படத்தை, இன்டர்வெல்லுக்கு 15 நிமிஷம் முன்னாடி இருந்து பார்க்கலாம். கடைசி 10 நிமிஷம் காதுல பூ வாங்கி வச்சுகோங்க. இதுக்கெல்லாம் ஓகேனா படத்தை கண்டிப்பா பாக்கலாம்.
மத்தபடி படம் விறு விறு, சுறு சுறு.
ஹீரோ கண்ணுல அதை பார்க்கலாம். சூப்பர் படமா வரவேண்டியது, கொஞ்சம் மிஸ் பண்ணிடாங்க.
பாருக்கு நண்பர்களோடு குடிக்க போகிறார் விக்ரம் பிரபு. கழிசல் கச்சடா நிறைந்த நம்ம ஊரு டாஸ்மாக் பார் அல்ல அது. இது ஹைலீ டெவல்ப்டு…! அதே பாருக்கு ஒயின் அடிக்க வருகிறார் ப்ரியா ஆனந்த். எண்ணி நாலு வார்த்தை, ஒரு பாட்டு பாடி அவரை கவரும் விக்ரம் பிரபு, அப்படியே கிளம்புகிறார் ப்ரியா ஆனந்துடன். நள்ளிரவு… தன் பிளாட்டுக்கு விக்ரமை அழைத்து வருகிறார் ப்ரியா. அங்கும் ஒரு ஃபுல் வோட்காவை இருவரும் சேர்ந்து கபளீகரம் செய்ய முயல, சந்து கேப்பில் ஒரு பயங்கரம். ப்ரியாவை கடத்திச் செல்கிறார்கள் இரு மர்ம நபர்கள். தடுக்க முயலும் விக்ரம் எப்படியோ துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பி அதற்கப்புறம் போலீசிடம் புகார் செய்கிறார். அதுவும் சரி வராமல் போக, தானே கிளம்புகிறார் ப்ரியாவை தேடி.
கண்டு பிடித்தாரா? அப்புறம் இருவரும் தப்பித்தார்களா என்பதுடன், தன்னை பற்றிய வீடியோ ஆவணத்தை வெளியிட துடிக்கும் இருவரையும் தீர்த்துக்கட்டி ஆவணத்தை கைப்பற்ற முயலும் மத்திய அமைச்சர் என்னவானார்? வீடியோ வெளியானாதா? என்பதெல்லாம் விறுவிறுப்பான கடைசி நிமிடங்கள்.
_________________________________
Directed by Anand Shankar
Produced by S. Thanu
Written by Anand Shankar
Starring Vikram Prabhu, Priya Anand
Music by Sivamani
Cinematography R. D. Rajasekhar
Edited by Bhuvan Srinivasan
Leave A Comment