8 டாலர் கொலை: இது தான் படத்தோட டைட்டில்.

இது ஒரு காதல் குடும்ப Crime Thriller கதை. குழந்தைகளும் பார்க்கலாம். U Certified. தைரியம் இருந்தால் மட்டும் மேலே படிக்கவும். மினிமம் மூணு முறை படிச்சாதான் கதை புரியும்.

கதை புரியாம வந்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம். எல்லா பதிலும் கதையில் இருக்கு. உலகத்தில் இந்த கதை இதுவரை எடுத்ததே இல்லை. இனி கதைக்கு போகலாம்.

படத்தின் கதை களம் வான்கூவர்.

ஹீரோ ஈஸ்ட் வான்கோவரில் Hastings தெருவில் வசிக்கும் ஒரு அழகான கனேடியன் Homeless Citizen.

அவனிடம் ஒரு weak சிக்னலுடன் டெய்லி use செய்யும் Blackberry Bold போன் இருக்கும். ஆனால் அதில் சிம் card போட மாட்டான்.

ஹீரோயின், Richmond நைட் மார்க்கெட்டில் பச்சை தண்ணீரில் Dumplings சுடும், வயசான Chinese பாட்டியின் சுமாரான பேத்தி. அவளுக்கு வலது கையில் ஆறு விரல் .
ரெண்டு சுண்டு விரல்.

ஹீரோயின் அப்பா, ஜப்பான் போரில் சண்டையிட்டு தோத்து போன கூர் மூக்கு கொரியன்.

1945–1949 ல்  நடந்த Chinese Civil வாரில், இந்த கூர் மூக்கு கொரியன் அப்பாவுக்கும், ஒரு சப்பை Chinese ராணுவ பொண்ணுக்கும் போர் நடக்கும் புகை மூட்டத்தில் ஒரு ராணுவ காதல் மலர்கிறது.

இங்க War Background ல் ஒரு காதல் டூயட் சாங் insert செய்யுறோம். பாவம், சண்டை போடும் போது காதல் கல்யாணம் நடந்ததால் அவுங்களுக்கு குழந்தை பிறக்கலை.

அந்த போரில், அவர் சப்பை மனைவி கொல்லப்பட, அவர் வேறு வழியில்லாமல் துணைக்கு Chinese மாமியாரோட பிஜி தீவுக்கு தப்பி படகில் போகிறார்.

அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கள்ள தோணியில் சென்று ரெண்டாவதா ஒரு பிரிட்டிஷ் பெண்ணை கல்யாணம் செஞ்சுகிறார்.

அவர்1970 ல கனடாவுக்கு குடியேறி, இங்கே நார்த் வான்கூவரில் ஒரு பொறை பிஸ்கட் கம்பெனி ஆரம்பிக்கிறார்.

கடையின் பெயர் “You Dine Before I Die”.

பேக்கிரி அடுப்பு போல அவர் பிசினஸ் சூடு புடிக்குது. 30 செக்கண்டுல அவர் பேக்கிரி காசுல எப்படி போக்கிரியா மாறினார் என்பதை காட்டுறோம்.

நான் ஒரு “பேக்கிரி போக்கிரி” என்று பஞ்ச் டைலாக் விடுவார்.

இவர் இப்ப மிலியனர்.

ஆனா, அவர் தம்பி Surrey Starbucks எதிரே கை ஏந்தும் ஒரு பிச்சைக்காரர்.

நைட் ஷிபிட்ல ஒரு கம்பெனியில் IT ப்ராஜெக்ட் மேனேஜரா வேலை பார்க்கிறார். அதன் ஹெட் ஆபீஸ் சென்னை அருகே பெரம்பூரில் பொறம்போக்கு நிலத்தில் உள்ளது.

இது படம் முடியும் வரை சொல்லமாட்டோம். படம் முடுஞ்ச பின்னும் சொல்லமாட்டோம். இந்த வெய்ட்டான Character ரை லைட்டா தான் படத்தில் டச் பண்ணுவோம்.

ஹீரோயினுக்கு மாநிறத்தில் ஒரு அழுக்கான தங்கச்சி. அவளுக்கு இடது கையில் ஆறு விரல். ரெண்டு கட்டை விரல்.

அவள் மஞ்சள் நிற Mexican ஒருவனை காதலிக்கிறாள். அவனுக்கு ஒரு கால் நொண்டி. இருவரும், சில்லிவாக் அருகே ஒரு உள்ள McDonald சில் சந்திக்கிறார்கள். கல்யாணம் செஞ்சிட்டு கொலம்பியா ஓடி போக திட்டம். அங்க காபி தோட்டத்தில் கஞ்சா பயிர் செஞ்சு பிழைக்க திட்டம் போடுகிறார்கள்.

பசியில் ஓரே ஒரு மெக் சிக்கென் ஆர்டர் செய்து, இருவரும் பிய்த்து சாப்பிடும் போது ஹீரோயினின் பணக்கார மில்லியனர் அப்பா, Take Away ஆர்டர் செய்யும் போது இவர்களை பார்த்து விடுகிறார்.

இதை தன் பஞ்சாபி வில்லன் நண்பனிடம் சொல்லி, தன் மகளின் Mexican காதலனை அலாஸ்காவில் போட்டுதள்ள சதி செய்கிறார். இவுங்க ரெண்டு பேரும் டிம் ஹோர்ட்டன்ஸ் டேபிள் கிழே குனிச்சு பார்த்து ப்ளூ பிரிண்ட் எடுத்து பிளான் செய்கிறார்கள்.

டேபிள் கீழ குனிச்சு பார்த்ததால், கடுப்பான ஒரு பிரெஞ்சு தம்பதி அவர்களை விரட்ட இருவரும் மீதி பிளானை டேபிள் மேல் போடுகிறார்கள். பஞ்சாபிதான் வில்லன். கூர் மூக்கு கொரியன்தான் கொலைக்கு financier.

பஞ்சாபி வில்லனுக்கு 8/ hour கூலி தருவதாக டீலிங் நடக்கிறது. மேக்சிகனை கொலை செய்ய ஒரு அமெரிக்கன் துப்பாக்கியும், ரெண்டு ஜெர்மன் தோட்டாவும் கொடுத்து அனுப்புகிறார், கூர் மூக்கு கொரியன் அப்பா.

பஞ்சாபி வில்லன் மெக்சிகனுக்கு அலாஸ்கா cruise ல் free டிக்கெட் புக் செய்து, அலாஸ்காவுக்கு கொலை செய்ய கூட்டிட்டு போறான்.

அலாஸ்காவில் இறங்கியதும், குளிரில் கை நடுங்கியதால் மெக்சிகனை துப்பாக்கியால் சுடாமல், குத்தி கொல்ல கத்தியை எடுக்கும் போது, பஞ்சாபிக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது. அந்த பிளாஷ் back 2 செகண்டில் காமிக்கிறோம். பஞ்சாபி மெக்சிகனை ” நீ தப்பி ஓடிவிடு” என்று சொல்கிறான்.

அதற்கு பதில் ஒரு பனிக்கரடியை கொன்று அதன் அருகே மேசிக்கன் பனியன் ஜட்டியை தூக்கி வீசிவிட்டு, இந்தியன் போலிசுக்கு 100 நம்பர் டயல் செய்து 9 நிமிடம் பேசுகிறான் . மெக்சிக்கன் கொலையை பற்றி சொல்கிறான்.

உடனே டி.ஜி.பி. ஐந்துமுகம், நாலு ஏட்டுகளுடன் அலாஸ்கா வர US விசா apply செய்கிறார். செத்த கரடிதான் மெக்சிகன் என்ற மகா பொய்யை வழக்கம் போல் போலீஸ் கண்டுபிடிக்க திணறுகிறது.

இந்த செத்த நியூசை சன் டிவியில் பார்த்த ஹீரோயினின் அழுக்கு தங்கச்சி, உடனே சீக்காய் போட்டு குளிச்சிட்டு அவள் அக்காகிட்ட காதலனை கொன்னவனை கண்டுபிடிச்சு கொடு ‘டீ’, இல்லை உன் கூட “டா” என்று Facebook Status மெசேஜ் ஒன்னை பப்ளிக்கில போட்டு பீலிங் bad னு கண்ணீர் வுட்டு சண்டை போட்டு அழுவுறா.

உடனே ஹீரோயின் குள்ளிக்காம அதுக்கு லைக் ஒன்னு போட்டுட்டு, homeless ஹீரோவுக்கு அந்த status சை ஷேர் செய்து அந்த கத்தியை கண்டுபுடுச்சி கொண்டு வாடான்னு, Looking for a ரிசல்ட் னு smiley போட்டு சொல்றா.

இதை free WiFi யில் Fake ID யில் log in செய்து பார்க்கும் ஹீரோ, உண்மையை கண்டுபிடிக்க அலாஸ்கா போக முடிவு செய்யுறான். அவன் அந்த Status க்கு லைக் போடலை.

ஏன்னு ஹீரோயின் கேட்க, கண்டுபிடிச்சிட்டு வந்து லைக் போடுறேன். அதுவரைக்கும் நீ எந்த status யும் மாத்தாதே என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஹீரோயின் தன் கனடியன் citizen ஷிப் application னை வாபஸ் வாங்குறா. காரணம் அவள் status மாறினா ஹீரோ கொலை செஞ்ச உண்மையை கண்டுபிடிக்காம போககூடும். இது படத்தின் செண்டிமெண்ட் டச்.

ஹீரோ அலாஸ்கா போகனும், ஆனா அவனிடம் காசில்லை, தவிக்கிறான். காதலிக்கிட்டே face புக் messenger ல் காசு கேட்டான். அவ offline னு போட்டுட்டு போயிட்டா.

அவகிட்ட கோச்சிகிட்டு, வேலை தேடி கொக்கிட்லம் (Port Coquitlam) வரான். இங்க ஒரு சோக பாடல், வாழ்க்கை தத்துவத்தோட அவரை பாட வைக்கிறோம்.

படத்தில, இங்க ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.

அவுனுக்கு எதிர்பாராத விதமா, மில்லியனர் கொரியனின் பிச்சைக்கார தம்பி ஹெல்ப் செய்து அதே பஞ்சாபி வில்லனிடம் ஒரு வேலை வாங்கி தருகிறான்.

ஹீரோ, பஞ்சாபி வில்லன்கிட்ட அடியாளா சேர்ந்து உருளை கிழங்கு மூட்டை தூக்கி அலாஸ்கா போக காசு சேர்க்க ஆரம்பிக்கிறான்.

அவனுக்கு பஞ்சாபி வில்லன் 6 டாலர்/hour illegal ரேட் கொடுக்க, ஹீரோ இந்த ரேட் எனக்கு படியாதுன்னு சொல்றான்.

எட்டு டாலர் per hour வேணும் ….நீ இந்த ரேட் கொடுக்கலை உன்னை நான் கொலை செய்வேன்னு கெஞ்சறான் ஹீரோ.

இந்த காசு சேர்த்துதான் நான் அலாஸ்காவுக்கு ஒரு கொலையை கண்டுபிடிக்க போகணும்னு சொல்ல… மக்கு பஞ்சாபிக்கு மண்டையில் பொறி தட்டல…ஏன்னு audience யோசிக்கும் போது.

இன்டரவல் பிரேக் உடுறோம். பட சுவாரிசியமா போறதுல யாருமே வெளிய போக மாட்டாங்க.

அப்ப பஞ்சாபி வில்லன் toilet போவார். அங்க பத்து நிமிஷம் கேமரா டோருக்கு இந்த பக்கம் வெயிட் செய்ற மாதிரி shot வைக்கிறோம்.

Toilet Door காமிப்போம், அப்புறம் கடிகாரம் காமிம்போம். இப்பிடியே 10 நிமிஷம் மாறி மாறி காமிப்போம்.

பஞ்சாபி வில்லனும் toilet போகும் போது யோசிச்சு, hero மேல் பாவப்பட்டு 8 டாலர்/hour ரேட் கொடுக்க ஒத்துக்குறான்.

பஞ்சாபி வில்லனா இருந்தாலும் இரக்க குணம் உள்ளவன். இருந்தாலும் இவன்தான் படத்தின் வில்லன்.

இதை மறைஞ்சு நின்னு பார்த்த ஹீரோயினுக்கு பஞ்சாபியின் இரக்க குணத்தினால் அவன் மேல காதல் வந்து அவனுக்கு Whats App ல் ” I love youடா Lovable இரக்கமுள்ள Idioடூ ” னு மெசேஜ் அனுப்புறா.

பஞ்சாபிக்கு இங்கிலீஷ் தெரியாது. அதை ஹீரோ கிட்ட காட்டி படிக்கச் சொல்றான். ஹீரோவுக்கு இங்கிலீஷ் தெரியும் ஆனா தமிழ் தெரியாது. ஹீரோ பாதி படிச்சதும், மீதியை புரிஞ்சிக்கிட்ட பஞ்சாபி, இந்த idiot காதலுக்கு ஓகே சொல்லறார்.

கடுப்பான ஹீரோ ஹீரோயினின் அழுக்கு தங்கச்சிக்கு இந்த மேட்டரை prepaid மொபிலில் இருந்து மெசேஜ் செய்றான்.

அதுக்கு அந்த அழுக்கு தங்கச்சி, போனா போகுது, கோவப்படாதே, இனி நாம ரெண்டு பேரும்தான் கதையில் தனியா இருக்கிறோம். நாம ஏன் கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு போஸ்ட் paid மொபிலில் இருந்து ஹீரோவுக்கு மெசேஜ் அனுப்புறா.

இங்க ஒரு டபுள் டூயட் சீன். எந்த படத்திலேயும் எவனும் வச்சதில்லை.

ஹீரோவும் ஹீரோயின் தங்கச்சியும் ஒரு டூயட் Fraser ஆத்துக்கு அந்த பக்கம் பாடுறாங்க. அந்த பாட்டுக்கு கரைக்கு இந்த பக்கம் பஞ்சாபியும், ஹீரோயினும் ஆடுறாங்க.

ஹீரோவும் ஹீரோயின் தங்கச்சியும் பாடி ஆடுறத, கூர் மூக்கு கொரியன் அப்பா Skytrain ல டிக்கெட் வாங்காம போகும்போது பார்க்கிறார். அவர் ஏன் பஞ்சாபியும் ஹீரோயினும் ஆடுறதை பாக்கலைன்னு ஆடியன்ஸ் கேள்வி கேட்கலாம்…

ஏன்னா train ஜன்னல் வழியே ஒரு பக்க ஆறு மட்டும்தான் தெரியும். இது ஒரு லாஜிக் உள்ள train shot.

உடனே ஹீரோவை கொலை செய்ய முடிவு செய்கிறார் மில்லியனர் கொரியன் அப்பா.

உடனே, அவர் பஞ்சாபிக்கு போன் செய்து ஹீரோவை கொலை செய்ய ஒரு அமெரிக்கன் துப்பாக்கியும், ரெண்டு ஜெர்மன் தோட்டாவும் கொடுத்து அனுப்புகிறார்.

இதுவரை கதையில் ரெண்டு துப்பாக்கி, நாலு குண்டு காமிக்கிறோம்.

இதுக்கும் 8/hour ரேட் பிக்ஸ் செய்றார். ப்ளூ ப்ரின்ட்க்கு பதில் இப்ப ஆரஞ்சு பிரிண்ட் ரெடி செய்றாங்க.

இங்க தான் படத்தோட மிகப் பெரிய ட்விஸ்ட் வைக்கிறோம்.

ஹீரோவுக்கு தெரியாது ஹீரோயினும், அவ அழுக்கு தங்கச்சியும் டபுள் ரோல் என்று.

ஹீரோயினுக்கு தெரியாது ஹீரோவும், பிச்சைகார Starbucks மில்லியனரின் தம்பியும் டபுள் ரோல் என்று.

இந்த நாலு கேரக்டர்களுக்கும் தெரியாது கூர் மூக்கு கொரியனும், பஞ்சாபி வில்லனும் டபுள் ரோல் என்று.

இந்த உண்மை தெரிஞ்ச ஒரே ஆள், பச்சை தண்ணீரில் dumplings சுடும் Chinese பாட்டி.

அதுக்கு கண் ஊமை, காது தெரியாது. வாயாலதான் பாக்கும்.

ஷங்கர் ‘ஐ’ படத்துல வர மாதிர, பயங்கரமான ஒரு terror கேரக்டர்.

90 வயசு, ஆனா அதுக்கு 6 pack பாடி.

படத்தில அடுத்த 48 மணி நேரத்தில் ரெண்டாவது ஒரு கொலை நடக்குது.

இதுக்கு யார் 8 டாலர் / hour கொடுக்குறாங்க?
யார் இந்த கொலையை செய்றா?
யார் இதில் கொல்லப்படுறாங்க?
யார் இதை செய்ய சொல்றாங்க?
அந்த ரெண்டு துப்பாக்கியும், நாலு குண்டு என்ன ஆச்சு ?

என்பதின் முடிச்சியை எல்லோரும் ஆவலுடன் எதிர்பாக்கும் போது தொடரும் in Part 2 – “இது ஒன்பது டாலர் கொலைன்னு” டைட்டில் கார்டு போட்டு படத்தை முடிக்கிறோம்.

உண்மையில் முதல் கொலையில் ஒரு பனிக்கரடி சாவுது. இரண்டாவது பார்ட்டில் நடக்கும் கொலையில் ஒரு நொண்டி கனடியன் கயோட்டி தான் சாவுது. இந்த கரடியும், கயோட்டியும் இதுக்கு முன்னாடி, முன் ஜென்மத்தில் குதிரையா வாழ்ந்தவங்க. பனிக்கரடி தான் husband, கயோட்டி தான் அதன் wife .

குதிரை லாயத்தின் ஓனர்தான் first பார்ட்டில் வர கூர் மூக்கு கொரியன் அப்பன். அவன் தான் குதிரைக்கு புல் கொடுக்காம குதிரை பால் கறந்து வித்தான். அந்த பாலை வாங்கி தான் வில்லன் பஞ்சாபியின் அப்பா , வில்லன் பஞ்சாபி கேரக்டரை வளர்த்தாரு. அதே பண்ணையில் வளந்த பன்னிக்குட்டி தான் அந்த மெக்சிகன். அந்த நன்றியில் தான் மேசிக்கனை டபுள் ரோல் பஞ்சாபி வில்லன் கொலை செய்யாமல் விட்டான்.

இந்த செத்த கரடியும், கயோட்டியும் சேர்ந்து, கொரியனை பழி வாங்குறது தான் பார்ட் 3.

அதுல கரடிக்கு டபுள் ரோல். கயோட்டிகும் டபுள் ரோல்.
பாட்டிக்கு மூணு கண். ஒரு gun. மொத்தம் ரெண்டு தோட்டாக்கள்.

அதுதான் பார்ட் 3 – “பாத்து செய்யும் பத்து டாலர் கொலை”

————————————————————————–​​​​​​​​​​​​​​

இந்த கதையை 41 நிமிஷத்தில் Sky train மற்றும் பஸ்பயணத்தில் குளிரில் நின்னுகிட்டே எழுதினேன். பார்ட் 3 , ரூமில் ஹீட்டர் போட்டு, உட்காந்து எழுதுவேன்.

செத்தீங்க….சாரி…. செத்தாங்க கதையில்.

இப்படிக்கு

திரைப்பட கதாசிரியர்
ஸ்ரீதர் ஏழுமலை