2014 தேர்தல் முடிந்தவுடன் ஏழு ‘குடி’மகன்கள் ஒரு மதுபாண கடையில் சந்தித்தார்கள்.

தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. மோடியும் வெற்றி பெற்று விட்டார்.

 

ஒரு வட்ட மேஜையில் மொத்தம் ஏழு பேர்…குடி நண்பர்கள்.

குப்பியில் மது, குடித்துகொண்டே முதல் ஒருவன் ஆரம்பித்தான்….

 

சரி, யார் யார்..யாருக்கு வோட்டு போடீங்க?

 

ஒவ்வருத்தரா சொல்லுங்க என்று ஒரு பெக்கை அடித்துக்கொண்டே கேட்டான்.

 

முதல் ஒருத்தன் சொன்னான் “நான் அம்மாவுக்கு தான் போட்டேன். அம்மா “செய்வீங்களா..செய்வீங்களா..? னு மிரட்டி கேட்டுச்சு”. குடி போதையில என் பொண்டாட்டிதான் மிரட்டுறானு  நினைச்சி நேரா போய் குத்திட்டேன்”

கைய நீட்டி மிரட்டினா உங்களுக்கே தெரியும், நான் கால்ல விழுந்துடுவேன். அது எனக்கு வீக்னெஸ். இருந்தாலும் அம்மா ஜெயித்ததில் எனக்கு சந்தோசம்” என்றான்.

நாங்க ” காலும் காலும் சேர்ந்து கை எடுத்து கும்பிடும் வாழக்கை வாழும் ஜீவராசிகள்” என்றான்.

 

இரண்டாவது குடிகாரன் “டமார்” என்று டேபிளின் மீது சத்தியம் செய்தான்.

 

“நான் செத்தாலும் கேப்டன் மடியல தான் சாவேன். குடிமக்களுக்காக குடிச்சிட்டு பேசற ஓரே தலிவன் என் கேப்டன்” என்றான். சரி வோட்டு அவுருக்குதான் போட்டியா என்று கேட்டான் ஒரு குடிகாரன். ” அதை ஏன் கேக்குற… வோட்டு அன்னிக்கு போதை ஏறி ” தே.மு.தி. க” வுக்கு பதில் தி.மு.காவுக்கு போட்டுடேன். வெளிய வந்த என்னை தலைவன் தலையில் கொட்டிட்டார். இரத்தம் கொட்ட ” கேப்டன், நான் போதையில தப்பு பண்ணிட்டேன்..என்னை மன்னிச்சுடுங்க” என்றேன்.

 

அதுக்கு கேப்டன் ” என் வாழ்க்கையில் புடிக்காத வார்த்தை மண்ணிப்பு, அதனால “Sorry” னு  சொல்ல சொன்னார். நானும் னு  சொன்னேன். அதுக்கு அவர் ” வெரி குட்…நானும் போதையில அதே தப்பை செஞ்சேன். பிரேமா கிட்ட நானும் சாரிதான் சொன்னேன். ஓடி போடான்னு வெரட்டி வுட்டாரு” என்றான்.

 

மூணாவது ஒருத்தன், அழுததுட்டே இருந்தான். ஏன்டா அழுவுற பரவாயில்லை சொல்லு..என்ன ஆச்சு? என்றனர். அவன் அதுக்கு சொன்னான் ” நான் வை.கோபால்சாமி கட்சி. அண்ணன், வை.கோ ஒரு மானஸ்தன். தலைவனுக்கு எப்பிடி தெரியுமோ தெரியாது, தேர்தலுக்கு மூணு மாசம் முன்னாடி, கருகெட்டா தோக்கற பக்கம் போயிடுவாரு. நல்லவங்களை கடுவுள் சோதிப்பாரு..ஆனா கைவிட மாட்டாருனு  சொல்லுவாங்க. இதில விதி விளக்கு, எங்கள் அகல் விளக்குதான்”. மீண்டும் அழ ஆரம்பிச்சவன்…மயங்கிட்டான்.

 

நாலாவது குடிகாரன் சொன்னான் “நான் ராமதாசு கட்சி. ஒன்னு, எங்களுக்கு வெட்ட தெரியும், இல்லை கொளுத்த  தெரியும். ரெண்டும் இல்லைனா திட்ட தெரியும். எங்களுக்கு உள்ள ஓரே கொள்கை, கொள்கை இல்லாமல் இருப்பது தான். என் வாரிசு அரசியலுக்கு வந்தால் என்னை செருப்பால் அடிக்கலாம் என்று என் தலைவன் சொல்லி 15 வருஷம் ஆனது. நான் அன்னிக்கு இருந்து செருப்பு போடுறது இல்லை. ஆனா வோட்டு மட்டும் அவுருக்கு தான் ” என்றான்.

 

ஐந்தாவது குடிகாரன், துடைப்பகட்டை கட்சி. அதாங்க “ஆம் ஆதாம் ஏவால் கட்சி. எப்ப பாத்தாலும் ஊட்டிக்காரன் மாதிரி மப்ளர் போட்டுக்கிட்டு தெருவுல உட்காந்து போராட்டம் செய்வங்களே….கேஜ்ரிவால் கட்சி. அவன் சொன்னான் ‘ எங்க தொகுதியில வோட்டு போட போனேன். துடைப்ப கட்டை வேட்பாளர் எங்க தொகுதியில் இல்லை. அதனால, சுயேட்சை வேட்பாளர் குப்பை கூடை சின்னத்தில் நின்று இருந்தார். அவருக்கு போட்டு விட்டேன் என்றான். எங்களுக்கு Government, Governance மீது நம்பிக்கை இல்லை. எங்கயாவது போரடுனும்னு கூப்பிட்டா நாங்க போய் தெருவுல உட்காந்துகுவோம். நாங்க ” தெருவும் தெரு சார்ந்த வாழ்க்கை வாழும் ஜீவராசிகள்” என்றான்.

 

ஆறாவது குடிகாரன் ஈழ வியாபாரி, சாரி, ஈழ போராளி; சீமான் கட்சி. குடித்துவிட்டு மட்டையாகி இருந்தான். அவனை எழுப்பி யாருக்குடா உன் ஓட்டைப் போட்டே என்று கேட்டார்கள். சீமான் தான், தமிழ் தேசிய தலைவருடன் பிரேக் பாஸ்ட் சாப்பிட்ட ஒரே தலைவர். எங்க தலைவனின் ஓரே குறிக்கோள் எதை பேசினாலும் முன்னாடி ஈழம்னு போட்டுகுவாறு. முடிக்கும் போதும் ஈழம்னு முடிப்பாரு. அண்ணன் சே குவாரா சட்டை போட்டு United nations ல பத்து நிமிஷம் பேசினா தனி ஈழம் Fed Ex – ல Free Home Delivery செஞ்சுடுவாங்க. ஆனா ஜெனீவாவுக்கு விசா தராம இழுத்து அடிக்கறாங்க” என்றான்.

 

கடைசியா ஒருத்தன் பேசாமல் இருந்தான்.

ஏழாவது குடிகாரனை பார்த்து ” நீ ஏன் பேசாம இருக்க..ஓட்டு போடவில்லையா?” என்று கேட்டார்கள்.

அதுக்கு அவன் சொன்னான் ” அடப்பாவி குடிகார பசங்களா…நாம யாரும் ஒட்டு போடவில்லை.

 நாம செத்து பத்து வருஷம் ஆச்சு. இப்ப நாம இருக்கறது நரகத்தில.

இங்கேயும் குடிச்சுபோட்டு ஏண்டா என் தாலிய அறுக்கறீங்க? போய் வேற வேலைய பாருங்க. குடி போதையில உளறாதீங்க. நான் தெளிவாதான் இருக்கேன்” என்றான்.

அதை கேட்ட மீதி ஆறு பேரும் “நீ தான் பொய் சொல்ற….நாம நரகத்துலதான்  இருக்கோம்னு எப்படி நாங்க நம்பறது?” என்று கேட்டார்கள்.

அதுக்கு அவன் சொன்னான் ” நீங்க வேணும்னா, பக்கதுல டேபிள்ல திரும்பி பாருங்க. சுத்தி இங்க என்ன நடக்குதுனு பாருங்க. அப்ப தெரியும் நீங்க நரகத்துலதான் இருக்கீங்க” என்றான்.

 

மீதி ஆறு பேரும் திரும்பி பார்த்தார்கள்.

அங்கே ஒரு டேபிளில், முத்துவேல் கருணாநிதியும், இத்தாலி சோனியா காந்தியும்  சீட்டு கட்டு வைத்து Bluff கேம் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னொரு டேபிளில், ராஜாவும், கனிமொழியும் எமலோகத்தில் 15 G இன்டர்நெட் connection கொடுக்க, டீலை கொஞ்சி கொஞ்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஸ்டாலின் ஒரு பக்கம் 90 வயசு பேய்களுடன், இளைஞர் அணி எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தார்.

 

தனியா ஒரு பேய், திரும்பி உட்காந்து விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தது.

 

அதை ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்று கோபத்தில் இருந்தது. தனுக்கு தானே ” I am Azhagiri, கருணாநிதி எனக்கு வடகறி” என்று புலம்பிக்கொண்டு இருந்தது.

மூலையில் ஒரு டிவியில் கலாநிதி மாறன் “எமலோக தொலைக் காட்சியில் முதல் முறையாக கோச்சடையான்” என்று கத்திக்கொண்டு இருந்தார்.

முரசொலினு ஒரு பேய், பான்ட் சட்டை போட்டு, “ ஒன் கால் டு இந்தியா, ஏக் எமலோக டாலர்” என்று கூவி கூவி வித்துக்கொண்டு இருந்தது.

 

இப்ப அந்த ஏழாவது குடிகாரன் கேட்டான்” இப்பவாவது நம்பறீங்களா…நீங்க நரகத்துல தான் இருக்கீங்க?” என்றான்.

ஆறு பேரும் “இது எல்லாம் செட்டப்பாக கூட இருக்கலாம். எங்களுக்கு ஒரு Solid Proof வேணும்” அப்ப நம்புவோம் என்றார்கள்.

அதுக்கு அவன் ஆறு பேரையும், பக்கத்துக்கு ரூமுக்கு கூட்டிட்டி போய் நிறுத்தினான் .

அங்கே ஒரு எண்ணெய் கடாயில் மஹிந்த ராசபக்சேவை ஒரு பத்து அரக்கர்கள் உயிருடன் வேக வைத்து கொண்டு இருந்தார்கள்.

ஒரு அரக்கன் ஒரு கரும் பலகையில் இது நூறாவது நாள்..இன்னும் 5 லட்சம் Pending Days என்று எழுதிக்கொண்டு இருந்தான்.

இப்ப சொல்லுங்க” இதை விட என்ன வேண்டும், நான் உங்களுக்கு prove செய்ய? இது நரகம் தான் என்றான்?”

 

அப்பவும் நம்பலை மீதி இருந்த குடிகாரங்க…

கைடிசியா ஒன்னு காமிக்கிறேன். அப்ப நம்புவீங்கனு  சொல்லி ஒரு பெரிய ரூமுக்கு கூட்டிட்டி போனான்.

அங்கே, எம தர்ம மாகாராஜா ஒருத்தரை எருமைத் தோல் பெல்டால, பேசி பேசி அடிச்சிட்டு இருந்தாரு.

ஆனா அடிவாங்கியவர்  பேசாமல் அடியை வாங்கி கொண்டு இருந்தார்.

கிட்ட போன ஆறு பேரும் அங்க அடிவாங்கின ஆளைப் பார்த்து அசந்து போய்ட்டாங்க.

 

அங்க, எமன் அடிச்சிட்டு இருந்தது Dr. மன்மோகன் சிங்கை.

எமன் கோவத்துல அடிச்சிகிட்டே Dr. மன மோகன் சிங்கை பார்த்து கேட்டார்.

“மத்த ரூம்ல இருக்கிற இந்திய அரசியல் வாதிங்க படிக்காத முட்டாள் பசங்க.

ஏமாத்தி பொழைப்பு நடத்தி மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிச்சன்வங்க.

அவுங்க பிறவி பாவிங்க. இங்க வந்தும் என் நரகத்து அரகன்களை லஞ்சம் கொடுத்து சரிகட்டி சீட்டு விளையாடிட்டு இருக்குங்க.

அவுங்கள அப்புறம் பாத்துக்குறேன்.

 

இந்த மொத்த நரகத்தையும் கெடுத்தவன் கண்ணாடி போட்டுட்டு, மஞ்ச துண்டோட கவிதை பாடிட்டே சீட்டு ஆடும் பேய் தான்.

அதை தனியாதான் டீல் செய்யணும். அத விடு…

 நீ படிச்சவன் தானே…

என்னோமோ வெளிநாட்ல படிச்சவன்னு சொன்னாங்க.

Election நிக்காம, வோட்டும் வாங்காம படிச்சவன்னு உன்னை பத்து வருஷம் பிரதம மந்திரியா உட்காரா வச்சா, நீ தப்பு நடக்கும் போது தடுக்காம, உன் தொண்டி காலை வைச்சுக்கிட்டு பொம்மை மாதிரி வாயை மூடிட்டடு இருந்து இருக்கே…

ஒரு இனத்தை கொன்னவன் வெந்துட்டு இருக்கான்.

கொல்லும் போது, தன் வாரிசுக்கு மந்திரி பதவி கிடைக்க வீல் சேரில் சென்று “வீல் வீல்”னு டெல்லியில் தவம் இருந்தவனையும் நான் சும்மா விட போறதில்லை.

புருஷனை கொன்னவனை விட்டு விட்டு, அப்பாவி மக்களை கொன்ன புண்ணியவதியும், பாமாயிலதான் வேக போகுது.

எமன்தான் நான். தப்பு செஞ்சவன தான் கொல்வேன். அதுவும் வாழவுட்டு கொல்வேன்.

தப்பு செஞ்சவன் திருந்த வாய்ப்புகள் கொடுக்கணும்னு பிரம்மன் ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்காரு.

நான் பயங்கரவதத்தை ஆதரிப்பவன் இல்லை. யார் செய்தாலும், செய்ய தூண்டினாலும் அது தப்பு.

 

பாவம் அப்பாவி தமிழர்கள் என்ன செய்தார்கள்?

இலங்கையில் பிறந்தது அவர்கள் குற்றமா? இல்லை தமிழ் பேசுவது அவர்கள் குற்றமா?

நீ பிரதமராக இருக்கும் போது, ஐரோப்பாவில் ஒரு பஞ்சாபி பாதிரியாரை கொன்ன போதுமட்டும் வாயை திறந்து பேசின.

 நீ படிச்சவன் தானே..உனக்கு எங்க போச்சு அறிவு?

உங்காளு ஒருத்தன்தான் ஒரு பிரதமரை கொன்னான்? உன்னை பிரதமர் ஆக்கலை இந்த நாடு?

 கொத்து கொத்தா கொல்லும் போது, துணை போனவனை விட, படிப்பு இருந்தும், அறிவு இருந்தும், அதை தடுத்து நிறுத்தும் பொறுப்பும் பதவியும் இருந்தும், வாயே திறக்காம இருந்த உன்னை, நான் வளக்கற எருமை மாடு கூட மதிக்காது.

 

நான் கொடுக்குற அடியில நீ பேசனும்…அட நீ எங்க பேச போற…சரி நல்லா கத்து …

நீ கத்துற கத்து, அது இப்ப வந்த மோடி மஸ்தானுக்கு கேட்கனும். இதே தப்பை, அவர் செய்ய மாட்டார்னு நினைக்கிறேன்.

தமிழ் மொழி பேசுறவன் எங்க இருந்தாலும் அவன் தமிழன்தான்.

அதனால தான், இந்தியாவில அதுக்கு தமிழ் நாடுனு பேரு. தமிழ் பிரதேசம் இல்லை.

 

அப்போ, எமனோட பொண்டாட்டி ” ஐயோ” ஓடிவந்து இன்னிக்கி போதும், பத்து வருசமா திருந்தல, பாவம் படிச்சவரு வுட்டுடுங்க…

கோச்சடையான் படதுக்கு டைம் ஆச்சு, மாறன் கத்திட்டு இருக்காரு, சீக்கிரம் வாங்க என்று எமனை அழைத்து சென்றார்.

இதைப் பார்த்த மீதி ஆறு குடிகாரர்களுக்கும் சப்த நாடி அடங்கி, போதை இறங்கி இது நரகம் தான் என்று புரிந்து கொண்டார்கள்.

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

குறிப்பு: இது ஒரு கற்பனை கதை மட்டுமே. கதையில் வரும் கதா பத்திரங்கள், நிஜ உலகில் வலம் வந்துகொண்டு இருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.