மகா, மொட்டு, கப்பு:
நான் ஹோட்டல் லாபியில் நடந்து வரும்போது, அங்கே மூன்று பேர் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முதுகு மட்டும், என் கண்களுக்கு தெரிந்தது. மெதுவாக சென்று அவர்கள் முன்பு நின்றவுடன்தான், அவர்களின் முகத்தை முழுவதுமாக என்னால் பார்க்க முடிந்தது.
அகண்ட முகம், சப்பை மூக்கு, ஏக்கப் பார்வை, கரை படிந்த பற்கள், சடை முடி, கிழிந்த ஜீன்ஸ் பாண்ட்ஸ், கையில் சாராயம், கப்பு நாற்றம். இவர்கள் குளிப்பது கிடையாது என்பது, எனக்கு உடனே மூக்கு சொல்லியது. என் வயிறு குமட்டி, நான் குடித்த சூப், பாதி ஜீரணம் ஆகி என் தொண்டை வழியே Reverse Osmosis தத்துவம் மூலம் நாக்கை தொட்டு சத்தியம் செய்தது.
இவர்கள் குளிப்பது மழையில் மட்டும்தான்.
சுருங்கச் சொன்னால், கிட்ட நெருங்க முடியவில்லை. என்னை பார்த்து மூவரும் முறைத்து பார்த்தார்கள்.
இவர்கள் தான் தி கிரேட் எஸ்கிமோஸ் (Eskimos).
பழக, பழக இவர்கள் உன்னத பிறவிகள் என்று புரிந்தது.
பள்ளியில், பாட புத்தகத்தில் இவர்களைப் பற்றி படித்தது உள்ளேன். இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பல நாட்கள் வியந்ததுண்டு. இன்னும் இவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. நேரில் பார்த்தவுடன், இவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் திக்கித்து நின்றேன்.
மூன்று எஸ்கிமோகள், என் முன் இருப்பதை நான் உணர, சிறிது நேரம் தேவைப்பட்டது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சென்று, நமீதாவை பார்த்தால் வரும் ஆனந்தம். எனக்கு இவர்கள் தரிசனம், பேரானந்தம்.
தாஜ்மஹால் முதல் எஸ்கிமோக்கள் வரை நான் படித்த வரலாறு புத்தக எழுத்துக்கள், உயிருடன் காணும் போது வரும் பரவசம் சொல்லி மாளாது. தாஜ்மஹாலை முதலில் பார்க்கும் போது, யமுனை ஆற்றில் ஒரு எருமை மாடு குளித்துக்கொண்டு என் பரவசத்தை கெடுத்தது. இன்று எஸ்கிமோக்கள் குளிக்காமல் வந்து என் பரவசத்தை கெடுக்கிறார்கள்.
தயங்கிய என்னிடம் ஒருவன், சாராய பாட்டிலை நீட்டினான். எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. ஒரு நிமிடம் கூட இவர்களுடன் என்னால நிற்கமுடியாது. சீக்கிரம் பேசிவிட்டு ஓடிப் போய் குளிக்கவேண்டும் என்று தோன்றியது. என் பெயரை சொல்லி நான், மண்டையன் அனுப்பிய ஆள் என்றேன். சொல்லியதுதான் தாமதம். என்னை அப்பிடியே வாரி அணைத்து, அவர்களுடன் சேர்த்து கட்டி தழுவி….முத்தம் மட்டும் தான் கொடுக்கவில்லை. என்னை கட்டிபிடித்து, என் உடல் சுத்தத்தை மாறி மாறி கற்பழித்தார்கள். ஆரண்ய காண்டம், condom இல்லாமல் இரண்டு நிமிடத்தில் முடிந்து போனது. மூச்சு இறைக்க, அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்து எதிரே உள்ள இருக்கையில் அமரப் போனவனை விடாமல், அவர்கள் இடையே என்னை சொருகி அமர வைத்தார்கள்.
யார் இவர்கள்? என்பதை முதலில் சொல்கிறேன்….இவர்கள்தான் இனுவிட்டு மக்கள் (ஆங்கிலத்தில் எசுக்கிமோ என்றும் அழைக்கப்பட்டனர்). ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களை இது குறிக்கும். இவர்கள் கனடா, டென்மார்க், கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அலாஸ்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், நியூபின்லாந்து லாபிரடோர் பகுதியில் வாழும் மக்கள்.
இனுவிட்டு (Inuit) என்றால் “மக்கள்” என்று அவர்கள் மொழியாகிய இனுக்டிடூட்டு (Inuktitut) மொழியில் பொருள். இனுக்கு (Inuk) என்பது இனுவிட்டு மக்களைச் சேர்ந்த ஒரு பெண்ணையும், இனுவிட்டு என்பது அம்மக்களைக் குறிக்கும், அச்சொல்லின் பன்மை வடிவம் என்றும் கூறுவர். இனுவிட்டு மக்களின் மொழி எசுக்கிமோ-அலூவிட்டு மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.
இவர்கள் அனைவரும் ” Thule” என்னும் கலாச்சாரம் வழி வந்த மக்கள். இவர்கள் மூதாதையர்கள் ரஷ்ய சைபீரியாவில் இருந்து நாய்கள் மற்றும் ஈட்டிகளுடன் மேற்கே குடிபெயர்ந்தவர்கள். உலகத்தில் இவர்களின் மக்கள் தொகை சுமார் 120,000. கனடா, கிரீன் லாந்து, அமெரிக்க அலாஸ்கா தான் இவர்கள் பூர்வீகம்.
கனடா இனுவிக் தான் இவர்கள் பெரும்பாலும் வசிக்கும் கிராமம். இது வெறும் 3000 பேர் வசிக்கும் ஒரு கிராமம். இது north western territories (Canada) வில் இருக்கிறது. நான் பயணத்தில் கடைசியில் சென்று சேரும் இடம், இனுவிக்தான். அதனால்தான் மண்டையன், இவர்களின் உதவியை எனக்கு தருமாறு கேட்டு உள்ளான்.
மெதுவாக பேச்சு கொடுத்தேன். இடம் இருந்து வலம், Introduction:
Morash Nasogaluak – மகா குடிமகன்
Yakeleya Mottou – சுமார் குடிமகன்
Marjorie Moretti – கப்பு குடிமகன்
இவர்களில் ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். அவர் தான் Yakeleya Matou ( நாம் இவரை “மொட்டு”) என்று இனி குறிப்பிடலாம். மொட்டு தான் முதலில் பேச ஆரம்பித்தான். நான் மொட்டுவிடம் கேட்டேன்…” அடுத்த வாரம் இனுவிக் வருகிறேன்…நீங்க தான் உதவி செய்யணும்…ஆர்டிக் எனக்கு புதுசு…” என்றேன்.
“மொட்டு” மெதுவாக விரிய ஆரம்பித்தது.
வெள்ளை குதிரையில் இருந்து ஆர்டிக் செல்ல மொத்தம் ஒரு வாரகாலம் ஆகும் என்றும், இது மிகவும் கடினமான பயணம் என்றும் “மொட்டு” ஆங்கிலத்தில் தட்டு, தடுமாறி சொல்ல, இதை ஆங்கிலம் தெரியாத “மகா”வும், “கப்பு”வும் தலையாட்டி அமோதித்தார்கள். இது தான் நான் கடந்து செல்ல வேண்டிய பாதை என்று ” மொட்டு” சொன்னான்.
மகா என்பவர் – Morash Nasogaluak – மகா குடிமகன்
கப்பு என்பவர் – Marjorie Moretti – கப்பு குடிமகன்
Starts in White Horse , via Dawson – Eagle Plains – Artic Centre – Polar Circle – Canada Ice Road – Mackenzie River- Tuktoyaktuk – Inuit – Alkavik – Eskimo Lakes and Ends in Arctic Sea
Tuktoyaktuk, Inuit, Alkavik சென்று அடைந்தவுடன், நான் சைபீரிய ஹஸ்கி நாய்களின் உதவியுடன் கடைசி இரு நாட்களில், ஆர்டிக் பகுதிகளை கடக்க வேண்டும். இதற்கு தேவையான பயிற்சியும் தேவை. அதை வெள்ளை குதிரையில் மண்டையன் ஏற்பாடு செய்து இருந்தான்.
இந்த மூன்று பேரும், என்னை மீண்டும் கடைசி கட்டத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. ” மொட்டு”வின் இக்லூ வீட்டில் தங்கவும், ‘மண்டையன்” ஏற்பாடு செய்து இருந்தான்.
நான், மெதுவாக “மொட்டு” விடம் அவர்களின் தின வாழ்க்கை ஆர்டிக்கில் எப்படி இருக்கும் என்று கேட்டேன்.
“முதலில் வீடுகள் பற்றி சொல்கிறேன்” என்று சொன்னான் மொட்டு. பொதுவாக நாங்கள் வாழும் பகுதிகள் treeless places என்பார்கள். எஸ்கிமோக்கள் குளிர்காலத்தில், பனி வீடுகள் கட்டி, அதில் வசிப்பார்கள். புதிய பனியை (Fresh Snow) வெட்டி, இந்த domed வீடுகளை கட்டுவார்கள். பொதுவாக எஸ்கிமோக்கள் தாங்கள் தங்கும் எந்த வீடையும் இக்லூ என்றே அழைப்பார்கள் என்றான் “மொட்டு”.
கனடா மற்றும் கிரீன்லாந்து , மற்றும் இவரது மற்ற பகுதிகளில் , சில எஸ்கிமோக்கள் கல்லை கொண்டும் குளிர்காலத்தில் வீடுகள் கட்டுவார்கள் . இவர்கள் வீடுகளுக்கு முட்டு கொடுக்க, மிதக்கும் பனி சிதறல் அல்லது whalebone பிரேம்கள் மீது கூரை அடுக்குகளை வைத்து கட்டுவார்கள். பொதுவாக ஒரு வீட்டில், ஒரு அரை மட்டுமே இருக்கும்.
வீடுகளில் Caribou தோலில் போர்த்தப்பட்ட பெஞ்சுகள் மீது படுத்து தூங்குவார்கள். கோடை காலத்தில், கிட்டத்தட்ட அனைத்து எஸ்கிமோக்களும் Seal அல்லது Caribou தோல்களால் செய்யப்பட்ட கூடாரங்களில் கட்டி வாழ்வார்கள். கரிபு என்றால் reindeer அல்லது wild reindeer. இது ஒரு மட சாம்ப்ரணி விலங்கினம்.அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.
மொட்டுவிடம் கேட்டேன், நீங்கள் தினம் என்ன சாப்பாடு சாப்பிடுவீர்கள்?
மொட்டு சொன்னான் ” எங்கள் பாரம்பரிய எஸ்கிமோ உணவு சீல்ஸ் , திமிங்கலங்கள் , மற்றும் பிற கடல் பாலூட்டிகள்தான். குளிர்கால மாதங்களில் வேட்டையாடி இறைச்சியை சமைக்காமல் பெரும்பாலும் உண்ணுவோம். சில சமயம் சமைத்தும், சில சமயங்களில் உலற வைத்தும் . கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் முக்கிய உணவு Caribou , small game, மீன், மற்றும் பெர்ரி பழங்கள் ஆகும்.
ஒரு பாரம்பரிய எஸ்கிமோ சந்தோசமாக இருந்தால் எஸ்கிமோ ஸ்பெஷல் ஐஸ் கிரீம் செய்து உண்பான் என்று மொட்டு சொன்னான். இது தான் akutok, இதை பெரும்பாலும் எஸ்கிமோ ஐஸ்கிரீம் என அழைப்பார்கள். ஆர்க்டிக் பெர்ரி , சீல் எண்ணெய் , மற்றும் Caribou இறைச்சி மூன்றையும் மிக்ஸ் செய்து இது தயாரிக்கப்படுகிறது .இவர்கள் சூடான தேநீர் மற்றும் பிஸ்கட் போன்றவற்றையும் சாப்பிட பழகிவிட்டார்கள் இந்த காலத்தில் என்றான் மொட்டு.
மொட்டு ஜீன்ஸ் பாண்ட்ஸ் அணிந்து இருந்தான். சரி உங்கள் பாரம்பரிய ஆடை எது என்று கேட்டேன். அதற்கு அவன் எஸ்கிமோ ஆடை விலங்கு தோல்களால் தான் பெரும்பாலும் செய்யப்பட்டது . பாரம்பரியமாக, ஆண்கள், பெண்கள் , மற்றும் குழந்தைகள் ஒரே மாதிரி உடை அணிவார்கள். தனி தனியான உடைகள் கிடையாது.
அவர்கள் நீர் கடல் நாயின் தோல் பூட்ஸ் , parkas என்று முகமூடி உரோம ஜாக்கெட்டுகள், மற்றும் Caribou, நரி அல்லது துருவ கரடியின் தோல்களால் செய்யப்பட்ட ரோமங்கள் அடர்ந்த கால்சட்டை அணிந்து இருப்பார்கள். அவர்களின் நீர்ப்புகா ஜாக்கெட்டுகள் சீல் விலங்கின் குடலால் செய்யப்பட்டன. ஒரு எஸ்கிமோ தாய் தன், குழந்தையை தன் முதுகில் உள்ள Parka பையில் வைத்து சுமந்து இருப்பாள் என்றான் மொட்டு.
குடும்ப வாழ்க்கை எப்பிடி இருக்கும் மொட்டு என்றேன்?
கல்யாணம் உண்டு. குழந்தைகளும் உண்டு. திருமணமான ஜோடிகள் முதல், குடும்பத்தில் பெற்றோர்கள், சகோதரர்கள், திருமணமாகாத சகோதரிகள் என அனைவரும் ஓரே கூரையின் கீழ் தான் வசிப்பார்கள். வழக்கம் போல் ஆண்கள் வேட்டை ஆடுவார்கள். பெண்கள் வீட்டை ஆளுவார்கள்.
பெண்கள், கோடையில் ஆடைகள் மற்றும் உணவு தயார் செய்வார்கள் . குளிர்கால மாதங்களில் பெரும்பாலும் கும் இருட்டு தான் . இவர்களிடம் தலைமுறை தலைமுறையாக வழிவந்த கதைகள் கோடி உண்டு . இதை பெரியவர்கள் அனைவருக்கும் சொல்லி தங்களை தானே மகிழ்வித்த வண்ணம் குளிர்காலத்தை கடத்துவார்கள். இசையுடன் நடனமாடாத இரவுகள் எஸ்கிமோக்கள் மிகவும் அரிது.
சரி, என்ன சாமி கும்பிடுவீங்க மொட்டு என்றேன். இயேசு தான் என்றான். பயணம் முடிந்து வீட்டுக்கு வந்து ஆராய்ந்தபோதுதான் தெரிந்தது, பாதிரியார்கள் ஆர்டிக் வரை சென்று மதம் மாற்றத்தை செய்து உள்ளார்கள் என்று. சில குடும்பங்கள் இன்றும் சூனியக்காரர்களை நம்புவதுண்டு. ஆவிகள் அழைக்கிறேன் பேர்வழிகளும், கடவுளுடன் trunk call பேசுபவனும் எஸ்கிமோ வாழ்க்கையில் உண்டு.
போக்குவரத்து எப்படி?
நிலத்தில் எஸ்கிமோக்கள் showshoes மற்றும் dogsleds பயன்படுத்துவார்கள். Huskies என அழைக்கப்படும் roughcoated நாய்கள் , Huskies, சுமார் 500 to 1,000 pounds (225 to 450 kg) வரை இழுத்து செல்லும் திறன் படைத்தவை.
இவர்களிடம் இரண்டு வகையான படகுகள் இருக்கும். Ice floes மற்றும் Larger skin boats, called umiaks.
Ice floes சிறியது. மிதக்கும் சிதறல் சட்டம், அதன் மீது கடல் நாயின் தோல் மூடப்பட்டிருக்கும் , ஒரு கயாக் மாதிரி இருக்கும்.
Umiaks என்பவை பெரிய தோல் படகுகள். இதில் பல எஸ்கிமோக்கள் பயணம் செய்வார்கள் . அவர்கள் திமிங்கலம் வேட்டைகள் மற்றும் ஒரு இருந்து இன்னொரு இடத்திற்கு முழு குடும்பங்கள் நகரும் போது இதை பயன்படுத்துவார்கள்.
வேட்டை வாழ்க்கை எப்படி மொட்டு இருக்கும்? என்று கேட்டேன்.
19 ஆம் நூற்றாண்டு வரை அம்பும் வில்லும் கொண்டு caribou முதல் போலார் கரடிகள் வரை வேட்டை ஆடினார்கள். சீல் விலங்கை கொல்ல, பனியால் ஆன ஒரு ஈட்டியை அதன் சுவாசம் துளைகுள் குறிபார்த்து எறிவார்கள், எஸ்கிமோக்கள். திமிங்கல வேட்டையை பற்றி அரைமணி நேரம் விளக்கினான் மொட்டு. இதை விளக்க தனி தொடர் ஒன்று தேவைப்படும். இதை தவிர எல்லாருக்கும் தெரிந்த ” Ice Fishing” Patent இவர்களிடம் தான் உள்ளது. கீழே உள்ள காணொளியை பாருங்கள். இவர்களின் வாழ்க்கையை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
சுமார் மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. மகா, மொட்டு மற்றும் கப்புவிடம் நானும் ஐக்கியம் ஆகி மெதுவாக நாறத் தொடங்கினேன். இப்பொது அது புது சுகம் தந்தது. பேச பேச, அவர்கள் புனிதர்கள் என்று புரிந்தது.
ஏழு நாட்கள் எப்படி குளிரை தாங்குவது, எதை உண்ண வேண்டும், எப்படி பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எல்லா தகவல்களையும் வாங்கியபின்பு ஒரு புகைப் படம் எடுக்கவேண்டும் என்று கேட்டேன். அது தான் நீங்கள் பார்த்தது.
கை முத்திரையை காட்டி போஸ் கொடுத்தார்கள். இது ரஜினி பாபா முத்திரை. எனக்கு ஆச்சிரியம் தான்.
என்ன முத்திரை இது என்று மொட்டுவிடம் கேட்டேன்.
மொட்டு முத்திரையின் பின்னணியை சொல்ல சொல்ல உலகம் சுருண்டது.
தொடரும்
ஆர்க்டிக் பயணம்
காரில் செல்பனுக்கு வயல்வெளி ஒரு சேற்றுச்சுழலாகவும் அதன் வரப்புக்கள் சகதியாகவும் தெரியும். ஆனால் உலகுக்கு உண்டி கொடுக்கும் விவசாயிக்கோ அது பஞ்சுமெத்தையாய் விளங்கும். அதுபோல் இயற்கையின் அரவணைப்பில் வாழும் நம் ஆர்ட்டிக் நண்பர்களின் உடல்வாசனை நமக்குக் கப்பு அடித்தாலும் அவர்களுக்கு மழையில் நனையும் வரை அவ்வாசனை சுகந்தமாய் தோன்றலாம். மேலும் சோப்புப் போட்டுக் குளித்துச் சென்ற நமது ஶ்ரீதரின் உடல் வாசனை நமது ஆர்ட்டிக் நண்பர்களுக்கு எப்படி இருந்ததென்று நல்ல வேளை அந்த ஆர்ட்டிக் நண்பர்களிடம் நமது ஶ்ரீதர் கேட்காமல் விட்டுவிட்டார். அடுத்தமுறை அவர்களைச் சந்திக்கும்போது கவனமாய் பார்க்கவும்; அவர்களின் விரல்கள் த்ற்செயலாய் அவர்களது மூக்கின் அருகே உள்ளனவாவென்று!
Palaniswamy Rathinasamy
உண்மைதான் சார், இவர்கள் மனதளவில் மிக சிறந்தவர்கள், விவசாயிகளைப் போல. பகடிக்காக சித்தரிக்கப்பட்ட வாக்கியங்கள்.. ஈஸ்கிமோகள் இல்லா வடக்கு, இயற்கையின் முடக்கு.
பனிப்பிரதேச பயணத் தொடர் – பாகம் 15:
சென்ற பதிவின் புகைப்படத்தில் கண்ட ரஜினி ஸ்டைல் ‘பாபா’ முத்திரை இங்கு கொஞ்சம் பிறழ்ந்து ‘டாஸ்மார்க்’ முத்திரையோ என்று சொல்லும் வண்ணம் தெரிவது பதிவின் துவக்கத்திற்கு (கப்பிற்கு) பொருத்தமே!
நம் ஆர்க்டிக் ஹீரோவின் மான்-கராத்தே (குங்பூ) முத்திரையில் மட்டும் மாற்றம் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஆனால், கொஞ்சம் நெளிந்து, குழைந்து அமர்ந்த ‘மடியாசனத்தில்’ மட்டும், ‘ஆரண்யகாண்டத்தின்’ நெருடல் வாசனை தெரிகிறது.
மணியான ஆரம்பம்! “மகா,மொட்டு, கப்பு” என்றது தமிழ் திரைப்பட (தத்துவ) பாடல் ஒன்றை நினைவு கூர்கிறது. ‘காசு-பணம்-துட்டு’ (மனிமனி)
அன்று பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்தில் படித்த எஸ்கிமோக்களை, இன்று வடதுருவத்தில் நேரில் கண்டதும், அதை ‘செவ்வாய் கிரகம் சென்று நமீதாவைக் கண்ட பரமானந்தத்திற்கு’ ஒப்பீடு செய்தது, நம் ஆர்க்டிக் ஹீரோவின் அழகிய (கிளி) ரசனையையே திரும்பவும் பிரதிபலிக்கிறது.
பின்னர், ஆரத்தழுவிய ஆரண்ய காண்டத்தில், சோப்பால் வந்த உடலின் பரிசுத்தம், சுத்தமாக ‘கப்’பால் காணாமல் போனதை, கற்பியலோடு ஒப்பிட்ட நயமும், நம் ஹீரோவின் அன்றைய மடியாசனத்தின் நெருடலை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
மேலும் எஸ்கிமோக்களின் ‘கப்பிற்கு’ முழுகாதது (குளிக்காதது) தான் முழுமுதல் காரணம் என்றும், அதுவே தன் பரவசத்தையும் அன்று கெடுத்தது என்பதையும், அதற்கு உவமையாக ‘என்றோ ஒருநாள் தாஜ்மகாலின் அழகின் ரசனையை, யமுனை ஆற்றில் எருமை ஒன்று வந்து கெடுத்து விட்டதற்கு’ ஒப்பிட்ட நயம் அருமை!
[இது சமயம், நம் பிதாமகர் டாக்டர் சுவாமி அவர்கள் இங்கு பதிவு செய்துள்ள கருத்து ஆழ்ந்து நோக்கத் தக்கது. காரில் செல்பவனுக்கு, சேரும் சகதியும் கசந்தாலும் உலகுக்கு உண்டி கொடுத்தவனுக்கு (விவசாயிக்கு) அது பஞ்சு மெத்தை என்றதுவும், இயற்கையின் அரவணைப்பில் வாழ்பவர்களுக்கு அதுவே சுகந்தம் என்றதுவும் சத்தியமான வார்த்தைகள்!]
அதே நேரத்தில் “பழகப் பழக இவர்கள் உன்னதப் பிறவிகள்” என்ற நம் ஆர்க்டிக் ஹீரோவின் வார்த்தைகளோ, தான் ஆர்க்டிக் மக்களிடம் கொண்டிருந்த ஆழமான உயிரோடு கலந்த அன்பை, கண்ணாடி போல் காட்டுகிறது.
(தொடரும்)
பின்னர், “மொட்டு விரிந்ததாக” கூறி, “எஸ்கிமோ அல்லது இன்யுவிட்” என்ற ஆர்க்டிக் மக்களின் பூர்வீகம், மொழி, குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களது இக்லூ என்ற பனி வீடு பற்றியும்- தினசரி வாழ்க்கையில் அவர்களது ஆகாரம், பாரம்பரிய ஆடை, போக்குவரத்து, வேட்டை வாழ்க்கை, மற்றும் இசையோடு கூடிய நடனம் பற்றியும்- விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் அழகான புகைப்படங்களோடும், உயிரோட்டமான காணோளியோடும் நம் ஹீரோ பதிவு செய்த விதம் அற்புதம்!
எஸ்கிமோக்களின் சமயம் பற்றி சொல்லும் போது, கிருஷ்துவப் பாதிரிமார்கள் ஏற்கனவே ஆர்க்டிக் வரை சென்று மதமாற்றம் செய்திருந்த விபரத்தையும், ஆனாலும் இன்றும்கூட சில குடும்பங்கள் சூனியக்காரர்களை நம்புவதாகவும், “ஆவிகள் அழைக்கிறேன் பேர்வழிகளும், கடவுளுடன் டிரங்காலில் பேசுபவர்களும்” அங்கு சகஜம் என்று தெளிவு படுத்திய நயம் அழகு!
மொட்டு விரிந்ததில் மூன்று மணி நேரம் போனது கூட தெரியாமல் தானும் ‘மகா- மொட்டு- கப்புவுடன்’ ஆரம்பத்தில் ஐக்கியமாகி நாறத் தொடங்கி, பின்னர் பேசப் பேச, பழகப்பழக, அவர்களோ இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழும் புனிதர்கள் என்பதை புரிந்து கொண்டு, அதையே பின்னர் ‘புதுசுகமாக தானும் உணர தலைப்பட்டதுவும்’ உன்னதமான செயலே. பின்னாளில் தானும் கூட புனிதராவதற்கு (புனிதரானதற்கு- சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.டர்) அது ஒரு அடித்தளமே!
கடைசியாக, ரஜினி – “பாபா முத்திரையின் பின்னணியைப் பற்றி மொட்டு சொல்லச் சொல்ல உலகம் சுருண்ட மர்மத்தைக் கேட்க” அனைவரும் ஆவலாக உள்ளோம்!
(முற்றும்)