வெள்ளி கிழமை காலை எழுந்தேன்

பாடரில் ஒரு மணி நேரம் தவித்தேன்
கிழக்கு நோக்கி காரை விரட்டினேன் ..

போகும் வழியில் உடுப்பியில் பாவ் பாஜி சுவைத்தேன்
Idaho மலைகளை கடந்தேன்..மலைத்தேன்
செந்நிற பள்ளத்தாக்கை அடைந்தேன்
அன்று முழு நிலவு ..இரவு ஒன்பது மணி

இருட்டும் பள்ளத்தாக்கில் வெண் நிற அருவி கொட்டுவதை
உச்சி முனையில் நின்று ரசித்தேன், நிழற் படம் எடுத்தேன்
டெலஸ்கோப் பொருத்தி நட்சத்திரம் ஒளிர்வதை கண்டேன்

மீண்டும் தென் கிழக்கே ஊர்தியை விரட்டினேன்
ஆயிரத்தி நூறு என்று தன் கணக்கை காட்டிய ஓடோ மீட்டரை
அதற்கு பின் ஓடாமல் நிறுத்தினேன்

இரவு 12 …

உயிர் போகும் பசியில் சீனா காரன் சமைத்த
செத்த மீனை, என் உயிர் மீண்டு வர முழுசாய் முழுங்கினேன்
தூங்கும் முன் ஒரு Blog எழுதினேன்..

கலையில் Tread மில்லில் ஓடிக்கொண்டே பல் துலைக்கினேன்
பசுமை பள்ளத்தாக்கில் 3000 அடி பள்ளத்தில்
Snake river ஓடுவதை மேல் நின்று வியந்தேன்
அணையை கடந்து மணல் மேட்டினை அடைந்தேன்..

ஆற்றினை கடந்தேன்..வாட்டும் வெயிலில்
இசை ஞானி செவிக்கு குளிர்ச்சியை தர
புல்மன் புல்வெளிகளில் இரண்டு மான்கள்
சட் என்று நின்று என்னை வெறித்து பார்த்தன..

ஏன் என்று அதை கேட்பதற்குள் கோதுமை
வயல்களில் துள்ளி குதித்து ஓட்டம் பிடித்தன

எங்கும் பசுமை…பச்சை என்றால் இதுவென
வயல்வெளிகள் படம் எடுத்த
என் Camera-வுக்கு பாடம் எடுத்தன …
ஆயிரம் படம் எடுக்க மைல் கணக்காய் ஓ(ட்)டினேன்

எத்தனை பண்ணை வீடுகள் …எத்தனை குதிரை லாயங்கள்
எத்தனை ஆடுகள், மாடுகள் …
மனிதன் நகரத்தை ஆண்டால்..மிருகங்கள் இயற்கைகை ஆளுகின்றன

Steptoe Butte குன்றினை அந்தி சாயும் இருட்டில்
ஒற்றை அடி பாதையில் உயிரை கார் பிடியில் கொடுத்து
ஊர்ந்து, ஊர்ந்து உந்தி உச்சி மேட்டை அடைந்தேன்
காண கிடைத்த காட்சியை
எழுத்தில் விவரிக்க முடியாமல் தவிக்கிறேன் …

ஜன்னலை திறக்கவில்லை ஆனால் காற்று வந்தது

பல அப்பா டக்கர் புகைப்பட நண்பர்களுடன் அளவளாவினேன்
சோர்ந்து படுக்கும் முன் மீண்டும் சீனாகாரனை சரண் அடைந்தேன்
இம்முறை செத்த மீனுக்கு பதில், செத்த கோழியுடன் வந்தான்
பசி மயக்கத்தில், ஏப்பம் கண்களில் நீராய் வந்தது

காலையில் மஞ்சள் வெயில், நான்கு மணிக்கு குன்றில் அடிக்கும்
அவ்வழகை காண மூன்று மணிக்கு தனியாய்
கசக்கும் கொலம்பியன் கொட்டை வடிநீருடன்
கொட்டும் பணியில் அரக்கை சட்டையுடன்
வீரத்துடன் சென்ற என்னை பத்து பதினைந்து மான்கள்
ரோடின் குறுக்கே நின்று காலை வணக்கம் சொல்லின

மஞ்சள் வெயில் புல்வெளிகளில் படருவதை பார்கையில்
பரவசம் அடைந்தேன் .. இரண்டு கண்கள் பத்தவில்லை
கண்களுக்கு Topup செய்ய, கடவுளை அழைத்தேன் …
பதில் இல்லை

வாய்ஸ் மெயில் கொடுத்து விட்டு
மீண்டும் ஓட்டினேன் …Lewiston நோக்கி

3000 அடி பள்ளத்தாக்கில் ஓடி உருண்டு
இசை இயக்குனர் நண்பரை சந்தித்தேன் …
அவருடன் இசையை விவாதித்தேன்
அவரின் இசை ஸ்டுடியோவை படம் பிடித்தேன்

பள்ளத்தாக்கிலும் பஞ்சாபி பட்டர் சிக்கனை வித்தான்
Goodu Goodu என்று அங்கிலத்தை கொலை செய்து வித்தான்

மீண்டும் ஓட்டினேன் ..காடு மலை என Idaho
என்னை கவர்ந்தது…வேகமாய் வீடு வர விரட்டிய என்னை
காட்டு மான் குறுக்கே புகுந்து தடுத்தது
மில்லி செகண்டில் தப்பித்து ஓடியது !!

மூன்று நாளில் 2317 கிலோமீட்டர்
26 மணி நேரம் கைகளில் கார் ஸ்டீரிங்
8 மணி நேரம் கையில் கேமரா
2 மணி நேரம் Tread மில்லில் ஓட்டம்
2 Blog, 1 வெப்சைட் design
3 Status
4 இமேஜ் uploads
214 likes
5 முறை tank full
மீதம் உள்ள நேரத்தில் தூக்கம்

வரும் போது 2 சாம்பார் வடை
ஒரு பூரி மசால்

ஓய்ந்து கட்டிலில் சாய்ந்தேன்
உறங்கினேன்…எல்லா காட்சிகளும் மீண்டும் கண் முன் ஓடின
டெலிபோன் ஒலித்தது
என் வாய்ஸ் மெயில் பார்த்துவிட்டு
கடவுள் தான் Unknown நம்பரில் அழைத்தார்

நான் அழைக்கும் போது ஏன் எடுக்கவில்லை என்று கேட்டேன்
மூன்று நாட்களாக உன்னிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன் என்றார்
புரியவில்லை என்றேன் !!

நீ கண்ட இயற்கையே கடவுள் என்று சொல்லி முடித்தார் !
தூங்கும் போது பேசியதால் கனவாக வேண்டுமானால் இருக்கலாம்
அனால் கடவுள் பொய் பேச மாட்டார்

கடவுளை தேடுவதை விட இயற்கையை தேடுங்கள்
இயற்கையை ரசிக்காதவன் – முழு கடவுளை பார்க்காதவன் !