நல்ல மூளையை படைத்த கடவுள்,அதை
குரங்கின் மண்டைக்குள் வைத்து விடுகிறார்

நல்ல அழகினை கொடுத்த கடவுள், அதை
கழுதையின் மூளையுடன் பிறக்க வைக்கின்றார்

நல்ல மூளையையும், அழகினையும் சேர்த்து படைத்த கடவுள்,
அதை பணக்கார வீட்டு நாயாக பிறக்க வைக்கின்றார்

பணக்கார வீட்டு நாயுக்கு, பையித்திகார எஜமானி
பிஸ்கட் போட வைக்கின்றார்

பணத்தோடு பிறக்க வேண்டியவனை
ஓடி உழைக்க சொல்கின்றார்

ஓடி உழைக்காத சில பேருக்கு
செல்வந்தர் பட்டம் கொடுகின்றார்

சில மனிதர்களை நாயாகவும்
சில நாய்களை மனிதனாகவும்
பிறக்க வைக்கின்றார்.

கடவுளே, உன்னிடம் ஒரே ஒரு கேள்வி
ஏன் எது நடந்தாலும் உன்னை மட்டும் நாங்கள் குறை சொல்கின்றோம்?

கடவுள் அவன் முன் தோன்றினார்

 

ஹ்ம்ம்..மடையா

நான் பிறக்க வைத்த எல்லா ஜீவா ராசிகளும்
கேள்வி கேட்காமலும், ஆசை படாமலும் வாழ்ந்து சாகின்றன

கேள்வி கேட்கும் வாயையும், ஆசை கொண்ட மனதையும்
ஆறு அறிவுடன் சேர்த்து மனிதனாய் படைத்ததுதான்
நான் செய்த ஒரே தவறு.

கேள்வி கேட்காமலும், ஆசை படாமலும் வாழ்ந்து பார்
கடவுள் கடவுளாக தெரிவார்.

எனவே கோவிலுக்கு வரும் போது
உன் ஆசையையும், கேள்வியையும்
என்னிடம் கேட்காதே !!!
நான் தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன்
நீ பழகும் மனிதன், நாய், கழுதை மற்றும் குரங்கிலும் இருப்பேன்

என்னை மனதினில் மட்டும் நினை
உன் ஆசைகளுக்கும், கேள்விகளுக்கும் விடை தானே கிடைக்கும் !!!

ஓகே ஓகே. கடவுள். தேங்க்ஸ். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.
என் கண்ணை திறந்து விட்டாய் கடவுளே.
போய்விட வேண்டாம்.
அதற்கு முன் எனக்கு ஒரே ஒரு கேள்வி?
எனக்கு வரும் ஆசையை உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்டால் நடக்கும்?