உலகம் சிறியது

எஸ்கிமோக்கள் என்னிடம் காட்டிய முத்திரை, இமாலயத்தில் ரிஷிகள் தினம் செய்யும் முத்திரைகளில் ஒன்று. இதைத்தான் ரஜினி தன் Baba படத்தில் உபயோகித்து இருப்பார். “முத்திரை (முத்ரா)” என்பது ஒரு குறியீடு. புத்தர் அமர்ந்து இருக்கும் சிலையில் கையில் ஒரு முத்திரையை காட்டி கொண்டு இருக்கும் போஸ் இருக்கும். அது ஒரு வித முத்திரை தான். இதுபோல், புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய பல சிலைகளில் காணலாம். வடக்கே, பனி மலைகளில் வாழ்ந்த மனிதர்களின் இந்த குறியீடு காலங்களை கடந்து, நிலத்தால் பிரிந்து, கலாச்சாரங்களில் கலந்து இன்று இந்தியாவில் இருந்து வந்த என்னிடம் ஒரு எஸ்கிமோ காட்டும் போது, உலகம் சிறுது என்று நம்பித்தான் ஆகவேண்டும்.

சரி, முத்திரையை காட்டினால் என்ன அர்த்தம்? என்று மொட்டுவிடம் கேட்டேன்.

அதற்கு அவன் இது எங்கள் மூதாதையர்கள் சொல்லிக்கொடுத்த முத்திரை. வழி வழியே வந்தது.

இதன் அர்த்தம், இந்த மாயை உலகில், மனதை கட்டுப்படுத்தி உடல், பொருள் ஆவியை நம் கட்டுக்குள் கொண்டுவருவதே என்றான். எனக்கு தூக்கிவாரி போட்டது. இதைத்தான் நம் ரிஷிகளும் சொல்கிறார்கள். கருத்து சிதையாமல் இமய மலையில் இருந்து வடக்கே ஆர்க்டிக் வரை இந்த முத்திரை வர காரணம், இதன் தேவை காலத்தின் கட்டாயம்.

தேவை இல்லை எனில் அழிந்து இருக்கும்.

Budha

காலங்களை ஒரு மாறுதல் கடந்து வந்தால் அதை அறிவியலில் “Natural Selection” என்பார்கள். புடவை அணிவதும், பொட்டு வைப்பதும், வேஷ்டி மடித்து கட்டுவதும் “Natural Selection” தான். இன்னும் 500 வருடத்தில் உங்கள் பேரன் பேத்திகளுக்கு இவை தெரியாமல் போனால் அதுவும் அறிவியல்தான். ஒரு இடத்திற்கு எது தேவையோ அதவே நிலைத்து நிற்கும்.

அமெரிக்காவில் குச்சுபுடியும் , இந்தியாவில் பாலே நடனமும் நிலைத்து நிற்பது அதன் அதன் தேவையை பொறுத்துதான்.

பாபா முத்திரையும் காலத்தை கடந்து வந்ததுதான். சரி, இந்த முத்திரை எதை சொல்ல விழைகிறது..

apana

நம் சிறு விரல் – பெளதிக உடலை குறிக்கும். மோதிர விரல் – மனம், நடுவிரல் – புத்தி, ஆள்காட்டி விரல் – ஆன்மா மற்றும்
பெருவிரல் – பரம்பொருள் பரமாத்மாவை குறிக்கும். பாபா முத்திரையில் மோதிரவிரலும் நடுவிரலும் மடிக்கப்பட்டு, பெருவிரலால் பிடிக்கப்பட்டிருக்கின்றன. சிறுவிரலும், ஆள்காட்டி விரலும் தொடப்படாமல் இருக்கின்றன.

இதன் முக்கியத்துவம் என்னவென்றால் உடலை வருத்தாமலேயே ஆன்மிக முன்னேற்றம் அடையலாம் என்பதாகும்.

உடலை ஆனந்தமாக அனுபவித்தால் போதும். இரண்டாவது விரலான மோதிரவிரல், அதாவது மனம், அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்? அலைபாயும் மனதை முழுவதுமாக நல்வழிப்படுத்த வேண்டும். அதை சுத்தப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அனைத்தும் கைவசப்படும்.

சமுதாயத்திலுள்ள அனைத்து தேவையற்ற செயல்களும், ஏற்கனவே உண்டான தேவையற்ற பதிவுகளும், மனித மனதில் பிரதிபலிக்கின்றன. முன் பதிவுகளும், தேவையற்ற செயல்களும் நாம் ஞானம் அடையத் தடையாக இருக்கின்றன. இந்த முன் மதிப்பீடுகளையும் தேவையற்ற செயல்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் களையும் வழிமுறையே ‘தியானம்’ எனப்படுகிறது.

எப்பொழுது ஆன்மா மனதை நிலைப்படுத்த நினைக்கிறதோ, அப்பொழுது தியானத்தை நாடுகிறது. அப்பொழுது பரம்பொருளானது, மனதை, விஸ்வசக்தி கொண்டும், விஸ்வ அறிவைக் கொண்டும் சுத்தம் செய்து மனதைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றது. இதனைத் தான், மோதிரவிரலும், பெருவிரலும் பெருவிரலால் பிடிக்கப்பட்டு, முத்திரையில் காட்டப்பட்டிருக்கும் தத்துவத்தின் அடிப்படை.

அதேபோல் முழுமை பெறாத புத்தியையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் (நடுவிரல்). முழுமை பெறாத புத்தி என்பது அரைகுறை அறிவு ஆகும். அரைகுறை அறிவு என்பது மிகவும் ஆபத்தானது. அரைகுறை அறிவை முழுமையான அறிவால் மட்டுமே சரிசெய்ய இயலும். முழுமையான அறிவு பரம்பொருளே ஆகும்.

இதுதான், ‘பாபா முத்திரையில்’ நடுவிரல், பெருவிரலின் பிடியில் இருப்பதன் சாராம்சம் ஆகும். எப்பொழுது ஒருவர் ஞானம்பெற விரும்புகிறரோ, அப்போது அந்த விருப்பமே, தேடலே, அவரை தியானத்தின்பால் அழைத்துச் செல்கிறது.

மொத்தத்தில், உடல் மிகவும் அழகானது, அற்புதமானது. இயற்கையின் உயர்ந்த படைப்பு ஆகும்.

இதை சொல்லாமால் ரஜினி, பாபாவில் வேறு ஏதோ சொல்லியிருப்பார்.

கலப்படத்தை, தியானம் என்றும் ஏற்பதில்லை. படமும் ஊத்திக்கொண்டது.

 

Small

சரி இந்த தத்துவம் எப்படி கடல் கடந்து இங்கு வந்தது?
காலங்களை எப்படி கடக்க முடிந்தது?
கலாச்சாரத்தில் எப்படி கலந்தது?

இந்த எல்லா கேவிகளுக்கும் ஓரே பதில் தான். உலகம் மிக சிறியது.

அதில் நமக்கு தெரிந்தது சில, தெரியாதது பல. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்…
தெரியாததை நீங்கள் தேட ஆரம்பியுங்கள்.

உலகம் மிகப்பெரிது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உலகம் சிறியது. உண்மையில் மிகச் சிறியது. அதற்கு முன்னாள் உலகம் எப்படி தோன்றியது என்பதை பார்ப்போம். 1,500 கோடி ஆண்டுகள் முன் ஒரு தலை தீபாவளி அன்று, ஒரு பெரிய லக்ஷ்மி சரவெடி, “டமார்” “டமார்” என்று பெரிய சத்தத்துடன் வெடித்தது.

அண்டம் என்னும் பிரபஞ்சம் அந்த சர வெடியில்தான் தோன்றியது. இதை Big Bang – என்று அறிவியலில் சொல்வார்கள். பெரிய பட்டாசு வெடித்து எப்படி காகிதங்கள் சிதறி போகுமோ, அதைப்போல் பெரிய வெடிச்சிதறல் காரணமாக, விண்மீன் (நட்சத்திர) மண்டலங்களும் (Galaxies) அவற்றின் விண்மீன்களும் தோன்றின.

Earth and universe

Milky way Galaxy – இதை தீபாவளி முடிந்த மறுதினம் தெருவில் சிதறி இருக்கும் காகித குப்பைகளுடன் ஒப்பிடிடலாம்.

வெடித்தது மகா பெரிய லக்ஷ்மி வெடி. வெடித்தபோது கோடான கோடி, பேப்பர் துண்டுகள் சிதறி ஓடின. இப்படி உருவான ஒரு காகித கூட்டம், வெடித்த ஒரு நெருப்பு கங்கினை தன் தலைவனாக ஏற்று அவனை சுற்ற தொடங்கின. அந்த எரிந்து கொண்டு இருக்கும் கங்குதான் நம்ம சூரியன். தலைவனாக ஏற்றுக் கொண்ட அடிமைகள்தான் கோள்கள். இதில் பூமியும் ஒன்று. இந்த விண்வெளி கட்சியை ” பால்வெளி விண்மீன் மண்டலம் (Milky way Galaxy)” என்று அழைப்பார்கள்.

இந்த Milky way கட்சியில் மொத்தம் 20,000 கோடி விண்மீன்கள், உறுப்பினர்களாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளார்கள். இந்த கட்சி ஆரம்பித்து சுமார் 500 கோடி வருடங்கள் ஆகின்றது. இதன் expiry date: இன்னும் 600 கோடி ஆண்டுகள் என்று சொல்கிறார்கள், telescope அருகேயே, பாலும் பழமும் உண்டு வாழும் விஞ்ஞானிகள்.

இப்படி தோன்றிய உலகில், உயிரினங்கள் எப்படி தோன்றின?.

எப்படி உலகில் உயிரினங்கள் தோன்றின என்ற கேள்விக்கு, இயேசு, அல்லா மற்றும் பிரம்மன் மூலம் மனிதன் பல பதில்களை இன்னும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் பல பதிகள் வரலாம்.

Polytheism, Platonic demiurge, Monolatrism, Monism, Buddhism, Jainism,Judaism என பல “இசம்”களும், பல “கசம்’களும் பல விதத்தில் உலகம் தோன்றிய விதத்தை சொல்லும்.

உதாரணமாக, மனு நீதிச் சட்ட நூலான சுமிருதி, பிரமன் தன் மேனியை இரு கூறாக்கி ஒரு பகுதியை ஆணாகவும் மறு பகுதியைப் பெண்ணாகவும் தோற்றுவித்தான் என்று சொல்கிறது.

இதை, இந்து நம்புவான்…

கிறிஸ்து இல்லை ..ஆதாம், ஏவாள்தான் முதலில் ஆப்பிள் தின்றார்கள் என்பான்….

 

மதத்தை விட்டுத்தள்ளுங்கள்…அது மன சாந்திக்கு..

மன “பிராந்திக்கு” அறிவியல் தான் முக்கியம்.

 

அதை விட சக மனிதன் அறிவியலின் மூலம் அளித்த பதில்தான் மிக முக்கியம்.

யார் அவர்? அவர் என்னதான் சொன்னார்?

இந்த நூற்றாண்டில் நடந்த மிக முக்கியமான சம்பவம் இது.

Darwin

கார்ல் மார்க்ஸ், தனது உலகப் புகழ்பெற்ற மூலதனம் (Das Kapital) என்னும் நூலை “உங்களுடைய தீவிர அபிமானி” என்று கையெழுத்திட்டு இங்கிலாந்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பி வைத்தார்.

அவர் வேறு யாரும் இல்லை…அவர்தான் “பரிணாமவியலின் தந்தை” சார்லஸ் டார்வின்.

வரலாற்றுப் பொருள்முதல் வாதத்துக்கு (Historical Materialism) அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வினின் கண்டறிதல் அந்த அளவுக்குத் Materialism பற்றிய தேடலுக்கு தாக்கம் செலுத்தியிருந்தது தான் உண்மை.

டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” (Origin of Species) என்ற நூலை, நான் கல்லூரி காலத்தில் முழுவதும் படித்ததுண்டு. படித்துவிட்டு, வந்த ஆர்வத்தில் ஒரு குறும் படத்தை எடுக்க விழைந்தேன். அப்போது நான் இரண்டாம் ஆண்டு Master in Genetics (மரபியல்), School of genetics Department-ல் படித்துக்கொண்டு இருந்தேன்.

டார்வின் செய்தது ஒரு புரட்சி. வெள்ளை தோல் டார்வின், இங்கிலாந்தில் இருந்து HMS Beagle என்ற ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு Galapagos தீவுக்கு சென்று, வழக்கத்திற்கு மாறான உயிரினங்களை கண்டு ஆய்வை செய்தார்.

 

இவர் தான், ஹாய் buddy !!! …You are from Monkey என்று சொன்னவர்.

இதை வைத்து நான் வரைந்த caricature தான் நீங்கள் இங்கே பார்ப்பது.

Darwin and Monkey

Theology படித்த இவர் தீவுகளில் “தீ”யாக வேலை செய்தார். ஐந்து ஆண்டுகளில் கப்பலில் உலகையே ஒரு வலம் வந்தார். காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதை கண்டு பிடித்தார்.

கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், “இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை” என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின்தான் சொன்னார்.

உங்களுக்கே தெரியும். இப்படி எவனாவது புதிதாக உண்மையை சொன்னால் அவனுக்கு விழா எடுத்து, காலில் விழுந்து ” பைத்தியக்காரன்” என்று பட்ட பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் இது தான் நடந்தது.

அதற்காகவே இன்றுவரை தூற்றப்பட்டுவருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வினின் பரிணாமவியல் தத்துவத்தைக் கூறலாம்.

என் முதல் பயண தேடல் இவரிடம் இருந்து தான் ஆரம்பித்தது. டார்வின் புத்தகத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்கள்.

இதை இங்கே online-லும் படிக்கலாம். 450 பக்கத்தில் 1500 கோடி வருட தோன்றலை சொல்லிருப்பார்.

வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன் தான். படியுங்கள், பாருங்கள் ..உங்களுக்கே  புரியும்.

படிக்க:

http://www2.hn.psu.edu/faculty/jmanis/darwin/originspecies.pdf

பார்க்க:

 

நான் எடுத்த படத்தின் பெயர் “யாருடைய குழைந்தைகள் நாம்?” சுமார் ஒரு மணி நேரம் ஓடும், இந்த படத்தின் ஒலி மற்றும் ஒளியை மூன்று மாதம் தயார் செய்து அதற்கு தேவையான படங்களை, கைகளால் வரைந்தேன்.

Whose

இதற்கு நான் வரைந்த Poster தான் இங்கு நீங்கள் பார்ப்பது. சுமார் 150 அறிவியலாளர்களை அழைத்து ஏதோ உளறி கொட்டினேன்.

இந்த படத்தில், பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப்படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை (Evolution of Human Mankind) மூலம் சொல்லியிருந்தேன்.

Dinamani

பரிணாம வளர்ச்சிக் கொள்கையை புரிந்து கொள்வது மிகவும் எளிமையானது, அது வலியுறுத்தும் 2 முக்கிய விஷயங்கள்:

1. திடீர் மாற்றம்… 2. ஏன் இந்த மாற்றம்?

இதன் விடையை என் படம் சொல்ல முற்பட்டது.

முழுதும் புரியாமல் நான் எடுத்த படத்தை, முழுதும் புரிந்தவர்களும், பாதி புரிந்தவர்களும் கைத்தட்டி ரசித்தார்கள்.

அப்படி என்னதான் இந்த பூமியில் நடந்தது? சொல்கிறேன்…

மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும்.

நம் எல்லோரையும் தாங்குவதால் பூமியை, பூமித்தாய் என்பார்கள். சூரியன் ஷிப்டில் வேலை செய்வதால் இவரை தந்தை என கருதலாம். உயிரினங்கள் தான் குழந்தைகள். இதுவே நம் குடும்பம்.

இனி ” நம் குடும்பம்” மெகா சீரியல் எப்படி எடுக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

Evolution

பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும்

400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள், தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது
350 கோடி ஆண்டுகளுக்குமுன் தாவர இலைகள்..
260 கோடி ஆண்டளவில் நீரிலுள்ள உயிரணுச் சவ்வுகள்…
230 கோடி ஆண்டளவில் உயிரகம் செறிந்த வளிமண்டலம்…
100 கோடி ஆண்டுகளுக்குமுன் காளான்கள்…
70 கோடி ஆண்டுகளுக்குமுன் தாவரங்கள்..
53 கோடி ஆண்டுகளுக்குமுன் கடல் மீன்கள்..
45 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒட்டுத்தோடுடைய (Arthropods) – நீரில் இருந்து நிலத்திற்கு உயிர் வாழ வந்தவை..
38 கோடி ஆண்டுகளுக்குமுன் நாற்கால் (Tetrapods) – இவை நீரிலிருந்து தலையை வெளியில் நீட்டிச் சுவாசிக்கத் தெரிந்தவை…
31 கோடி ஆண்டுகளில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன…
23 கோடி ஆண்டுகளின்முன் Dinosaurs…
15 கோடி ஆண்டுகளில் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்ட ஓர் அதிசயப் பறவை (Archaeopteryx)…
7 கோடி ஆண்டுக் காலப்பகுதியில் பாலூட்டிகள்…
3 கோடி ஆண்டளவில் சில பாலூட்டிகள் மீன்களாகக் கடலுக்குத் திரும்பின…
20 இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான்…
2 இலட்சம் ஆண்டளவில் அதே மனிதன், நாகரிக மனிதனாக ஆப்பிரிக்காவில் மாறினான்.

இதுவரை நீங்கள் படித்தது, குரங்கு மனிதன் ஆன கதை. இனி நடப்பது மனிதன், குரங்காக மாறும் பரிணாம வளர்ச்சியை.

funny-evolution-15

இதுவரை ஐந்து முறை இந்த பூமி பேர் அழிவுகளை சந்தித்து உள்ளது. கடைசியாக, 65 மிலியன் வருண்டங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் தாக்கியது. அதில் ஏராளமான உயிரினங்கள் அழிந்தன.

உலகின் ஆறாவது பேர் அழிவு, மனிதனால் தான் வரும் மனிதர்களே சொல்கிறார்கள். இதை நாம் நம்பத்தான் வேண்டும்.

 

ஆனால், ஆதி மனிதன் பூமியை போற்றினான். இயற்கையை வணங்கினான். சிறு குழுக்களாக வேட்டையாடி உண்டான். பேச மொழி இல்லாதபோது சைகையால் பேசினான். பின் மொழியை தோற்றுவித்தான்.

ஆப்ரிக்காவில் தோன்றிய மனிதனை, தண்ணீர் தான் பிரித்தது. மெதுவாக கடல் தாண்டவம் எடுத்து, நிலத்தை ஆக்கிரமிக்க, நிலம் பிரிய தொடங்கியது.

 

பூமி விரிந்தது.

பிரியும் முன் வாழ்ந்த உயிர்கள், நிலத்துடன் நகரத் தொடங்கின.

யானையும், சிங்கமும் நிலத்தோடு நகர்ந்து ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பாஸ்போர்ட் இல்லாமல் வந்தது.
ஆப்ரிக்காவில் சோள தோசை சுட்டவன், நிலத்தோடு நகர்ந்து வந்து தமிழ் நாட்டில் மசால் தோசை சுட்ட கதையைதான் அறிவியலில் Evolution என்பார்கள்.

ஒரு புறம் மழை பெய்தது. இன்னொருபுறம் பொய்த்தது.
பெய்யும் இடத்தில் மானும், பொய்த்த இடத்தில ஒட்டகமும் தோன்றின.

தேவையானது வளர்ந்தது,
தேவை இல்லாதது அழிந்தது.

குரங்கு வாலை இழந்ததும்,
சண்டை போட மனிதன் வாளை எடுத்தும்,

ஒரு சொட்டு குடி தண்ணீரை குடிக்க, கால் கடுக்க ஓடிய மனித இனம்,
இன்று தெரு முனையில் டாஸ்மார்க்கில், கல்யாணி பீரை அடிப்பதும்,

பழம் தின்ன மரத்துக்கு மரம் தாவிய இனம் ,
இன்று பணத்திற்கு கட்சி விட்டு கட்சி தாவுவதும்,

கல்லை உரசி நெருப்பை வரவைத்தவன்,
இன்று பெல்லை அழுத்தி பிட்சா வர வைப்பதும்,

மனித உடலில் மயிரை இழந்து,
முகரையில் பிரெஞ்சு குரங்கு மயிரை வைத்ததும், (French Beard)

ஒரு ஆண் குரங்கு, ஒரு பெண் குரங்கின்பின் அலைந்தது போய்,
500 ஆண்கள், ஒரு fake பெண் ID க்கு , friend request கொடுப்பதும்

ஆஸ்திரேலியாவில் கங்காரு குதிப்பது முதல்,
ஆண்டிப்பட்டியில், ஆறுமுகம் சிக்கன் பர்கர் மெல்லுவது வரை

எல்லாம் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியே.

 

நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் அந்த காலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து மாறி இப்போதுள்ள தோற்றத்தை அடைந்துள்ளன. அதே போலத்தான் மனிதனும் கூட இன்றைய மாடர்ன் நிலையை, evolution மூலம் அடைந்துள்ளான்.

உராங்குட்டன், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும், ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து, சீர் பெற்று, திருத்த முற்றுத் தோன்றியவனே மனிதன்.

மனிதன் வலதுகால் அடியெடுத்து வைக்கும் போது அவனுடைய இடதுகை முன்னே செல்லுகிறது. வலது கை முன்னே வீசும் போது இடதுகால் அடி யெடுக்கிறது. குரங்கும் இதே ஸ்டைலில் தான் நடக்கிறது.

 

“சிங்கம் கர்ச்சித்தது…
செவாலியே சிவாஜியும் கர்ச்சித்தார்…

சிம்பன்ஸி பல வித்தைகள் செய்யும்,
விஜய டி ராஜேந்தரும் இதற்கு மேல் செய்து காட்டினார் ..

சஹாரா பாலைவனத்தில் பாம்பு சட்டை உரித்தது,
மலபாரில், பனியன் போட்ட மன்மதனுடன் ஷகீலா அதை நிரூபித்து காட்டினார்.

கட்டெறும்பு ஓடி ஓடி கஷ்டப்பட்டு உணவை சேமிக்கும்,
எதிர் வீட்டு சேட்டு அதை உட்காந்த இடத்தில் செய்து காண்பிக்கிறார்

குதிரைக்கும், கோவேரி கழுதைக்கும் பிள்ளை பிறந்தது செய்தியானது,
கள்ளக் காதலனுக்கும், கள்ளக்காதலிக்கும் கல்யாணம் இப்பொது நடைமுறையானது.

Test Tube பேபியாக –  Dolly ஆடு வெள்ளையாக பிறந்தது,
கத்ரீனா கைப்பும் கலப்பின பெருக்கத்தில் வெள்ளையாகதான் பிறந்தார்.

பஞ்சோந்தி நிறம் மாற்றிக் காட்டியது
அரசியல்வாதிகள் அதை விட சிறப்பாக செய்து காட்டினர்

பனங்காட்டு நரி தன் குடும்பத்தை காத்தது,
கருணாநிதியும் அதைத்தான் செய்தார்.

ஒபாமாவிற்கும், ஒசமாவிற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்,
இருப்பினும் சண்டை போட்டார்கள்

ஒருவர் இறந்தார், இன்னொருவர் உயிர்த்தெழுந்தார்.
ஒபாமா பரிசுத்த ஆவி ஆனார், ஒசாமா பாவியானார்

பால்கோவாவும், பக்கோடாவும் டப்பாவில் கிடைக்கிறது
மாடுப்பாலும், தயிரும் fridge -ல் குளிர்கிறது

கைதியும், பாதிரியாரும் வெள்ளை உடைதான் அணிகிறார்கள்
ஒருவன், தத்துவத்தை ஒரு அறையில் பேசுவார், இன்னொருவன் சிறையில் பேசுவான்

டிரைவரும், ஹோட்டல் சர்வரும் வெள்ளை உடை அணிந்து serve செய்கிறார்கள்.
இதை ஏன்? என்று வெள்ளை உடை விமான ஓட்டி கேட்க மாட்டார்.

வெள்ளை தோல் குடித்த காப்பி கப்பை, கருப்பு தோல் கழுவியது
இனம், குணம், மனம், பணம் எல்லாம், நிறத்தை தேடின.

போன நூற்றாண்டில் மனித இனம், தாத்தன் பெயரை பெயருக்கு முன்னால் சேர்த்தது
இந்த நூற்றாண்டில் அதே இனம் ஜாதியை பெயருக்கு பின்னால் சேர்த்தது

இவை அனைத்தும் நடப்பது ஒரு தத்துவத்தின் கீழ் தான்

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது“

கொடிபிடித்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் செய்வார்கள்
கோடிகள் அடித்து, 3G அலைவரிசையிலும் அமுக்குவார்கள்

இப்பொது நடப்பது உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம்.

இதை அழகிரி செய்தால் ஆர்பாட்டம்,

கருணாநிதி செய்தால் போராட்டம்.

ஒதுக்கி வைப்பார்கள்.

இது தான் “Survival of the fittest”

 

இதைத்தான் டார்வின் சொன்னார்.

 

வர்க்க சமுதாயத்தில், திறமை உள்ளவன் வளமாக மூலதனத்துக்குச் சொந்தக் காரனாக வாழ்கிறான், வக்கற்றவன் வறுமையில் வீழ்கிறான் – இதுவும் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது.

They call it as natural selection.

மனிதனின் செயற்கை ஏற்பட்டால் ஏற்றப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை இப்படி வியாக்கியானம் செய்தார்கள்.

ஆதி மனிதர் நாடோடி வேட்டையாடும் சிறு குழுவாக வாழ்ந்தனர். மொழி சிக்கலைக் கொடுத்தபடியால் ஞாபகத் தன்மையிலும் செய்திப் பரிமாற்றத்திலும் சிரமங்கள் ஏற்படப் புது விதமான முறைகளைக் கைக்கொண்டு கருத்துப் பரிமாற்றம் விரைவாகச் செய்தனர்.

ஏன், திருவள்ளுவருக்கு முன் (தி.மு) 8500 – 7000 ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கில் பயிர் வேளாண்மையும், விலங்குடனான உழவு விவசாயமும் செய்யத்தொடங்கினர் தமிழர்கள்.

பின்னோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, கூகிள் மூலம் future தேடுகிறோம்.
ஆப்பிள், ப்ளாக்பெர்ரி, சாம்சுங் என்று பல பழங்களை உண்கிறோம்.

Jump

எல்லாவற்றிற்கும் அடிப்படை ஒன்றுதான். வெள்ளைகாரனுக்கு ஒரு டார்வின், தமிழுக்கு ஒரு கணியன் பூங்குன்றனார்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான், எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

ஏனென்றால்,நம்மையும் அறியாமலே நாம் எண்ணாத இடங்களுக்குப் போகிறோம்.

மனத்தாலும் சிந்திக்காத மனிதர்களைச் சந்திக்கிறோம்

கனவிலும் எழாத நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறோம்

ஆகவே இந்தப் பரந்த உலகம் மிகச் சிறிய கிரகம் தான்.

அதன் நியதியால் வாழ்க்கையின் அலைகளில் எடுத்து வீசப்படும் நாம் இந்தக் கிரகத்தின் எந்தப் பாகத்தையும் அடைகிறோம் எதிர்பாராத பல விசித்திரச் சம்பவங்களில் அகப்பட்டுக் கொள்கிறோம் அப்படி அகப்பட்டுக் கொள்ளும்போது ஆயுளில் அறியாத முக்கிய உண்மைகளையும் அறிகிறோம்…

நான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ நாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.

நான், எனது குடும்பம், எனது அலுவலகம், எனது ஊர், எனது நாடு, எனது மொழி, என் மக்கள் என இத்தனை படிநிலைகளையும் கடந்து யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உலகமகா சிந்தனையை உணர்ந்தோர், கடைபிடிப்போர், இந்த உலகம் பெரியது என வாழ்வோர் மிகவும் குறைவு.

மூன்றுவகை மனிதர்கள் இந்த உலகில் உள்ளனர்.

என் தகுதிக்கு மதிப்பில்லை எனப் புலம்புவோர்!
கிடைத்ததுபோதும் என தன்னை தேற்றிக்கொள்வோர்!
இந்த உலகம் மிகவும்சிறியது, என் தகுதிக்கு மதிப்பளிப்போர் உலகில் எங்கும் உள்ளார்கள் எனத் தன் தகுதியின் மீது தன்னம்பிக்கை கொண்டோர்!

இதில் மூன்றாவது வகை மனிதர்கள் அரிதானவர்கள்.

அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை, தன்மானம் ஆகிய பண்புகளை ஒன்றாகப் பெற்று வாழ்பவர்கள்.

 

இவை அனைத்தும் புதிது அல்ல, முன்னோர்கள் விட்டுசென்றதுதான்.

மொட்டு கைவிரித்து, முத்திரையில் காட்டியது, உலகம் சிறியது என்பதைத்தான்.

 

மூன்று பேரிடம் விடை பெற்று, மாடிப் படியில் ஏறும் போது

சிறிய உலக உருண்டையின், மேல் தட்டில் நடப்பது போல் உணர்ந்தேன்.

 

ஆம் இந்த உலகம் சிறியதுதான். நம்புங்கள் !!!

 

 

தொடரும்

பனிப் பிரதேசம்