மற்றுமொரு விஜய் சேதுபதி கலக்கல் படம். நான் கதையை சொல்ல போவதில்லை.கண்டிப்பாக பாருங்கள்.
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால், படம் முழுக்க ஒரு கார் பேசுகிறது. பேச வைத்து இருக்கிறார் இயக்குனர். படத்தில், மொத்தம் 10 கதா பாத்திரங்கள்தான்.
உங்களுக்கு நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,அட்டக்கத்தி…போன்ற படங்கள் பிடிக்கும் என்றால்…..பண்ணையாரும் பத்மினியும் படமும் பிடித்தே ஆகவேண்டும்.
சுமார் தான், பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாரளமாக ஜில்லா, குல்லா என்று எதையாவது பார்த்து சந்தோசமாய் இருங்கள். சில பேருக்கு ரொம்ப பிடிக்கும் படம்.
சிலபேருக்கு பிடிக்காமலும் போகலாம். காரணம்- மிக யதார்த்தம் படம் முழுக்க நிரம்பி வழியும்.
படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில், உங்களுக்கு புரிந்துவிடும்.
பண்ணையார், பண்ணையார் துணைவி, அவர்களின் மகள், கார் டிரைவர், அவர் காதலி , கிளீனர் மற்றும் ஒரு பழைய Premier Padmini. படத்தில் எல்லாரும் வாழ்ந்து உள்ளனர், நடிக்கவில்லை.
அறிமுக இயக்குனர் எம்.அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஜெயபிரகாஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.
எனக்கு பிடித்தவை
– கதாநாயகியை, செத்த பிணத்தின் பிண்ணணியில் Camera Pan Shot செய்து அறிமுகம் செய்வது
– விஜய் சேதுபதியின் அப்பா, அவர் சாப்பிடும் போது மோர் மிளகாய் வைத்தாயா என்று மனைவியிடம் கேட்பது
– வைக்கோலில் காரை மறைப்பது
– ஒன்னும் உருப்படாத மருமகனை – டிவி முன் அமரவைத்து காட்சிப் படுத்தியது
– பண்ணையார், மனைவி படுக்கையறை காட்சிகள் ( படம் பாருங்கள் புரியும் )
– காருக்கு உயிர் கொடுத்து நடிக்கவைத்தது
– கடைசி ஒரு நிமிடம்
________________________________________________
Sridar.com Rating : 7.5
Directed by Arun Kumar
Starring Vijay Sethupathi, Jayaprakash, Iyshwarya Rajesh,Thulasi
Music by Justin Prabhakaran
Cinematography Gokul Benoy
Editing by A. Sreekar Prasad
Studio Magicbox Films
Language Tamil
aak gav may
Ek gav me yek pannaiaar ragu thaa thaaa!!!