வெளிநாட்டு வாழ்க்கை:

புதிய வீட்டுக்கு இன்டர்நெட் connection செய்ய வந்தவர் இந்த வீட்டில் wiring சரில்லை என்றார்.

நான் சொன்னேன், பழைய வீட்டில் நன்றாக இருந்தது என்றேன். அவர் சொன்னார் -அது பில்டரை பொருத்தது.

சரி எங்கு இதற்கு முன் இருந்தாய் என்றார். இடத்தை சொன்னேன்.

Hey buddy, நானும் அங்கு தான் குடியிருக்கிறேன் என்றார். என் வீட்டு நம்பரை சொன்னேன். அவர் வீட்டு நம்பரை சொன்னார்.

அவர் சொன்ன நம்பர் என் எதிர் வீடு.

எதிர் வீட்டுகாரர்.!!!!!

அட, ஒரு வாருசமா அங்க இருந்தும் நம்ப எதிர் வீட்ட்ல இருந்தவரை தெரியாமல் போய்விட்டதே என்ற அங்கலாய்ப்பு.

இப்போ ஞாபகம் லேசா வந்தது. ஒன்று அல்லது இருமுறை பார்த்து உள்ளேன்.

தூரத்தில் அவர் அழகாய் இருந்தார். நேரில் பூசணிக்காய்க்கு தாடி வைத்தது போல் இருந்தார்.

இதுவே இந்தியாகவாக இருந்திருந்தால்:

1. அவர் மனைவி கடைசியாய் வாங்கிய கம்மல், எத்தனை சவரன் என்பது எனக்கு தெரிந்து இருக்கும்.

2. அவங்க பையன் quartely examla கணக்குல எத்தனை மார்க் வாங்கியுள்ளான் என்பதும் தெரிந்து இருக்கும்.

# எதிர்த்தவீடுக்காரனை மூஞ்ச பார்த்தும் கண்டுபிடிக்க முடியாம அட்ரெஸ் வச்சு கண்டுபிடிப்பது தான் வெளி நாடு வாழ்க்கை.