ஜில்லா…. திரை விமர்சனம்.

என்னடா, படம் வந்து ஒரு மாசம் கழித்து விமர்சனம்னு யோசிக்கிறீங்களா?

சில படங்களை, கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால், பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காது. தள்ளி போகும்.
எப்படியாவது, பார்த்து விடவேண்டும் என்று நல்ல பிரிண்ட் கிடைக்கும் வரை பொறுத்து இருப்போம்.

ஜில்லா படத்தின், சூப்பர் பிரிண்ட் கிடைத்தது. டவுன்லோட் செய்ததை கிளிக் செய்ய மனம் வரவில்லை.
சில படங்களை, பார்கவே கூடாது என்று நினைப்போம். சூப்பர் பிரிண்ட் கிடைத்தாலும்… கூட பார்த்து விட கூடாது

தெரியா தனமாக, பார்த்தாலும் பார்த்து விட போகிறோம் என்ற பயத்தால் Delete செய்துவிட்டேன்.

ஜில்லா படத்துக்கு, பழைய 10 விஜய் படங்களில் இருந்து ரெண்டு ரெண்டு வரிகளை சேர்த்து எழுதினால் அதுவே கதை.

பழைய படங்களில் ரெண்டு வரியெல்லாம் எடுக்க தேவை இல்லை, ஒருவரி மட்டும் எடுத்தால் போதும் என்று நினைப்பார் போல.

இவருக்கு பின்னால் வந்த விஜய் சேதுபதி, காலேஜ் போய்விட்டார்.

இன்னும் விஜய்,

தொடபேட்டா ரோட்டுல – முட்ட பொரோட்டா லெவெலில்

மூணாம் கிளாஸ் கடைசி பெஞ்சில் பாட்டு பாடுகிறார்.

 

திறமைசாலி – ஒரு நல்ல கலைஞன் – வீணாகிறார்!
_________________________________________