குருக்குல சீடன் சதுர்வேதி கேள்வி: சுவாமிஜி, எப்போதும் பெண்களின் கூந்தல் மட்டும் கருமையாக இருப்பதேன் ? எனக்கு நரை முடி, என் பொண்டாட்டி, என் தலைய பார்த்து “Salt-Pepper Look”-னு கிண்டல் பண்றா ..நீங்கதான், என் தலைமுடி கருப்பாக இருக்க ஒரு வழி சொல்லணும்.

சுவாமி ஸ்ரீ.ஸ்ரீ.டர்: தலைக்கு கருப்பு டை அடிக்க வேண்டியதுதானே..சதுர்வேதி..?

சதுர்வேதி : வாரா வாரம் மென்ஸ் டை அடிக்கிறேன் சுவாமி. இருந்தாலும் வெள்ளை முடி வெளிய தெரியுது.

சுவாமி: நீ மொதல்ல, ஆம்பளைங்க போடுற டையை (Just for Men) தலைக்கு அடிக்கறதை நிப்பாட்டு. அதை அடிச்சே, 10 நாள்ல வெள்ளை முடி வெளியே தெரியும். அதை தூக்கி போட்டுட்டு பொம்பளைங்க போடுற கார்னியர் பார் வுமென் வாங்கி, தலையில் வார்னிஷ் மாதிரி அடி.

மகனே என்னை நம்பு, இது கும்முன்னு 50 நாள் நிக்கும்.

கம்பெனி காரனுங்க பிராடு பசங்க. ஆம்பளைங்க அழகு சாமான்லதான் ஏமாத்துவானுங்க. ஆம்பளைங்களும் இயற்கையிலேயே அழுகு. அதனால இதை கண்டுக்க மாட்டோம்ன்னு ஒரு புறம் இருந்தாலும், நாமளும், ஏன்டா போட்ட கலர் போச்சு ன்னு போய் கம்பெனிகாரனை கேட்கமாட்டோம்.

ஆனா, அதுவே பொம்பளைங்க அழகு சாமான்ல ஏமாத்தினா அவன் சட்டையை புடிச்சு கேட்பாங்கன்னு பயந்து ஒழுங்கா விப்பானுங்க. அவுங்க டை கலர், லைட்டா மாறினாவே போதும், ஊர் பூரா எல்லா பொம்பளைங்களும் போன் போட்டு சொல்லி, அவன் கடையை ஒரு மாசத்துல மூட வச்சுடுவாங்க.

என்னிக்காவது, எந்த ஆம்பளையாவது இன்னொரு ஆம்பளைகிட்ட நீ என்ன டை அடிக்கிற? நீ என்ன சோப்பு போடுறேன்னு கேட்டு இருப்பானா? சொல்லு ?

அவன் கேட்க மாட்டான், அவ்வளவு டீசென்டு…

அதனாலதான் மென்ஸ் ஒன்லி products, பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யாம 50 வருசத்துக்கு முன்னாடி வந்த அதே ஐட்டம் ஒரு புது டப்பாவில போட்டு விப்பானுங்க .

தல வாரர சீப்பு முதல், போட்டு குளிக்கிற சோப்பு வரை இந்த லட்சணம் தான்.

நாம, கல்லு மாதிரி லைப்பாய் சோப்பு போட்டு குளிப்போம்.

அவுங்களுக்கு சந்தனத்துல சோப்பு விப்பானுங்க.. ஜாஸ்மின் பூவை கலப்பானுங்க…

ஏன்? நம்ம உடலுக்கு சந்தனம் ஒத்துவராதா என்ன? இல்லை ஜாஸ்மின் பூ தான் புடிக்காதா? …பிராடு பசங்க.

நமக்கு சீக்காய் தான் ஷாம்பூ …அவுங்களுக்கு சில்க் ஷாம்பூ.

கேட்டா அவுங்களுக்கு சாப்ட் ஸ்கின்னு சொல்லுவாங்க. ஏன்? நாம என்ன காண்டாமிருகதுக்கா பொறந்தோம்?

அவுங்க ஷாம்பூ பாட்டில் மூடியை மேல வைப்பானுங்க, சைடுல வைப்பானுங்க, ஏன் கீழ கூட வைப்பானுங்க…

டிசைன் டிசைனா கிடைக்கும் …

ஆனா, நம்ம ஷாம்பு பாட்டில் ..சாராய பாட்டில் கலர்ல இருக்கும்….மூடி பனங்கா சைஸ் இருக்கும்…

நினைச்சாலே வேதனைடா சதுர்வேதி …

டேய் சதுர்வேதி, இன்னிக்கி சொல்லறேன் கேட்டுக்கோ ….

நீ இனிமே, எந்த அழகு சாமான் வாங்கினாலும், பொம்பள படம் போட்ட டப்பாவுல உள்ளது மட்டும் வாங்கு…எதுனாலும் சரி …

இது தான் 100 வருஷ அழகின் ரகசியம்.

மென்ஸ் ஒன்லி வாங்கினே …மகனே நீ மண்ணா போயிடுவே சதுர்வேதி…. மண்ணா போயிடுவே !!!

சதுர்வேதி : அடச் சே…இது தெரியாம இத்தனை நாள் நான் ஏமாந்துட்டேன் சுவாமி. இப்போ புரியுது ஏன் என் பொண்டாட்டி முடி மட்டும் கருப்புன்னு…அது சரி, Garnier For Women போட்டும் முடி கருப்பா ஆகலைனா ???

சுவாமி: அப்போ, மாடர்னா மொட்டை அடிசுக்கோ.

சதுர்வேதி: அது எப்படி சுவாமி மொட்டையை போய் மாடர்னா அடிக்கிறது?

சுவாமி: மொட்டை அடிச்சிட்டு, இதுதான் மார்டர்ன் சொல்றதுதான் அது.
வயசாகும் போது நம்மால முடியாத பல ஐட்டம் இருக்கும். முடிஞ்சதை செஞ்சிட்டு, அதையே மார்டர்ன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

சதுர்வேதி: மொட்டை ஒத்து வராது சுவாமி. நான் இதை ஆல்ரெடி ட்ரை பண்ணிட்டேன். மொட்டை அடிச்சா, உன் கூட வீட்டை விட்டு வெளிய வரமாட்டேன்னு சொல்றா… இதுக்கு வெள்ளை முடியே பரவாயில்லை.

சுவாமி: அப்போ, முடியை முழுசா வெள்ளையா வுட்டுடு. ஒன்னும் அடிக்கவேண்டாம்.

சதுர்வேதி: இதுவும் ஒத்து வராது சுவாமி. முழு வெள்ளையா வுட்டா, நீ கிழட்டு பயல் மாதிரி இருக்க, நான் வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்னு சொல்றா…வேற ஐடியா சொலுங்க..

சுவாமி:

அப்ப ஒரே வழிதான் இருக்கு. நேரா, Home Depot அல்லது RONA போ. Exterior Roof Section எங்கன்னு கேளு. ஒரு சந்து காமிப்பாங்க.

அங்க போய் அரை லிட்டர் PREMIUM PLUS ULTRA Exterior BLACK Enamel Paint வாங்கு.

வர வழியில, டாலர்-ராமா போய், ஒரு டாலர் சீனா brush வாங்கு.

கண்ணாடி முன்னாடி நின்னு அட்ராராமா, அட்ராராமானு, முன்னாடி நெத்திக்கு மேல ஆரம்பிச்சு, கழுத்துக்கு கீழ வரைக்கும் அடி.

ரைட் காது To லெப்ட் காது வரை கவர் பண்ணு. வழுக்கையா இருந்தாலும் பரவாயில்லை, முடியோட சேத்து அடி. வழுக்கை எது முடி எதுன்னு தெரிய கூடாது.

டை அடிக்கும் போது, டோட்டல் coverage ரொம்ப முக்கியம்.

அப்புறம், இந்த வாரம் சனி ஞாயிறு வெயிலாம். ஆனா குளிரும். அதனால, விண்டோ மட்டும் ஓபன் பண்ணி மண்டைய மட்டும், வெளிய உட்டு, வெயில்ல ஒரு மணி நேரம் காமி. மண்டை, பல பலன்னு கருப்பா மின்னும்.

அதுக்கப்புறம் உம்பொண்டாட்டி உன்தலைய ” Salt – Pepper Look – னு கிண்டல் பண்ண மாட்டா.

ஒரு மூணு வருசத்துக்கு உனக்கு எப்பவுமே “பெப்பர்” லுக் தான். வான்கூவரில் எவனுக்கும் அப்பிடி ஒரு மண்ட கலர் இருக்காது..

ஓடி போடா சதுர்வேதி …ஓடிப் போ…

கடைய சாத்திட போறான்…