலிபோர்னியாவில் வாழ்ந்த ஒரு Pharmacist இடம் இருந்து இந்த root beer பார்முலாவை 1918- ல் வாங்கி உள்ளார்கள். அந்த Pharmacist 1915 ல் இந்தியா சென்று வந்து உள்ளார் என்று நம்பபடுகிறது. இப்ப சொல்லுங்க, formula வந்த ரூட் எதுன்னு?

கனடா மற்றும் அமெரிக்காவில் 1920 இல் முதல் ரூட் பீர் விற்பனைக்கு வந்தது. இனிப்பும் கசப்பும் கலந்த சுவை, சப்பை நாக்கு கொண்ட வெள்ளைக்காரன் மண்டையில் ஜிவ் என்று ஏறியது.

சரி, இதையெல்லாம் நம்பி ரூட் பீர் உடலுக்கு நல்லது என்று போய் வாங்கி குடிக்காதீர்கள். இன்று A&W Root Beer®: இணையத்தில் சென்று பார்த்தேன். வழக்கம் போல் எல்லாம் artificial மற்றும் கொஞ்சம் மட்டும் நன்னாரி வாசனைக்கு மட்டும் சேர்த்து உள்ளார்கள்.

A&W Root Beer®:

Serving size 8.1 fl oz (1 cup / 240 ml)
Servings per container 1
Total carbohydrate 31 g
Sodium 30 mg 1%
Carbonated water, sugar (glucose-fructose), caramel, sodium benzoate, natural and artificial flavours.

இதை குடித்தால் நன்னாரி வாசனை மட்டும் வரும். நன்னாரியின் மருத்துவ குணங்கள் இருக்காது.

ஊருக்கு போனா, தேடி போய் இதை குடிக்கவும்.

இங்க நீங்களே நம்மூர் நன்னாரியை வாங்கி சர்பத் செய்து குடிக்கலாம். Amazon காட்டில் கிடைக்கிறது .(1 lb – சுமார் 25 Dollars). இதை வைத்து ஒரு full நார்த் அமெரிக்கன் சம்மரை ஓட்டலாம். கீழே லிங்க் கொடுத்து உள்ளேன். இது நம்ம ஊர் நன்னாரி. Dried and Packed.

http://www.amazon.com/Frontier-Sarsaparilla-Indian-Sifted-package/dp/B000UYIQNO

A&W போனா நெஞ்சை நிமித்தி சொல்லுங்க:

“நீங்க விக்கிற பர்கர் patty, எங்க பாட்டி சுட்ட அடை
நீ விக்கிற கூல் பீர், எங்க ஊரு குளிர் நீர்”