இரவை புகைப் படம் எடுக்க,
முப்பதாம் மாடி ஜன்னலை திறந்தேன்
ஏப்ரல் குளிர் உடலை வருடியது
மகிழ்ச்சிக்கு வாசம் உண்டு என்று நாசி சொன்னது
பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு
இரவு ராணி வேகாஸ் தான் சரியான பொண்டாட்டி
இரவில் கண் சிமிட்டும் இவளைப் பார்த்து, சுடுகாட்டில்
செத்த பிணமும் குத்தாட்டம் போடுகிறது
டாலரில் ஆசையை எழுதி, ஸ்லாட் மெசினிக்கு
காதல் கடிதம் எழுதுவார்கள்
எல்லார் காதல் கடிதத்தையும் வாங்கிவிட்டு,
முத்ததத்தை மட்டும் சிலபேருக்கு கொடுப்பாள்
Toll Free நம்பர் தட்டினால், fixed ரேட்டில்
கால் கேர்ள் Calling Bell – லை தட்டுவாள்
இங்கு தன்மானம், மானத்தோடு சேர்ந்து கப்பல் ஏறும்
கப்பல், கேப்டனுடன் சேர்ந்து கடலில் முழுகும்
இங்கு தான் பிச்சைகாரன் ஆவது எப்படி என்று,
பணக்காரர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஜன்னலின் ஓரம் புகைப் படம் எடுக்க வைத்த கேமரா,
பேசாமல் வேகாஸ் ஒளியில் சரண் அடைந்தது.
Leave A Comment