சீத்தாபதி:

குருவே, உலகில் நான் இன்னும் கற்க வேண்டியது எவ்வளவு உள்ளது?

சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர்:

கிறிஸ்து பிறப்பதற்கு முன், கி.மு 1025 ல் இருந்து தமிழன் இட்லி சுட்டு சாப்பிட்டு வருகிறான் என்று வரலாற்று குறிப்புக்கள் சொல்கின்றன. சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரவர்மன் காலத்திலும் இட்லி இருந்ததாக கர்நாடக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 17 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் சாஸ்திரம், மச்ச புராணத்திலும் இட்லி பற்றிய மேற்கோள் உள்ளது.

ஆனால், இட்லி Soft டாக இருக்க, ஒரு டம்பளர் அரிசிக்கு எத்தனை கப் உளுந்து போடவேண்டும் என்பதை இன்னும் கூட தமிழர்களால் Standardize செய்ய முடியவில்லை. இன்றுவரை பூப் போன்ற இட்லி சுடுவது ஒரு தேவ கலை.

வெறும் இரண்டு மாவுகளை மிக்ஸ் செய்து வேக வைக்கும் நாலு இன்ச் இட்லியில் உள்ள சூட்சமத்தை, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியால் சரியாக கற்க முடியாதபோது, பஞ்ச பூதம் அடங்கிய இப்பேருலகில் நீ கற்க வேண்டியது எவ்வளவு உள்ளது என்று ஒரு மூலையில் அமர்ந்து மசால் தோசை தின்று விட்டு யோசித்து பார் புரியும் சீத்தாபதி.

 

“இட்’ is not just ‘லி’ – இது ஒரு தேவ கலை.
 என்னும் புத்தகத்தில் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ டர் .