இந்த குட்டையில் கல் எறிந்தவர்கள் ……
போன வாரம் வீட்டுக்கு வந்த நண்பர் இரண்டு உடற் பயிற்சியை சொல்லிக் கொடுத்தார். இதை செய்யும் போது நான் மூன்றாவது பயிற்சியை கண்டுப் பிடித்தேன்.
1. இது கடினம். குப்புற படுத்து காலையும் கையையும் அகட்டி, தரையில் இருந்து 10 இன்ச் அளவில் உடம்பை சமமாக அப்படியே ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும். மரண வலி. இதை வெறும் வயிறில் சாப்பிடாமல் செய்ய வேண்டுமாம். இதை செய்தால் கைகள் வலு பெறுமாம்.
2. இது மிக கடினம். ஒரு புத்தகத்தை ஒரு கையின் கீழ் மட்டும் வைத்து சம நிலை இல்லாமல் உடலை அப்படியே நிறுத்தி, பின்பு புத்தகத்தை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்ற வேண்டும். பயங்கர வலி. இதையும் உணவருந்தாமல் வெறும் வயிறில் செய்ய வேண்டும். இதை செய்தால் வயிற்று பகுதி வலு பெறுமாம். உடல் மெருகேறும்.
3. முதல் இரண்டை செய்ய முடியாமல் போனால் இதை செய்யலாம். இது மிக சுலபம். முதல் இரண்டை செய்ய முற்பட்டபோது நானே கண்டுபிடித்தது. குப்பற படுக்காமல் அப்பிடியே மல்லாக படுத்து, இரண்டு கண்களையும் டைட்டா மூடி, மூச்சை சீராக பத்து முறை விட வேண்டும்.
இதை செய்யும் முன் வென்பொங்கலில் கொஞ்சம் நெய்யை விட்டு, மேலே முந்திரியை தூவி இரண்டு ப்ளேட் அடிக்கவும். கண்கள் கிறங்கி , ஒரு குட்டி தூக்கம் கிடைக்கும்.
மேல் சொன்ன இரண்டு கடும் உடற்பயிற்சிகள் தராத மன சாந்தியை மூன்றாவது பயிற்சி கண்டிப்பாக தரும்.
உடல் வலிமையை விட மன சாந்தியே முக்கியம்.
Leave A Comment