சுட்டெரித்த சூரியனால் வாடிய மேகம்
தன் கரு நீல இதழ்களை மூடி
“ஓ”- என்று கண்ணீர் விட்டு அழுகின்றன !

இதை கண்டு வருந்திய மேபிள் மரங்களும் ..தன்
அரஞ்சு இலை உதிர்த்து விதவை கோலமாய் ரோட்டில்
வறண்டு நின்று ஒப்பாரி வைக்கின்றன !

இதுவரை பசும் தோல் போர்த்தி நடித்த மலைகளும்
வெள்ளிப் பனி மூடி தூர நின்று பல் இளிக்கின்றன !
சுகமாய் சுற்றி திரிந்த சீகுல் பறவைகளும்
அவசரமாய் இனம் பெருக்க ஊளையிட்டு இடம் தேடுகின்றன!

வெட்ட வெளி கூத்துக்கள் முடிந்து , Barbeque-களை பரன் ஏத்தி
எங்கும் அரை டிரௌசர்களுடன் அலைந்த , எல்லா அல்லைகைகளும்
முழு சொக்காய் போட்டு , மூக்கு வரை முகமூடி அணிந்து ,
Weather Nework- கே கதி என்று வீட்டுக்குள் முடங்கின !

குளிருக்கு நம் நாக்கு நமக்கே தெரியாமல் மனைவியிடம்
வடையும் , வெங்காய பஜ்ஜியும் கேட்டிட – பூரி கட்டை பறந்து வர
“நமக்கு நாமே ” திட்டத்தில் கிடைத்த சிங்கள் டீயுடன்
தறி கேட்டு எகிறிய Heater பில்லை கண்கள் ஏங்கி பார்க்கின்றன!

Part Time சூரியனோடு , Full time மொக்கைகளாய்
Volunteer வேலை பார்க்கும் நிலவின் வெளிச்சத்தில்
பனி படர்ந்த சன்னலோரம் அரை கை Sweaters- போட்டு , Back Home
இந்திய நினைவுகளை மனம் அசை போடுகின்ற!

பனி படலம் ரோட்டில் படிய , அதன் மேல் கார்கள் வழுக்கி ஓட ,
வேகுன்டேழுந்த அம்மணிகள் சோக கீதம் பாட ,
தெறிக்கும் நீர் துளிகள் தளம் போட
Viper -கள் ஒரு சேர நடனம் ஆட

சில் என்று பெய்யும் மழையோடு தொடங்கியது
Vancouver – ல்
இது ஒரு மழைக்காலம் !