வீட்டுக்கு வந்தவுடன், முதல் வேலையாக கூகிள் எர்த் ( Google Earth) திறந்து கிறீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து எங்கே உள்ளன என்று ஆராய ஆரம்பிதேன்.
உண்மைதான். Satellite View – on செய்து பார்த்ததில் கிரீன்லாந்து வெண்மையான நிறத்திலும்,ஐஸ்லாந்தின் பெரும் பகுதி பச்சை நிரந்திலும் இருந்தன. இந்த இரண்டு நில பரப்புகளைப் பற்றி கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த சனிக்கிழமைதான் ரெய்க்யவிக் நண்பரை மீண்டும் சந்திப்பேன். அதற்குள், எனக்கு அந்த இரண்டு நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
முதலில் கிரீன்லாந்து பற்றி பார்ப்போம்.
இது ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள ஒரு தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும், வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது.
நம்புங்கள் , உலகிலேயே, ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவே. இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57,000 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது. காரணம் குளிர். நீங்கள் நினைப்பது போல் குளிர் Weather Network சொல்லுவது போல் இல்லை.
உதாரணமாக, 10 டிகிரி செல்சியஸ் குளிர், 10 M / s காற்று வேகத்தில் -26 டிகிரி செல்சியஸ் போல் குளிரும். அதுவே, 20 M / s ஒரு காற்று வேகத்தில் -46 டிகிரி செல்சியஸ் போல் குளிரும். இதை Feels Like என்பார்கள்.
கிரீன்லாந்தில் எப்போதுமே Feelings தான்.
5 டிகிரி செல்சியஸ் குளிர். 30 M – 50 M / s காற்று வீசும். நீங்களே பெருக்கி பெரு மூச்சி விட்டுக்கொள்ளுங்கள்.
கிரீன்லாந்தின் மூதாதையர்கள் கனடாவில் இருந்து 4500 ஆண்டுகளுக்கு முன் அங்கு இடம் பெயர்ந்தவர்கள். இவர்கள் தான் ஆர்டிக் மக்கள். இவர்களை Norsemen என்றும் அழைக்கலாம். 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரீன்லாந்தின் யாரும் வசிக்காத தென் பகுதியில் குடியேறினர். இன்யூட் மக்கள் 13 ஆம் நூற்றாண்டில் வந்தார்கள்.
நோர்ஸ் காலனிகளில் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணாமல் போயின. 18 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்காண்டிநேவியா மற்றும் கிரீன்லாந்து மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு வாழ்ந்தனர்.
பிறகு டென்மார்க் இந்த இத்தீவின் மீது உரிமை கொண்டாடியது. தற்போது, கிறீன்லாந்து தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஒரு ஆட்சிப்பகுதி.
சுருக்கமாக சொன்னால், தற்போது கிரீன்லாந்தில் வசிப்பவர்கள், கனேடிய வந்தேறிகள். இது போதும் இப்போதைக்கு.
Norse Settlement – Original
Norse Settlement – Old Remnants
Present Green Land Settlements
சரி, இனி ஐஸ்லாந்துக்கு போவோம்.
ஐஸ்லாந்து, இது வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலுக்கு இடையே இருக்கும் ஒரு நார்டிக் தீவு நாடு.
அது என்ன நார்டிக் நாடு? எத்தனை நாடுகள் இதில் அடக்கம்?
டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஆலந்து தீவுகள், பரோயே தீவுகள், கிரீன்லாந்து – இந்த பகுதிகள் நார்டிக் நாடுகளில் அடக்கம். இது மொழி வாரியான கூட்டமைப்பு. இங்கு பேசப்படும் மொழிகள் : ஜெர்மன், டேனிஷ், நார்வீஜியன், பரோஇயம், கிரீன்லாந்தியம், ஐஸ்லாந்தியம், சாமி.
நீச்சல் நண்பர் பிறந்து வளர்ந்தது,ஐஸ்லாந்து. இந்த நாட்டின் ஜனத்தொகை வெறும் 321,857 மட்டுமே. அவர் பிறந்தது இதன் தலை நகரத்தில். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரம். பெயர் Reykjavík.
தென்மேற்கு பகுதியில் சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டின் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை வசிகிறார்கள். ஐஸ்லாந்து முழுவதும் எரிமலையால் ஆனது. பல பனி ஆறுகள் கடலில் பாய்கின்றன. இனம் புரியாத சூடு உள்ளே வெப்பத்தை கக்கிகொண்டே இருக்கும்.
இங்கு உலகிலேயே அழகான புள்வெளிகள், அழகிய ஆறுகள், பனி மலைகள் நிறைந்த நாடு. அழகு இங்கு தாண்டவம் ஆடும்.
இன்னும் சொல்லப் போனால், ஐஸ்லாந்து தான் இன்றைய புகைப்பட கலைஞர்களின் ஹாட் ஸ்பாட்.
எனக்கு பிடித்த ஐஸ்லாந்து புகைப்படகாரர் – ரய்மொ ஹூப்மன்
(Raymond Hoffmann). இவர் பிறந்தது ஜெர்மனி என்றாலும், ஐஸ்லாந்து அழகில் மயங்கி அங்கேயே குடி பெயர்ந்துவிட்டார்.
வருடா வருடம், ஆயிரக்கணக்கில், புகைப்பட வல்லுனர்கள் செல்லும் இடம்.
இது இயற்கை புகைப்பட ஆர்வலர்களின் “மெக்கா”.
முடிந்தால், கீழ் கண்ட இனைய தளத்தை சென்று பார்க்கவும்.
ஐஸ்லாந்தின் அழகு புரியும்.
http://www.iceland-photo.com/#!gallery
ஐஸ்லாந்து என்றால் – கொள்ளை அழுகு என்று அர்த்தம் !!!
இதை பார்த்த போது எனக்கு தோன்றியது ஓரே கேள்வி தான்.
சரி, இத்தனை அழகான நாட்டில் இருந்து ஏன் இந்தியா வந்தார்?
இந்த கேள்விக்கு விடை கிடைத்தால், பின் வரும் கேள்விகளையும் அத்தனையும் கேட்டுவிட வேண்டும்.
1. இவருக்கு இந்தியா எதனால் பிடித்தது?
2. ஏன், ஒரு Black ஒரு White கலவையுடன் குளத்தில் நீந்தி மகிழ்கிறார்?
3. ஏன் ஐஸ்லாந்து பிடிக்கவில்லை?
4. யாருக்காக இங்கே வாழ்கிறார்?
5. திரும்பி போவாரா, இல்லை இங்கயே மடிவாரா?
6. இவர் இறந்தால் இவரை பாடையில் தூக்க, ஐஸ் லாந்தில் இருந்து வருவார்களா?
எல்லா கேள்விகளையும் அவரிடம் அந்த சனிக் கிழமை, நீச்சல் குளத்தில் கேட்டுவிட வேண்டும்.
அந்த சனிக் கிழமையும் வந்தது.
என், கேள்விகளுக்கு பதில் மட்டும் கிடைக்கவில்லை.
ஞானமும் கிடைத்தது.
ஆர்டிக் செல்லவேண்டும் என்று தோன்றியது அன்று தான்.
( பயணம் தொடரும் )
Leave A Comment