இன்று நான் வேலை செய்யும் அலுவகத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஒரு துப்பாக்கி சூடு நடந்தது.
பயப்பட வேண்டாம். சுட்டவனை காணவில்லை. சுடப்பட்டவர் உயிர் தப்பினார்.வீட்டுக்கு வரும் போது பார்த்தேன். சுமார் 10-15 காவல் வண்டிகள் ரோட்டை மடக்கி ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள்.

 

ஒரு தோணல்:

 

சரி அது என்ன ஒரு துப்பாக்கி மூணு குண்டுகள் ?

 

சொல்கிறேன்.

 

இது குண்டு நம்பர் 1

இது கனடாவில் நடந்தது. போலீஸ் என்ன செய்யும்?

சுட்டவன், சுடபட்டவனுக்கு தெரிந்தவன். ரெண்டு பேரும் தான் சேர்ந்து உணவகத்திற்கு போனார்கள்.

இருப்பினும் சுமார் மூன்று மாதம் எல்லா தடயங்களும் சேகரித்து, தக்க ஆதாரம் இருந்தால் மட்டும் சுட்டவரை சந்திக்க அனுமதி கோருவார்கள்.

அவன் ஓகே, என்று சொன்னால் மட்டும் அவனை சந்தித்து ஒரு கேள்வியை கேட்பார்கள்.

ஏன் சுட்டாய் ? என்று தானே நினைக்கறீர்கள்?

இல்லை. சுடும் போது உனக்கு அடிப் பட்டதா? நீ இப்பொது நலமா?

இல்லை என்றால் அவனை மருத்துவ மனையில் அனுமதித்து பின்பு புலன் விசாரணையை தொடங்குவார்கள்.

அவ்வளவு தனி மனித சுதந்திரம்.

 

இது குண்டு நம்பர் 2

இதுவே அமெரிக்காவாக இருந்தால்…

சுட்டவனை பத்து நிமிடத்தில் பிடித்து விடுவார்கள்.

இல்லை பத்து வருடம் கழித்தாவது தவம் இருந்து பிடிப்பார்கள்.

அவ்வளவு நாட்டு பற்று.

 

இது குண்டு நம்பர் 3

இதுவே இந்தியாவாக இருந்தால்

சுடுவது முன்னமே தெரியும்.
சுட்டப்பின், பக்கத்துக்கு மேசையில் இட்லி சாப்பிட்டவனை பிடித்து உள்ளே போட்டு விட்டு, அவனுக்கு பரோட்டாவும் சிங்கள் டீயும் வாங்கி கொடுத்து சுட்டவனிடம் பேரம் பேசுவார்கள்.

அவ்வளவு …………………….என்னத்த சொல்ல?

ஒரு துப்பாக்கி …மூணு குண்டுகள்