மலிவு. இந்த சொல் மட்டும் தமிழில் இல்லமால் இருந்து இருந்தால்?
இன்று மலிவு விலை அம்மா மருந்தகம் திறப்பு என்று செய்தி படித்தேன். எங்கும் “செண்டிமெண்ட் டச்சிங், மக்கள் பீலிங்க்ஸ்”
இது அம்மா பத்திய பதிவு அல்ல. ஒரு தொடர்கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே.
அதை தொடங்கி வச்ச புண்ணியவான், நம்ம மஞ்ச துண்டு மைனர். சரி அதை விடுங்க.
விலைவாசியை குறைத்து, நடைமுறை வணிக சட்டங்களை அமுல்படுத்துவதை விட்டுவிட்டு, எல்லாம் மலிவு என்று ஆரம்பிப்பதில் அர்த்தமில்லை.
உணவு, மருந்தின் மீது உள்ள அக்கறை, ஏன் அரசியல்வாதிகளுக்கு டாஸ்மார்க்கை இழுத்து மூடுவதில் வருவதில்லை?
மருந்தில்லாமல் சாகிறவனை விட, குடிச்சிட்டு சாகிறவன் தான் அதிகம்.
சாப்பாடு இல்லாமல் சாகிறவனை விட, விலைவாசியில் வாழ வழி இல்லாமல் சாகிறவன்தான் அதிகம்.
ஏழைக்கு, மலிவில் சாராயத்தை ஊத்தி கொடுத்து, மலிவு விலையில் உணவு, மருந்து கொடுப்பத்தில் என்ன அர்த்தம் உள்ளது?
தினம் பிச்சைக்காரனுக்கு பிச்சை போடுவதால், அவன் பணக்காரன் ஆக மாட்டான்.
தேவை, குடிமக்களின் வாழ்வாதாரம்.
வாழ்வாதாரத்தை அழித்து, இலவசத்தில் கொடுத்தால் மட்டும் வாழ்க்கை தரம் உயர்ந்துவிடுமா என்ன?
இன்றும் மேலை நாடுகளில், விவிசாயிதான் சூப்பர் மேன்.
அவன் மேல கை வைச்சா போதும், அரசியல்வாதி காணாம போயிடுவான்.
ராமதாசு மாதிரி எவனாலும் மரத்தை வெட்டவும் முடியாது. அன்புமணி மாதிரி, நினைச்ச மாதிரி நட்டவும் முடியாது.
இந்த நிமித்தி, வலைக்கிற வேலை எல்லாம் இயற்கை வளத்தில் காட்ட முடியாது.
ஆனா, நம்ம நாட்டில் எல்லாம் சாத்தியம்.
விவசாயத்தை முற்றிலும் அரசியல்வாதிகள் சாகடித்து விட்டார்கள்.
கேட்டால், இதுக்கு காரணம் உலகமயமாக்கல்னு சொல்லுவாங்க.
அப்பிடி ஒரு வெங்காயமும் இல்லை.
உலகமயமாக்கல் என்றால் என்ன? எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் தடையில்லா வர்த்தகம்.
நம்ம ஊரு அண்ணாச்சி கடையை உலகம் பூரா எடுத்துட்டு போனா தான் உலகமயமாக்கல்.
வால் மார்டையும், KFC யையும் உள்ள விட்டு, மூலையில் இருந்த மளிகை கடையை மூடினா அதுக்கு பேரு தற்கொலை.
இது உலகமயமாக்கல் இல்லை. ஒரு Economics லாஜிக் சொல்றேன்.
அமெரிக்காவுல ஒரு தோசை 12 டாலர். (12 டாலருக்கு வித்தாதான் லாபம் கிடைக்கும்)
ஆனா, Mcchicken ஒரு டாலருக்கு கிடைக்கும்.(1 டாலருக்கு வித்தால் மட்டுமே போதும். இதில் லாபம் கிடைக்கும்)
காரணம் உலகம் பூரா, அந்த கண்றாவியை உலகமயமாக்கல் மூலம் சாப்பிட கத்து கொடுத்து இருக்கான்.
பொண்ணு தாயும் சாப்பிடுது, வெள்ளையம்மாலும் சாப்பிடுது. இது தான் உலகமயமாக்கல்.
நம்ம தோசையை, இங்க 1 டாலருக்கு வித்து இருந்தா அது பேரு உலகமயமாக்கல்.
இதுக்கு காரணம், கண்ணை மூடிட்டு காசை வாங்கிட்டு கை எழுத்து போட்டதுதான் காரணம்.
தடை அற்ற வர்த்தக உடன்படிக்கையில், ஒழுங்கா படிக்காத ஒரு காங்கிரஸ் பரதேசி கையெழுத்து போட்டுட்டு, சேத்துல கால் வைத்து விதைத்த உழவனின் தலை எழுத்தை மாத்தி விட்டார்கள்.
முடிந்தால் படித்து பாருங்கள்.
http://www.wto.org/english/docs_e/legal_e/14-ag_01_e.htm
இதுக்கு படிச்சவன் வந்து அரசியல் பண்ணனும். அதுக்கு படிச்சவன் அதிகம் ஒட்டு போடணும்.
படிச்சவன், எல்லாம் படிச்சிட்டு வெளிநாட்டுக்கு வந்து உட்காந்து வியாக்யானமா status போடுறதோட சரி.
ஒரு ஆணியையும் நம்ம நாட்டுக்கு புடுங்கறதில்லை.
என்னையும் சேத்திதான்.
டோனி சிக்ஸர் அடிச்சா இங்க கை தட்டுவோம்.
மோடி ஜெயிச்சாலும் கை தட்டுவோம்.
கோச்சடையான் ஓடுச்சா, இல்லையா என்பது தான் நம்ம தலையாய பிரச்சனை.
நம்ம futuristic thinking என்பது – சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கல்யாணம் நடக்குமா, நடக்காதா என்று ஆரூடம் சொல்லுவதில் நின்றுவிடும்.
வாரத்துக்கு ஒரு படத்தை பார்த்தோமா,
ரெண்டு பாட்டை கேட்டோமா.
ரெண்டு மெகா சீரியல் கூட சேர்ந்து அழுதோமா என்று முடிந்துவிடும்.
யோசித்து பாருங்கள்..
ஒரு காலத்தில் பருத்தி வெடித்த பூமி, இன்று வெளிநாட்டில் இருந்து பஞ்சை பிச்சை எடுத்து நெய்கிறது.
கம்பும், சோளம், குதிரைவாலி என்றால் இன்று எத்தனை பேருக்கு தெரியும்?
இதை விட கேவலம் என்ன இருக்க முடியும்?
மூன்று போகம் விளைந்த பூமி, இன்று ரியல் எஸ்டேட் புரோக்கர் செல் போனில் சிக்கி சீரழிகின்றது.
வாய்க்கால், வரப்பு தகராறு நின்று, இன்று வாயை பொத்தி நம்ம ஆத்து தண்ணிக்கு அடுத்தவனிடம் பிச்சை எடுக்கின்றோம்.
எல்லா வளங்களையும் சுரண்டி, கடைசியில் செத்தவுடன் குழியை மூடகூட கரூரில், ஒரு பிடி மண் கிடைக்காது.
அங்க செத்தா எரிக்கதான் வேணும்.
கடல்ல மீன் புடிக்க போனா, இலங்கைகாரன் அவனை புடிச்சி வசிக்கிறான்.
நம்ம கிட்ட இருந்த கட்ச தீவை, “அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையேனு” ஒரு தமிழ் தலைவன் தாரை வாத்துட்டான்.
இந்த பக்கம், மலையாளி நம்மகிட்ட டீ ஆத்துறான். கர்நாடகா தண்ணி காட்டுறான்.
டெல்லியில் உட்காந்து கிட்டு, நீ இதை படி, அதை பாடுனு சொல்றான்.
இலங்கையில் தினம் ரெண்டு தமிழ் மக்கள் செத்தா அது நியூஸ் இல்லை. சாவலைனாதான் அது நியூஸ்.
இதை எல்லாம் எதிர்த்து போராடத்தான், தமிழகத்தில் ஒரு தலைவரை மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.
ஆனா, அதுங்க ஸ்கூல் பிள்ளைகளுக்கு காமராஜர் ஆரம்பித்த நல்ல சத்துணவு திட்டத்தை கிழட்டு பசங்களுக்கு promote செய்யுதுங்க.
சத்துணவில் ஆரம்பித்து, மின்சாரம், டிவி, ஆட்டுக்கல், குடிக்க கல் என எல்லாம் மலிவுதான்.
இப்பிடியே போச்சுனா, அம்மா நாடுன்னு ஒன்னு ஓபன் செஞ்சு எல்லாரும் அங்க வாங்கனு சொல்ல போகுது.
நம்ப நாட்லதான், முன்னேற்றத்தை வெறும் அஞ்சு வருசத்துக்கு யோசிப்பாங்க.
கருணாநிதி, ஜெயலலிதா எல்லாரும் ஒண்ணுதான்.
Election to Election – Thinking Only Vote collection.
ஏன், நம்மளே நம்ம ஓட்டையே, அவங்களுக்கு காசுக்கு விக்கறோம். அதுக்கு கொடுத்த காசை தான் இப்ப திருப்பி வாங்கறாங்க.
அதை ஐந்தாயிரம் ரூபாயிக்கு வித்துட்டு, அஞ்சு ருபாய் இட்லி சூப்பர்னு லாஜிக் பேசுறோம்.
மலிவு என்கிற வார்த்தை அழியும் வரை,
எந்த கொம்பனாலும் இந்தியாவை வல்லாராசா மாத்தா முடியாது.
விவசாயி செத்து ஒரு நாடு உருப்பட்டதா வரலாறு இல்லை.
Leave A Comment