நம்மூர் கிராமத்தில ஒரு பத்து ரூபா கொடுத்தா தலை முடியை சுத்தி சுத்தி ரசிச்சு வெட்டுவான். ஸ்டைல் செலக்ட் பண்ண மூணு சீனா போஸ்டர் வச்சு இருப்பார். மொக்க blade போட்டு ரத்தம் வர சொரண்டினாலும் ஒரு இன்பம். குளிக்கிற சோப்புல வெள்ளை நுரை வர வச்சு மெய் மறந்து ஷேவ் செய்யும் ரசனையே தனி. மூக்குல கத்திய விட்டு ஆராய்ச்சி எல்லாம் நடக்கும். கடைசியா படிகார கல்ல வச்சு பாலீஷ் போட்டு அசத்துவார். நம்ப அசந்தா, சிங்கள் டீ கொடுத்து நிமித்தி அனுப்புவார். அந்த அரை மணி நேரத்தில் தின பூமியில் இருந்து தின மணி வரை பல படித்த பண்டிதர்கள் நமக்கு ஓசியில் பாடம் எடுப்பார்கள். வீட்டுக்கு வரும் பொது – கிசு கிசு முதல், ஒபாமா ஆம்லெட் சாபிட்டது வரை தெரிந்த விஞ்ஞானியாய் திரும்பி வருவோம்.
இங்கே என்னடானா செம்மறி ஆட்டுக்கு முடி வெட்டுற மாதரி நம்பர் போட்டு வெட்டி விட்டுட்டு, அஞ்சு நிமிஷத்தில் எந்திரி என்கிறான். சைடு மூணு, மேல நாலுன்னு !!
போங்கடா !!! நீங்களும் நீங்க வெட்டி முறிக்கறதும்!
கடனுக்கு புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேர் வைக்க கூடாது !
எதை செஞ்சாலும் ரசனையா செய்ய தமிழனா விட்டா உலகத்திலே வேற ஆள் இல்லை.
Leave A Comment