தெகிடி விமர்சனம்:

Sridar.com Rating: 7 (பார்க்கவேண்டிய படம்)

பகடை, சூது, புரட்டு என்று பல அர்த்தங்களைக் கொண்ட சொல் தெகிடி. நமக்கே தெரியாமல் நம்மை ‘பகடை’ காயாய் பயன்படுத்தி விளையாடப்படும் சூது விளையாட்டே ‘தெகிடி’.

இது பார்க்கவேண்டிய படம்.

படத்தில் எனக்கு சில குறைகள் தெரிகின்றன. இருந்தாலும் நல்ல முயற்சி.

வழக்கம் போல் முழு கதையும் சொல்லமாட்டேன். ஒரு முறை ரசித்துப் பார்க்கலாம். “வல்லபா” என்பவர் யார் என்று தெரிய மீண்டும் இரண்டாவது முறை பார்க்கவேண்டும். எனக்கு அவர் யார் என்று தெரியும், யூகித்து விட்டேன்.

இந்த துப்பறியும் கதையை தேர்ந்து எடுத்த புதுமுக இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும். ஆனாலும் பெரிய ஆச்சரியத்தையோ அல்லது திருப்புமுனையோ இல்லாமல் போனது திரைக்கதையின் பலவீனம். இன்னும் யோசித்து கதைக்களம் அமைத்து இருக்கலாம்.

கிரிமினாலஜி படித்து முடித்ததும் வேலைக்குச் சேர்கிறார் ஹீரோ (அஷோக் செல்வன்). அவருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு புராஜெக்ட்டையும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டே வருகிறார். அதில் நாயகி மதுவைப் (ஜனனி) பற்றிய தகவல்களையும் அவருக்குத் தெரியாமல் சேகரித்துத் தரும்படி வெற்றியிடம் புராஜெக்ட் ஒன்று வருகிறது. அதை தேடும் போது முன்னால் துப்பு சேகரித்த அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். இவர்கள் ஏன், எதற்கு என்று ஹீரோ கண்டுபிடிக்கிறார். படத்தில் மொத்தம் 10 கதாபாத்திரங்கள்.

எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் ஹீரோ, ஒருவரை மட்டும் கண்டுபிடிக்காமல் இருப்பதாய் முடிகின்றது.

பிடித்தது:

தமிழ்சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு கதை.
எனக்கு டைட்டில் கார்டு போடும் அனிமேஷன் பிடித்து இருந்தது.
ஹீரோவின் நண்பன்
அலட்டல் இல்லாத நாயகி
படத்தின் முடிவு
பிடிக்காதது:

பாடல்கள் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
லோ பட்ஜெட் குரல்கள்.
துப்பு துலக்கும்போது அறிவியலை பயன்படுத்தாமல் போனது.
தேவை இல்லாத சண்டை
பேராசிரியர் சொல்லும் காரணம், கதைக்கு ஒத்துபோகவில்லை

ஓகே ரகம் :
பின்னணி இசை, ஹீரோவின் நடிப்பு, வில்லன்கள்
தயாரிப்பு : வேல் மீடியா
இயக்கம் : பி.ரமேஷ்
நடிப்பு : அஷோக் செல்வன், ஜனனி, ஜெயபிரகாஷ், காளி வெங்கட்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
எடிட்டிங் : லியோ ஜான் பால்

_________________________________________________