ஏதோ அமெரிக்காவுல சூப்பர் பௌல்லாமே? அப்படீனா என்ன சேகரு?

அதுவா, நம்ம ஊரு மாரியம்மன் கோயில்ல பெரிய சட்டியில கூழ் ஊத்துவாங்கல்ல, அது மாதரி அமெரிக்காவுல, ஊரு ஊரா சேந்து பெரிய ஸ்டேடியத்துல கூடி, வருசத்துக்கு ஒரு முறை கூழ் ஊத்துவாங்க.

என்ன ஒரு வித்தியாசம். குடிக்க, ஒரு சின்ன கிண்ணம் கொடுப்பாங்க.

கிண்ணத்தை, பூசாரி தரையில் வச்சதும், அதை புடுங்க அடி தடி நடக்கும். தள்ளு முள்ளு நடக்கும். அடிபடும்.

ரொம்ப, அடி படாம இருக்க கவச குண்டலம் எல்லாம் போட்டுப்பாங்க. வெள்ளக்காரங்க வெவெரமானவுங்க.

அடி தடிக்கு, கருபன்களை உட்டு வேடிக்கை பாப்பானுக.

 

கூழ் கிண்ணம், ஒருத்தன் எடுத்துட்டு ஓடும் பொது, அவனை மறிச்சி புடிங்கி எடுத்துட்டு இன்னொருத்தன் ஓடுவான்.

கும்பலா, இப்பிடி கொஞ்சம் பேரு, அப்பிடி கொஞ்சம் பேரு கலர் சொக்கா போட்டுட்டு ஓடுவாங்க.

இதல கொடுமை என்னன்னா, கூழ் கிண்ணத்தை எடுத்து கால் கவட்டிகுள்ள உட்டு பின்னாடி போடுவாங்க.

இதை பாக்க எல்லா வெள்ளகாரங்களும் கூடி நின்னு ” கூல் கூல் – ரன் ரன்” சதம் போடுவாங்க.

 

கூழ் கிடைக்காதவங்க, வெளிய போய் பீர் அடிப்பாங்க.

அதை அடிச்சிட்டு சூப்பர் பௌல்னு சொல்வாங்க.

 

உலகத்துல, நெறைய பேருக்கு இவனுக எதுக்கு ஓடுராங்கன்னு தெரியாது. அப்பேற்பட்ட ஆட்டம்.

 

ஆனா, சில மேட்டுக்குடி தமிழனுக்கு எல்லாம் புரிஞ்சபடி, அடுத்தநாள் சூப்பர் பௌல் நீ பாத்தியா, நீ பாத்தியான்னு கேட்பானுங்க.

அப்பிடி இனி எவனாவது கேட்டா சொல்லு சேகரு, இது நம்ப ஊர்ல கிராமத்திலேயே நீ பாத்துடேன்னு.