19 December!!
இன்று கிருஷ் பர்த்டே. நான் கொண்டாடும் ஒரே தினம் !
2000 வருடம், பெங்களூர் இஸ்கான் கிருஷ்ணன் கோவிலின் உள்ளேயே ஒரு அமெரிக்க கம்பெனி ” lord Krishna’ என்னும் அனிமேஷன் படம் எடுக்க விழைந்தது. கிருஷ்ண லீலைகள் தான் படம். ஒரு எட்டு பேர் செலக்ட் செய்து கிருஷ்ணரை படத்துக்காக, பல முகங்களை 3d யில் வடிவமைக்க சொன்னது. அதில் நானும் ஒருவன். மாய்ந்து மாய்ந்து வரைந்தோம்.
அமெரிக்க கம்பெனி தனியாக ஒரு இடம் பார்க்கும் வரை எனக்கு கோவிலின் பின்னே உள்ள மாளிகையில் தான் வேலை.
கோவிலில் தினமும் சாமி தரிசனம். பின் வேலை. மாளிகையில் குட்டி சாமிகளின் லீலைகள் தரிசனம். அது தனிக் கதை ( இன்று கிருஷ்ண ஜெயந்தி).
கிருஷ்ணனை தெரிந்து கொள்ள பகவத் கீதையை படிக்கச் சொனார்கள். பல சாமியார்கள் பாடம் எடுத்தார்கள்.
200 மேற்பட்ட, குட்டி கிருஷ்ணரை வரைந்தோம். டிசம்பர் மாதம் முடியும் முன் அதில் ஒரு குட்டி கிருஷ்ணன் மாடலை செலக்ட் செய்தார்கள்.
படத்திற்கு கதை எழுதியவர் பாரூக் டொண்டி. Producer: சேகர் கபூர் மற்றும் அபிஷேக் பச்சன்.( அப்போது அவர் ஐஸ்வரியம் இல்லாத வெறும் பச்சன்)
மூன்று பேரும், நோபெல் லாராட் நெய்பாலுடன் ஸ்டுடியோவுக்கு வந்து குட்டி கிருஷ்ணனை பார்த்தார்கள்.
பிடித்து போனது. செலக்ட் செய்த குட்டி கிருஷ்ணனுக்கு குண்டு மண்டை, முட்டை கண்கள், குறும்பு பார்வை, சிரித்த முகம். படம் முழுக்க குட்டி ஜட்டி தான்.
Dec 19, என்னக்கொரு மகன் பிறந்தான். என் மனைவி இட்ட பெயர் தான் கிருஷ்.
அவன் பிறக்கும் போது தொட்டிலில் பார்த்தேன்….
குண்டு மண்டை, முட்டை கண்கள்….குழந்தை சிரித்தது…
ஹாப்பி பர்த்டே கிருஷ்!!!!!
Leave A Comment